4-சிதம்பரம் கொத்சு – விஜி ராம்


இதன் முந்தைய பகுதி…

சீக்ரெட் ரெசிபி
கொத்சு வெவ்வேறு முறைகளில் செய்யப்படுகிறது. சில நேரம் கத்தரிக்காயை சுட்டுப் பிசைந்து செய்யப்படும். ஆனால் சிதம்பரம் கொத்சுக்கு கத்தரிக்காயை சுட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வேக நேரம் எடுக்கும். இருந்தாலும் சுவை அலாதிதானே ? பாரம்பரிய முறைப்படி செய்ய நேரம் இல்லா விட்டால், குக்கரில் நிமிடங்களில் செய்து விடலாம். இரண்டு முறைகளும் இதோ உங்களுக்காக…

கொத்சு பொடி

என்னென்ன தேவை ?
கொத்தமல்லி (தனியா) – கால் கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – கால் டீ ஸ்பூன்

எப்படிச் செய்வது ?
எண்ணெய் விட்டு மேற்கூறிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.

என்னென்ன தேவை ?
ரொம்ப பொடியாக இல்லாத இளசான கத்தரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
கொத்சு பொடி – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
நீர்க்க கரைத்த புளித் தண்ணீர் – அரை கப்
கடுகு – அரை டீ ஸ்பூன்
வெல்லம் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது ?
பாரம்பரிய முறை
மண் சட்டியில் அல்லது வெண்கலச் சட்டியில் செய்தால் சுவை தனிதான். கடாயை அடுப்பில் வைத்து ஒரு பெரிய குழிக் கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். 2 நிமிடங்களில் கத்தரிக்காய் சேர்த்து எண்ணெயில் நன்றாக வேகும் வரை வதக்கவும். கத்தரிக்காய் சுருள வதங்கியதும், புளித் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மசிய வேக விடவும். மத்தில் நன்கு மசித்தும் விடவும். இறுதியில் கொத்சு பொடியும், உப்பும், வெல்லமும் சேர்த்து, மீதமிருக்கும் எண்ணெயில் கடுகு, தேவைப்பட்டால் கறிவேப்பிலை தாளித்து, கொத்சில் கலந்து, ஒரு நிமிடம் அடுப்பில் வைக்கவும். கொதிக்க வேண்டாம். சிதம்பரம் கொத்சு ரெடி!

இறுதியில் சேர்த்த எண்ணெய் கொத்சின் மேலே மிதக்கும். இந்த கொத்சு ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். கெடாது. சாப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இதன் அருஞ்சுவையை உணர முடியும்.

ப்ரஷர் குக்கர் முறை
கத்தரிக்காய், வெங்காயத்தைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு 3 விசில் வேக வைக்கவும். மூடியை திறந்து புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். இறுதியில் வெல்லம், கொத்சு பொடி சேர்த்து எண்ணெயில் கடுகு தாளித்து கொத்சில் கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் வைக்கவும்.

இதன் அடுத்த (நிறைவுப்) பகுதியில் நண்பர் நாராயணன் சிதம்பரம் கோயில் தீக்ஷிதர் மனைவியிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்ட சம்பா சாதம் (மிளகு சாதம்), கொத்ஸுப் பொடி, கொத்ஸு செய்முறை உங்கள் பார்வைக்கு…

Advertisements

One thought on “4-சிதம்பரம் கொத்சு – விஜி ராம்

  1. ரெங்கசுப்ரமணி September 24, 2013 at 5:00 PM Reply

    இட்லிக்கு சட்னி சாம்பாரை விட பெட்டரான ஒரு சைட் டிஷ்ஷா? நம்பமுடியவில்லையே. ட்ரை செய்யலாம் என்றால் மனைவியும் ஊரில் இல்லை. நானே தான் களத்தில் இறங்க வேண்டும் போல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s