47-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இந்த ஆண்டில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தின் வெற்றிவிழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த வெற்றிவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்து கொண்டு எல்லோருக்கும் பரிசு வழங்கினார். படத்தைப் பற்றியும் படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பற்றியும் மிக உயர்வாக பேசினார். குறிப்பாக “மாஞ்சோலை கிளிதானோ… மான்தானோ…” பாடல் அவரை மிகவும் கவர்ந்ததாகவும், அடடா என்ன ஒரு அருமையான பாடல் என்று நெகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார்.

விழாவிற்கு பாரதிராஜாவின் அம்மாவும் வந்திருந்து எல்லோரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். பாரதிராஜாவின் அம்மா தனக்கும் ஒரு அம்மா போல என்று எத்தனையோ முறை இளையராஜா நெகிழ்ந்துபோய் சொல்லியிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் இளையராஜா பாரதிராஜாவின் தாயாரிடம் வந்து, “எப்படி இருந்தது?” என கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில், “அது என்னமோப்பா, அவங்க என்னென்னமோ பேசுறாங்க… என் காதுல பாரதிராசா, இளையராசாங்கற பேரு மட்டுந்தான் கேட்டுதுப்பா”

உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வை எடுத்துக்காட்டத்தான் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டேன்.

இதே வருடம் இளையராஜா வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்திற்கும், வட்டத்திற்குள் சதுரம் என்ற படத்திற்கும் இசையமைத்தார். இந்த நேரத்தில் வயசு பிடிசிந்தி என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைக்குமாறு அந்த படத்தின் தயாரிப்பாளர் கேட்க, இளையராஜாவும் ஒத்துக்கொண்டார். அதே போல வ்யா மோஹம் என்ற மலையாளப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் இளையராஜாவிற்கு வந்தது.

ஒரே சமயத்தில் இந்த நான்கு படத்திற்கும் இசையமைக்க ஒத்துக்கொண்டு நான்கு படங்களின் பாடல் பதிவுகளும் சரி, பின்னணி இசை சேர்ப்பும் சரி மாறி மாறி தொடர்ச்சியாக பதிவு செய்தார் இளையராஜா. இதுபோல ஒரே சமயத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தது இந்த ஆண்டில்தான். 80-களின் ஆரம்பத்திலும் சரி, இறுதியிலும் சரி, இளையராஜா சராசரியாக ஒரு வாரத்திற்கு 4 படங்கள் என்ற விகிதத்தில் இசையமைக்க ஆரம்பித்தார்.

இளையராஜா இசையமைத்த முதல் தமிழ் படம் ‘அன்னக்கிளி’ என்பது அனைவருக்கும் தெரியும்.

இளையராஜா இசையமைத்த முதல் தெலுங்கு படம் ‘வயசு பிடிசிந்தி’ என்ற இந்த திரைப்படம் தான்.

இளையராஜா இசையமைத்த முதல் மலையாளப் படம் ‘வ்யா மோஹம்’ என்ற இந்த திரைப்படம் தான். ‘வ்யா மோஹம்’ என்ற இந்த மலையாளப்படம் ஏற்கெனவே தமிழில் ஸ்ரீதர் இயக்கிய ‘போலீஸ்காரன் மகள்’ என்ற படத்தின் ரீமேக்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s