சரவணபவன் சாம்பார் – கீதா ஆச்சல்


சரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார் நீங்கள் பல வகை சாம்பார் சாப்பிட்டு இருப்பிங்க…ஒரு முறை இந்த சாம்பாரை சாப்பிட்டால் திரும்ப திரும்ப அதே சாம்பாரைதான் செய்வோம்…அவ்வளவு அருமையாக ருசியாக இருக்கும். சரவணபவன் ஹோட்டல் சாம்பார் மிகவும் பிரபலம். அதிலும் இந்த சாம்பாரை சாதத்துடன் சாப்பிடுவதை விட இட்லி, தோசை, பொங்கலுடன் போன்ற சிற்றுண்டியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த சாம்பாரில் வேண்டுமானால் கத்திரிக்காய், முருங்கைக்காய், செள செள போன்றவை சேர்த்து சமைக்கலாம். எங்களுடைய வீட்டில் அனைவருக்கும் சரவணபவன் ஹோட்டல் சாப்பாடு என்றால் மிகவும் விருப்பம். அதிலும் இந்த சாம்பாரின் சுவையே தனி தான்… இந்த சாம்பார் செய்வது மிகவும் எளிது. அதனுடைய செய்முறையை இப்பொழுது பார்ப்போம் வாங்க..

. சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்

தேவையான பொருட்கள்
: * துவரம் பருப்பு – 1 கப் *

வெங்காயம் – 1

* தக்காளி – 1 *

உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை :

* தக்காளி – 1 *

பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி

* மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

* மிளகாய் தூள் – 1 தே.கரண்டி *

தனியா தூள் – 1 தே.கரண்டி *

தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி

கடைசியில் தாளித்து சேர்க்க : * எண்ணெய் – 2 தே.கரண்டி

* கடுகு – 1/4 தே.கரண்டி *

வெந்தயம் – 1/4 தே.கரண்டி

* சீரகம் – 1/2 தே.கரண்டி *

உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி *

வெங்காயம் – 1 *

கருவேப்பில்லை – 4 இலை *

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2

கடைசியில் தூவ : * பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்

செய்முறை :

வெங்காயம் + தக்காளியை பொடியாக வெட்டி கொள்ளவும். முதலில் கொடுத்துள்ள துவரம் பருப்பு + 3 கப் தண்ணீர் + வெங்காயம் + தக்காளியை பிரஷர் குக்கரில் போட்டு 3 – 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

. விசில் அடங்கியதும் பிரஷர் குக்கரைத் திறந்து வெந்த பருப்பு +வெங்காயம், தக்காளியை நன்றாக மசித்து கொள்ளவும். அத்துடன் அரைத்த கலவை + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் + சீரகம் +உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் + கருவேப்பிலை + பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

இப்பொழுது வதக்கிய பொருட்களை, கொதிக்கின்ற சாம்பாரில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி கிளறிவிடவும். இந்த சாம்பாரை இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபன் ஐட்டம்ஸுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

— geethaachal at gmail dot com

Varagooran Narayanan

8 thoughts on “சரவணபவன் சாம்பார் – கீதா ஆச்சல்

 1. வீட்டில் குறித்துக் கொண்டார்கள்… இன்றே செய்து பார்த்து விடுவோம்… நன்றி…

  • BaalHanuman October 20, 2013 at 3:06 PM Reply

   இந்த சாம்பாருக்கு எதையும் வறுத்து அரைக்கத் தேவையில்லை. செய்வதும் சுலபம். செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு ஹோட்டல் டேஸ்ட் கிடைக்கும். சரவண பவன் டேஸ்ட்டில் இருக்கும்.

   • vidya (@kalkirasikai) July 18, 2016 at 9:43 AM

    நிஜமாகவே சரவணபவன் சுவை வருகிறது. நீங்கள் சொல்வதுபோல் வறுத்து அரைக்கத் தேவை இல்லை என்பதுதான் ஸ்பெஷல் 😀

 2. shanthy shivakumar October 18, 2013 at 6:41 AM Reply

  nangalum try panrom

 3. Varagooran Narayanan October 20, 2013 at 11:29 AM Reply

  இதில் புளி சேர்க்க மறந்து விட்டேன். ஒரு சின்ன எலுமிச்சை அளவு,கரைப்பதற்கு.

  • BaalHanuman October 20, 2013 at 3:14 PM Reply

   துவரம்பருப்புடன் தக்காளி வெங்காயம் சேர்த்து வேக வைப்பது புதுமையாக உள்ளது.

 4. rajalakshmi January 27, 2014 at 5:03 PM Reply

  இந்த சாம்பார் குறிப்பு படித்து செய்து பார்த்து விட்டேன். அசத்தல் ருசி. என் முக நூலில் நான் பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி.

 5. meenakshi May 31, 2014 at 5:13 AM Reply

  இதைப்படித்துவிட்டு. பலமுறை வைத்துவிட்டடேன் பாராட்டு கிடைத்தது்.மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s