6-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


இதன் முந்தைய பகுதி…

Sujatha_16

சுஜாதாவின் முன்னுரை…

‘கடவுள் வந்திருந்தார்’, ‘அடிமைகள்’, ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, ‘ஊஞ்சல்’, ‘அன்புள்ள அப்பா’, ‘சிங்கமையங்கார் பேரன்’, ‘பாரதி இருந்த வீடு’ இவைகள் அனைத்தையும் பூர்ணம் அவர்கள் பல நகரங்களில் பல மேடைகளில் சிறப்பாக நடித்துக் காட்டினார். ‘கடவுள் வந்திருந்தார்’ அமெச்சூர் குழுவினரால் உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் மேடையேற்றப்பட்டுள்ளது.

பூர்ணம் விஸ்வநாதன் பற்றி பாரதி மணி கூறுகிறார்…

Bharati Mani

எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய நாடகங்களில், சென்னையில் இவர் நடித்த பாத்திரங்களை தில்லியில் நான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு!

தில்லியில் சுஜாதாவுக்கு பூர்ணம் விசுவநாதனை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அடியேனையே சாரும். அப்போது அவர்கள் நட்பு சென்னை வந்தபிறகு ஒரு நாடகக் கூட்டணியாக மாறி இந்த அளவு விகசிக்குமென்று மூவருமே நினைத்ததில்லை.

கையில் லக்கேஜ் எதுவும் இல்லாமல் மேலுலகம் போன பூர்ணம், ஊர்தியை விட்டு இறங்கியதுமே, வழியில் தென்பட்ட தேவதையிடம், ‘அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆமாம், மேலே போன சுஜாதா எழுதித் தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் போயிருக்கிறார்.

ஓவர் டு அ.ராமசாமி… 

தன் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் தான் உண்டாகி இருப்பதாகப் பொய் சொல்லி உதவும்படி டாக்டரிடம் கேட்ட ஜெயந்திக்கு, ஏன் நீங்களே மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற யோசனையைச் சொல்லும் டாக்டர், அவளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளைஞனையும் அடையாளம் காட்டுகிறார். புருஷனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பி அவளுக்கு நல்லது செய்ய நினைத்த டாக்டரையே சரியில்லாத டாக்டர் எனச் சொல்லி விட்டுக் கிளம்புகிறாள் மறுமணம் நாடகத்தில் வரும் ஜெயந்தி.

துப்பறியும் கதைகளில் இருக்கும் ஆர்வத்தூண்டல் உத்தியைப் பயன்படுத்தினால் நாடக நிகழ்வின் போது பார்வையாளர்களின் கவனம் ஓர்மையுடன் இருக்கும் என்பது உண்மை தான். நாடகத்தின் தொடக்கத்தில் போடும் முடிச்சை அல்லது ரகசியத்தைத் திடீர்த் திருப்பங்களின் வழி நகர்த்திச் சென்று எதிர்பாராத முடிவைத் தருவது பார்வையாளர்களுக்குச் சுவாரசியத்தைக் கூட்டும் உத்தி எனக் கருதும் சுஜாதா அதனை எல்லா ஓரங்க நாடகங்களிலும் பயன்படுத்தியுள்ளார். எதிர்பாராத முடிவைத் தருவது துப்பறியும் நாடகங்களின் இயல்பு மட்டும் அல்ல; வெகுமக்கள் ரசனையைக் கட்டமைக்கும் வாராந்திரப் பத்திரிகைகளின் வியாபார உத்தியும் கூட. இந்த உத்தியைத் தவறாது தனது ஓரங்க நாடகங்களில் பயன்படுத்தியுள்ளார் சுஜாதா. எனவே அவரது ஓரங்க நாடகங்களின் நோக்கம், ஒரு பக்கக் கதைகளை வாசித்து முடித்தவுடன் ஏற்படும் உணர்வை உண்டாக்குவதே என்ற விமரிசனத்தைச் சொல்லி விடலாம். அப்படிச் சொல்லி ஒதுங்கிக் கொள்வது, அவரது நாடகங்களின் நோக்கத்தை முழுமையாகப் புரிந்து கொண்டதாக ஆகாது. ஏனென்றால் ஒரு நாடகப் பிரதி வாசிக்கும் போது கிடைக்கும் உணர்வையும் தாண்டி மேடை ஏற்றத்தின் போது வேறு வகை உணர்வை உண்டாக்கும் சாத்தியங்கள் கொண்டது. அதனைக் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டியது பொறுப்புள்ள இயக்குநரின் பணி. அப்பணியைத் தேர்ந்த நடிகரின் உதவியோடு வெளிக்கொண்டு வரும் இயக்குநர் நாடகாசிரியரின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துபவனாக ஆகி விடுவான். வாசிப்பின் போது ரகசிய அவிழ்ப்பு என்ற உத்தியைக் கொண்டதாகத் தோன்றும் சுஜாதாவின் ஓரங்க நாடகங்கள் அனைத்துக்குமே அதனைத் தாண்டிய நோக்கங்கள் இருந்துள்ளன.
மேடையேற்றத்தை மனதில் கொண்டு வாசிக்கும்போது அதனைச் சுலபமாக உணர முடியும். படிப்பு சரியில்லை என்றால் அவனிடம் எந்தத்திறமையும் இருக்காது என நம்பும் பெற்றோர்களின் மனநிலைக்குக் குட்டு வைக்கும் விதமாக கொலை நாடகம் எழுதப்பட்டுள்ளது என்பதை மேடை ஏற்றுவதன் மூலம் ஓர் இயக்குநர் பார்வையாளர்களுக்குக் காட்ட முடியும். பிரயாணம் நாடகத்தை மேடை ஏற்றும் போது, திருடன் பாலாவின் அம்மா ஹார்ட் அட்டாக்கில் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அவனது நண்பன் முத்து சொல்ல, அதற்கான பணத்தைத் தான் தருவதாகச் சொல்லிக் கணபதி அய்யர் பையைத் திறந்து எடுத்துத் தர முயலும் செயலே அவனது மனத்தை மாற்றி நல்லவனாக ஆக்கியது எனக் காட்ட முடியும்.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s