4-வானமெனும் வீதியிலே – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

ஒன்று

Vanamenum_Veedhiyile_4
சம்பவங்கள் நிறைந்த அந்தக் காலை கோபால்ட் நீலத்தில் வெடித்தது. ‘சூரியன் தன் பொற்கிரணங்களை வீசினான்’ என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆனால் வீசியதென்னவோ நிஜம். ஒரு கோபமில்லாத ஆரஞ்சிலிருந்து கோபமுள்ள வெள்ளிவட்டமாக மாறிக் கொண்டிருந்தது. பார்க்கில் புல்வெளிகள் இரவில் நடந்த அக்கிரமங்களைக் கண்ணீராகச் சிந்திக் கொண்டிருந்தன. பால் வண்டிகள் திரும்பிக் கொண்டிருந்தன. அவற்றினுள் கண்ணாடி பாட்டில்கள் கலகலப்பாக பாஸ்டியருக்கு வந்தனம் சொல்லிக் கொண்டிருந்தன. தேகப் பயிற்சியை நாடி சில மத்திய வயதுக்காரர்கள் கான்வாஸ் ஷூக்களில் தத்தம் மனைவிகளிடமிருந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கோ அறுபத்து மூன்று பேர்கள் ஒரு விமானப் பயணத்திற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் டீ சாப்பிட்டார்கள். சிலர் மெல்லிய போர்வையில் மனமில்லாது சல்லாபங்களிருந்து விடுபட்டுப் பல் தேய்த்தார்கள். சிலர் ‘பிசினெஸ்’ காகிதங்களைச் சேகரித்து ரெக்சீன் பெட்டிகளில் அடைத்தார்கள். சிலர் டெலிபோன் பேசினார்கள்.

அப்பாஸ்! அந்தச் சிறிய ஓட்டல் அறையில் அப்பாஸ் மிகவும் சஞ்சலத்தில் இருந்தான். டெலிபோனுக்கு எதிரே பதற்றத்துடன் காத்திருந்தான். அவனுக்கு பத்தொன்பது வயதிருக்கும். மிகவும் ஒல்லியாகவும், மிகவும் தலைமுடியுடனும் இருந்தான். தலைமுடியில்லை. தலைமூடி!  அவன் நகங்கள் கடிக்கப்பட்டுச் சிதிலமாக இருந்தன. நீலக்கட்டங்கள் போட்ட சட்டையும், அதன் மேல் தொளதொளப்பாக  ஒரு தோல் ஜாக்கெட்டும் அணிந்திருந்தான். பட்டை பட்டையாக பாக்கெட் ஒட்ட வைக்கப்பட்ட வெளிர்நீல பாண்ட். முரட்டுத் தோலில் ஷூக்கள். அந்த அறை அவன் அவசரத்தைக் காட்டியது. மேஜை மேல் இரண்டு ப்ளேன் டிக்கட்டுகள் கிடந்தன. ஒரு பெட்டி திறந்திருந்தது. அதில் ஒரு துப்பாக்கி பளபளத்தது. டெலிபோன் ஒலிக்கவில்லை. கதவு தட்டப்பட்டது.

-தொடரும்…

One thought on “4-வானமெனும் வீதியிலே – சுஜாதா

  1. RAVI June 14, 2014 at 9:25 AM Reply

    வானமெனும் வீதியிலே – முழுதாக உள்ளதா ? நன்றி !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s