5-சிதம்பரம் கொத்சு – ராஜப்பா


இதன் முந்தைய பகுதி…

சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தினம் தினம் காலையில் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸுவும் நைவேத்யம் பண்ணுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 100 – 150 கிலோ அரிசி போட்டு சம்பா சாதம் தினமும் செய்கிறார்கள்.

நைவேத்யம் ஆன பிறகு, இந்த சாதத்தை கோவிலிலுள்ள எல்லா தீக்ஷிதர்களுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். ஸ்வாமி பிரசாதம் என்பதை தவிர, வழக்கமாகவே சம்பா சாதமும், கொத்ஸுவும் மிக மிக ருசியாக இருக்கிறது.

19 ஜூன் 2013 அன்று நான் சிதம்பரம் கோயிலில் இதை சாப்பிட்டேன். செய்முறையை தீக்ஷிதர் மனைவியிடம் கேட்டு அறிந்து கொண்டேன். இதோ செய்முறை:

சம்பா சாதம் (மிளகு சாதம்) :

சம்பா சாதம்


தேவையானவை:

1 டேபிள்ஸ்பூன்   மிளகு
1/2 டேபிள் ஸ்பூன்  ஜீரகம்
2 டேபிள்ஸ்பூன்     நெய்
200 கிராம் அரிசி
10 முந்திரி பருப்பு உடைத்தது, நெய்யில் வறுத்தது.
உப்பு

செய்முறை:

அரிசியை நன்கு அலம்பி, குக்கரில் தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு, சாதம் சமைத்துக் கொள்ளவும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும். மிளகு, ஜீரகத்தை வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சாதத்தில் நெய் விட்டு, மிளகு, ஜீரகம் பொடியையும், முந்திரிப் பருப்பையும் போட்டு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கொத்ஸுவுடன் சேர்த்து சாப்பிடவும்.

கத்தரிக்காய் கொத்ஸு.

தேவையான சாமான்கள்:

கத்தரிக்காய் — 250 கிராம்.
புளி — ஒரு எலுமிச்சை அளவு.
மஞ்சள் பொடி — ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை — கொஞ்சம்
கொத்ஸு பொடி — 5 டீஸ்பூன் (செய்முறை கீழே உள்ளது)
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கடுகு — 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) — 1/2 டீஸ்பூன்
உப்பு

கொத்ஸுப் பொடி:

கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்.

கொத்தமல்லி விதை — 3 டேபிள்ஸ்பூன்
ஜீரகம் — 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு — 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  — 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
சிகப்பு வர மிளகாய் — 5

ஒரு வாணலியில் மேலே எழுதியவைகளை ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் விட வேண்டாம்.

கொத்ஸு செய்முறை:

கத்தரிக்காய் வதங்குகிறது.


ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காய் துண்டங்களை (நீரை இறுத்து விட்டு)போடவும். கறிவேப்பிலை போடவும்.

கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.

இதற்கிடையே, ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். (concentrated).
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, உறைப்பு, புளிப்பு எது குறைகிறதோ, அந்த சுவையை கூட்டவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்தவுடன், அடுப்பை அணைத்து விடலாம்.

கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை கெடாது.

கத்தரிக்காய் கொத்ஸு.

ராஜப்பா
22-06-2013

[Me.jpg]

Basically a family man, I come from a large family. I have varied interests. I was in missiles field, till I retired in 2001. I live in Chennai.

Advertisements

4 thoughts on “5-சிதம்பரம் கொத்சு – ராஜப்பா

 1. ரெங்ககசுப்ரமணி September 25, 2013 at 9:38 AM Reply

  எல்லாம் சரி, தொன்னையில் உள்ள கொத்சுவில் வெங்காயம் போல ஏதோ தெரிகின்றதே. பிரசாதத்தில் வெங்காயம் போட்டா நைவேந்தியம் செய்கின்றார்கள்?

  • BaalHanuman September 25, 2013 at 9:47 AM Reply

   நல்ல கேள்வி ரெங்கசுப்ரமணி 🙂 உங்கள் கேள்விக்கான பதிலை அந்த நாராயணனே அறிவார் :-))

   அவரை நீங்கள் தொடர்பு கொள்ள…

   நாராயணன் (எ) ராஜப்பா – rajappa41 (Yahoo)

   • பாரதி மணி December 19, 2013 at 6:14 PM

    சிதம்பரம் கொத்ஸு தில்லையம்பலத்தானுக்கு படைக்கும்போது வெங்காயமில்லாமலும், நரர்களுக்கு சமைக்கும்போது வெங்காயத்துடனுமிருக்கும். ஹோட்டல்களில் வெங்காயம் இஸ் எ மஸ்ட். வெங்காயம் சேர்ந்த கொத்ஸு நம்மை எங்கொ கொண்டுபோகும். தில்லை சபாபதியும் விரும்பிச்சாப்பிடுவார். நாம் தான் படைப்பதில்லை!

 2. rajasekaran December 17, 2013 at 10:26 AM Reply

  நல்ல அருமையான கொஸ்து..சம்பாசாதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s