காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு!!


“காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ஒன்றை திரு. ரா. கணபதி அவர்கள் அற்புதமாக விவரித்துள்ளார்கள். இதைப் புரிந்துகொண்டால் பகவான் தன்னை உணர இரண்டை எப்படிப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரியும்.”

“தீபாவளி சமயம். எனக்கு என்னமோ பகீரதனை விட, நரகாசுரனே உயர்ந்தவன். ரொம்ப பிடிச்சிருக்கு அவனை என்று ஆரம்பித்தார் பரமாச்சார்யாள்.”

கூடியிருந்த அனைவருக்கும் பெரியவா என்ன சொல்லப் போறா என்பதில் ஆர்வம் கூடியது. பகீரதனையும் நரகாசுரனையும் compare பண்ணிப் பேசப் போறாங்கறது மட்டும் புரிந்தது.

“பகீரதன் பெரிய தபஸ்வி. அவன் பட்ட கஷ்டங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையால்தான் கங்கை நம் பாரதத்துக்குக் கிடைத்தது. ஆனால் நரகாசுரனோ பெரிய கொடுமைகள் மாபாதகங்கள் பலவும் செய்தவன். என்னடா. இப்பேர்ப்பட்ட பாபியை நான் உசந்தவன்னு சொல்றேன்னு பார்க்கிறேளா.”

“தபஸ், பித்ரு பக்தி, சிரத்தை இதுக்கெல்லாம் பகீரதனைப் போற்ற வேண்டும். ஆனாலும் Comparitiveஆ அந்த அசுரன் லோகம் பூராவும் சந்தோஷமா தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடணும்னு வரம் வாங்கித் தரும் அளவுக்கு அந்திம காலத்திலே அடியோட சேஞ்ச் ஆனதுக்கு அவனை ஜாஸ்தி கொண்டாடணும் இல்லையா. இரண்டும் ஒன்றுதான்னு  எடுத்துண்டா இருவரையும் compare பண்ண முடியாது.”

பெரியவா என்ன சொல்ல வரா என்று எவருக்குமே கொஞ்ச நாழி புரியலே..

“உத்தேசித்துப் பண்ணினாலும் உத்தேசிக்காமல் பண்ணினாலும் பண்ணியவருக்கு நன்றி சொல்றதுதான் நம் பண்பாடு. இல்லையா. . . அப்படிப் பார்த்தா நரகாசுரனுக்குத்தான் அதிகமா நாம் நன்றி சொல்லணும். கடன் பட்டா திருப்பிக் கொடுக்கணும். இல்லாட்டா சட்டப்படி குற்றம். தானதர்மம் பண்றது அப்படி இல்லே. பண்ணினா புண்யம். பண்ணாட்டா பாவம் ஆகாது. குற்றம்னு யாரும் கேஸ் போட முடியாது. அதே மாதிரிதான் பகீரதனுக்கு நன்றி சொன்னா புண்யம், சொல்லாட்டா குத்தம் இல்லே. அது Optional ஆனால் நரகாசுரனுக்கு நன்றி சொல்ல வேண்டியது Obligatary. அவசியம்.”

“பகீரதன் கங்கையை பாரதத்தில் ஓடவிட்டது உபகாரம்தான். ஆனால் அவன் அனைத்து ஜனங்களையும் உத்தேசித்துக் கொண்டு வரலே. பாதாள லோகத்திலே பலவருஷமா கிடந்த தன்னோட பித்ருக்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவே கொண்டு வந்தான். இதைத் தன்னலம்னுகூடச் சொல்லலாம். பகீரதன் செஞ்சது incidental, intentional இல்லே.”

“ஆனால், நரகாசுரனோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோட சுதர்ஸன சக்ரத்தாலே கழுத்து அறுபட்டு ப்ராணன் போற சமயத்திலேகூடத் தன்னோட க்ஷேமத்தையோ தன்னுடைய பந்துக்கள், பித்ருக்கள் க்ஷேமத்தையோ நினைக்காமல் லோக க்ஷேமத்துக்காகத் தன்னோட இறந்த நாளை என்னென்னிக்கும் கங்கையோட ஸாந்நித்யம் எல்லாத் தீர்த்தத்திலேயும் பூர்ணிமா கிடைச்சு, ஜனங்களோட அனைத்துப் பாவங்களும் பூர்ணமா போகணும்னு ப்ரார்த்தனை செய்து வரன் பெற்றான். அன்னிக்கு ஸ்னானம் பண்ற எந்த ஜலமானாலும் அதிலே கங்கை ஆவிர்பவித்துவிடுகிறாள். கங்கா ஸ்னானம் ஆகி ஆனந்தமா பண்டிகைக் கொண்டாடும் எல்லோருமே மோக்ஷம் பெற வேண்டும் என்று வரம் பெற்றான். ஆனால் தனக்கு மோக்ஷம் வேணும்னோ அல்லது ஒசத்தியான வேறு ஜென்மம் வேணும்னோ கேட்கவே இல்லை.”

“பகீரதன் கொண்டுவந்த கங்கையை நாம் வடதேசம் தேடிச் சென்றுதான் ஸ்னானம் பண்ண வேண்டும். ஆனா நரகாசுரனோ லோக க்ஷேமத்துக்காகத் தீபாவளியன்று எல்லார் வீட்டிலுமே கங்கை ப்ரவாஹிக்க வேண்டும். அந்த நாளில் எல்லா ஜலமும் கங்கையாக ஆகி எல்லா ஜனங்களும் புண்யத்தைப் பெற வேண்டும் என்று ப்ரார்த்தித்தானே அவன் உசத்தியா! அல்லது பகீரதன் உசத்தியா! ஆக நாம் நரகாசுரனுக்குத்தான் அதிகம் நன்றி செலுத்த வேண்டும். தீபாவளி அன்று அவனை ஜாஸ்தியா பூஷிச்சு ஸ்தோத்ரம் பண்ணணும்.” சொல்லி முடித்தார் பரமாச்சார்யாள்.

Varagooran Narayanan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s