3-சிதம்பரம் கொத்சு – விஜி ராம்


இதன் முந்தைய பகுதி…

பலரிடம் பலவாறு கேட்டு அறிந்த ரெசிபிகளில் 10 வகைகளைச் செய்து பார்த்தோம். ம்ஹூம்…சிதம்பரம் கொத்சு அருகில் எதுவுமே நெருங்கவில்லை.ஏதோ ஒன்று அதில் இல்லாதது போலவே இருந்தது. மீண்டும் ஒரு முறை சிதம்பரம் செல்ல வாய்ப்பு கிடைத்தது…மீண்டும் கிண்ணம் கிண்ணமாக கொத்சு சாப்பிட்டு, உள்ளூர் நண்பர்களிடம் புலன் விசாரணையை முடுக்கினோம். எல்லாரும் ஏதோ ஒன்றை விட்டே ரெசிபி சொன்னார்கள். எல்லோர் கூறியதையும் ஒவ்வொன்றாகவும், ஒவ்வொரு பொருளைச் சேர்த்தும், குறைத்தும் செய்ததில் கமகமக்கும் சிதம்பரம் கொத்சு வந்தே விட்டது.

அதன் பிறகு அனேக முறை சிதம்பரம் கொத்சு செய்து, ஏகப்பட்ட நண்பர்களை கொத்சு பிரியர்களாக மாற்றியும் ஆயிற்று. இச்சுவை சரிபார்ப்பு படலத்தின் முடிவின் ரிசல்ட் என்ன? உணவில் புதுப் புது சுவைகளை விரும்பி தேடி சுவைக்கும் ‘கோவை ஃபுட்டீஸ்’ உணவு பிரியர்கள் குழுமத்தைச் சேர்ந்த பவனும் ஆர்த்தியும் சிதம்பரம் கொத்சுக்கு நூற்றுக்கு நூறு மார்க் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்களேன்…

கொத்சு பொடி

என்னென்ன தேவை ?
கொத்தமல்லி (தனியா) – கால் கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – கால் டீ ஸ்பூன்

எப்படிச் செய்வது ?
எண்ணெய் விட்டு மேற்கூறிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.

சம்பா சாதம்

என்னென்ன தேவை ?
உதிராக வடித்த பச்சரிசி சாதம் – ஒரு கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
ஜீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
மிளகாய் வற்றல் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு
பெருங்காய பொடி – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது ?
ஒரு துளி நெய் விட்டு, மிளகு, ஜீரகத்தை மணம் வரும் வரை வறுத்து , மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

சாதத்தை உதிர்த்து, சிறிது நெய் விட்டு பிசறி வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகாய் வற்றல், கறி வேப்பிலை தாளித்து சாதத்தில் போடவும்.

பொடித்த மிளகு, ஜீரகப் பொடியையும், உப்பையும் போட்டு நன்கு கலந்து விடவும்.

விரும்பினால் முந்திரிக்குப் பதில் சிறிது வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.

இதன் அடுத்த பகுதியில் சிதம்பரம் கொத்சு சீக்ரெட் ரெசிபி …

Advertisements

6 thoughts on “3-சிதம்பரம் கொத்சு – விஜி ராம்

 1. வீட்டில் குறித்துக் கொண்டார்கள்… நன்றி…

  • BaalHanuman September 24, 2013 at 5:47 AM Reply

   வாங்க தனபாலன். உங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி…

 2. vidya September 24, 2013 at 5:29 AM Reply

  வெந்தயம் + சீரகம் எதற்கு ?ப டத்தில் உள்ளது?

  • BaalHanuman September 24, 2013 at 5:46 AM Reply

   மன்னிக்கவும். தவறு என்னுடையது தான் 🙂 உங்கள் கேள்விக்குப் பதில் ஐந்தாவது (இறுதிப்) பகுதியில்…

 3. vidya September 25, 2013 at 2:49 AM Reply

  super presentation… making it today! Thank you so much

  • BaalHanuman September 25, 2013 at 9:51 AM Reply

   உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்… நன்றாக வந்ததா என்று இங்கே பகிருங்கள் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s