3-வானமெனும் வீதியிலே – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

Vanamenum+Veedhiyile_2

அவினாஷ்: (40, 160, 65)
ஃபர்ஸ்ட் ஆஃபீசர். ராஜேந்திரனை விட அதிக அனுபவம் மிகுந்த அவினாஷ் இன்னும் உதவி பைலட்டாக இருப்பதற்குக் காரணம் இரண்டு மூன்று முறை ‘மெடிக்கலில்’ கீழே இறக்கப்பட்டது. ஒரு தடவை ஒரு ஹோஸ்டஸுடன் தவறாக நடந்து கொண்டது. (அவளை உட்காரும் இடத்தில் தட்டியது) மதுப் பிரியர். குடிப்பதற்குக் காரணம் சொந்த வாழ்க்கையின் சில்லறை வேதனைகள். தன்னிரக்கம் கொஞ்சம் உண்டு. -‘என்னை எல்லோரும் பூமியில் போட்டு மிதிக்கிறார்கள்’ – திருமணம் ஆகி விட்டது. மனைவி சற்று…

Vanamenum_Veedhiyile_3

நம்பியார்:
ஃப்ளைட் இஞ்சினியர். மீசை தான் பயப்படுத்தும். பயந்த சுபாவம். ‘காரவெல்’ விமானத்தின் கடைசி ஆணி வரை தெரியும். பேச்சு மிகக் குறைவு. எதற்கெடுத்தாலும் ஒரு புன்னகைதான். சில சமயம் எரிச்சலைக் கூடத் தரும் ‘எல்லாம் தெரிந்த’ புன்னகை. பொழுதுபோக்கு: குறுக்கெழுத்துப் போடுவது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் விளையாடுவது. சதுரங்கம். வயது 42. தினம் வீட்டை விட்டுப் புறப்பட்டு முன் கண்ணாடி முன் நின்று தன் தலையின் ஒரு நரை மயிரை ஒரு இன்ஜினியரின் கவனத்துடன் விலக்குவது. மற்றொரு பொழுதுபோக்கு: மனைவி, இரண்டு குழந்தைகள், எல்லாம் கேரளம்.

தேவி:

வயது 25. சென்டிமீட்டர்களில், கிலோகிராமில் இவள் உடம்பின் வளைவுகளைச் சொல்ல முடியாது. நீண்ட கண்கள். அதிகம் மேக்-அப் கிடையாது. நிஜக் கூந்தல். டில்லியில் ஒய்.டபிள்யூ.ஸீ.ஏ. வாசம். பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) முதல் உதவியிலும், ஃப்ரெஞ்ச் பாஷையிலும் சர்டிஃபிகேட். அழகாகச் சிரிக்கக் கூடியவள். சிரிக்கும்போது கண்களும் உடன் சிரிக்கும். தாய் பாஷை கன்னடம். தமிழ் தெரியும் (கொச்சை ‘என்னை’ என்பதற்குப் பதில், ‘யன்னை’) ஆங்கிலம், ஹிந்தி நன்றாகத் தெரியும். நீண்ட கூரிய நகங்கள் – ஒரு தடவை ராஜேந்திரனின் கையில் ரத்தம் வரக் கீறிய நகங்கள்.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s