1-வானமெனும் வீதியிலே – சுஜாதா


Vanamenum_Veedhiyile

ஒரு விமானம் நேரிசை வெண்பா எழுதினால் இப்படித்தான் இருக்குமோ ?

என்னை அடைந்து எனக்குள்
நுழைந்து விட்டீர்
சென்னைக்குப் போகின்ற
சிந்தனையோ? – என்னைப்
பறக்க வைக்கும் சக்தி
சிலசமயம் உம்மை
இறக்க வைக்கும். எச்சரிக்கை!

சில அறிமுகங்கள்:
விமானத்துடன்:

காரவெல் 6என்7 பிறந்தது ஃப்ரான்ஸில் ஸூட் ஏவியேஸான் தொழிற்சாலையில். ஏவான் மார்ச் 527 ரகத்தைச் சேர்ந்த இரண்டு ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டது.

89 பிரயாணிகள் செல்லக் கூடியது. 2500 கிலோ கிராம் சாமான்கள் தாங்கக் கூடியது. செலுத்தத் தேவைப்படுபவர்கள் பைலட், உதவி பைலட், ஃப்ளைட் இஞ்சினியர், பிரயாணிகள் வசதிக்கு இரண்டு ஹோஸ்டஸ் (உபசரணைப் பெண்கள்) அல்லது ஸ்டீவர்ட்.

காரவெல்லின் முக்கியமான அவசரத் தேவைக்கான சாதனம் ‘எமெர்ஜென்சி பாரச்சூட் பிரேக்கிங்’

இந்த மாதம் இருபத்திரண்டாம் தேதி காலை டில்லி விமான நிலையத்தில் புறப்பட்ட ஒரு காரவெல் விமானம் (வி.டி.டி.எஸ்.ஆர். என்கிற பதிவு எழுத்துக்கள்) ஃப்ளைட் நம்பர் 567-ல் சென்றது. அதைச் செலுத்திய காப்டன் ராஜேந்திரன், உதவி செய்த காப்டன் அவினாஷ், ப்ளைட் இஞ்சினியர் ஆர்.கே.நம்பியார், உபசரணைப் பெண் தேவி – இவர்களைப் பற்றிய சில அந்தரங்கக் குறிப்புகள்.

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s