7-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


இதன் முந்தைய பகுதி…

sujatha-collage

சுஜாதாவின் முன்னுரை…
இந்த புத்தகத்தில் உள்ள ஓரங்க நாடகங்கள் பெரும்பாலும் நடிப்பதைவிட படிப்பதற்கு அதிகம் பொருத்தமானவை. இதில் நிறைய பரீட்சை பண்ணலாம். உதாரணம் ‘மாறுதல் வரும்‘. எனக்குப் பிடித்த சில ஆங்கில நாடகங்களையும் தமிழில் தந்திருக்கிறேன். உதாரணம் ‘சரளா‘, ‘முயல்‘ போன்றவை. நாடகத்தின் நாடியைப் பிடித்துப் பார்ப்பது மிகக் கடினம். அதன் வீச்சு விரிவானது. அது ஓவியக் கலை போல. அழகாக ரவிவர்மா போல யதார்த்தமான உண்மையான சித்திரங்களும் வரையலாம், கண்டின்ஸ்கி போல நவீன சித்திரங்களும் வரையலாம். இவைகளுக்கிடையே இம்ப்ரெஷனிஸ்ட், க்யூபிஸ்ட் என்பது போல் வெவ்வேறு  யதார்த்த நிலை நாடகங்களும் விளங்கும்.
தமிழ் நாடகத்தின் ஆரம்பங்கள் சிலப்பதிகாரத்திலிருந்து வருகின்றன. சங்க இலக்கியங்களையே நாடகங்களின் பேச்சுகள், Dramatic Monologues என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு பாடலும் ஒரு சிறு நாடகத்தின் காட்சி போலத்தான் உள்ளது. இவ்வகையிலான பாரம்பரியத்திலிருந்து புறப்பட்ட தமிழ் நாடகம் எங்கோ வழி தவறிவிட்டது.
ஓவர் டு அ.ராமசாமி… 
அப்பாவியைத்தான் தன்னால் ஏமாற்ற முடியும் என்ற நிலையில் மணி அய்யர்- லட்சுமி தம்பதியின் ஒரு நாள் வருமானத்தை மிரட்டி வாங்கிப் போகும் இளைஞனின் நியாயத்தைச் சொல்லும் வந்தவன் நாடகத்தின் மேடை ஏற்றத்தின் வழியே,ஒருநாள் வருமானத்தையும் வாட்சையும் மிரட்டி வாங்கிச் செல்லும் இளைஞனிடமும் கரிசனம் காட்டும் மணி அய்யரின் அப்பாவித்தனத்தையும் ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டும் சகிப்புத்தன்மையும் சொல்லி அந்தப் பாத்திரத்தை உயர்த்திக் காட்ட முடியும். மாறுதல் நாடகத்தை மேடை ஏற்றும் போது விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலையோடு பிடிவாதம் செய்யும் சுந்தரமூர்த்தியைப் போன்ற உயர்-நடுத்தர-வர்க்கத்து முந்தைய தலைமுறை மனிதர்களைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.
எழுத்தாளன் என்ற அடையாளத்தோடும் மரியாதையை விட்டுத் தராமலேயே தமிழ் சினிமாவில் எழுத்தாளன் செயல்பட முடியும்; நான் அப்படித் தான் செயல்பட்டேன் என்ற தன்னிலை விளக்கத்தைத் தரவே சுஜாதா கதை கேளு பெண்ணே கதை கேளு நாடகத்தை எழுதினார் என உணர்த்த முடியும். வெளிப்படையாக இருத்தல் X அறியாமையில் இருத்தல் என்ற முரணில் தான் இந்தியப் பெண்களின் வாழ்க்கை நகரும் விதத்தைச் சொல்லவே சரளா நாடகம் எழுதப்பட்டுள்ளது என்பதைச் சரியான ஒரு இயக்குநர் மேடை ஏற்றத்தின் போது காட்ட முடியும்.
கோயிலில் கிடக்கும் பெட்டி உண்டாக்கும் மர்மம் சார்ந்த முடிச்சை மையப்படுத்தும் நாடக நிகழ்வின் வழியே சாமிநாத குருக்களின் இயலாமையை- அவரைச் சூழ உள்ள மனிதர்களிடம் படும்பாட்டை – சாஸ்திரங்களைத் தவற விட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை சொல்ல முடியும். இந்திய ஆண்கள் வாரிசு வேண்டும் என மறுமணம் செய்யத் தயங்காத போதும், இந்தியப் பெண்கள் எந்தக் கணத்திலும் புருஷன் இருக்க இன்னொரு ஆணைத் திருமணம் செய்வது பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை எனக் காட்டுவதன் மூலம் இந்தியக் குடும்ப அமைப்பின் பெருமையையும், அதைக் காப்பதில் பெண்களின் பங்கு மாற்றமில்லாமல் இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்; சொல்லுவதோடு இந்த உயர்வான குணம் காப்பாற்றப்பட வேண்டும் எனப் பார்வையாளர்களிடம் வலியுறுத்த முடியும்.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s