45-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

முதன் முறையாக ஸ்டீரியோ முறையில் ரெக்கார்டிங் செய்யப்பட்ட பாடல் என்னுயிர் நீதானே… என்ற பாடல். தமிழ் திரையுலகில் உலகத் தரத்திற்கு ஒப்பான இசையைக் கேட்பது இதுவே முதல் முறை.

எல்லா ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலும் இது பற்றியே பேச்சாக இருந்தது. அப்போது ஒரு மலையாளப்படத்திற்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி காதிற்கும் இந்த செய்தி போனது. யார் இந்த சலீல் சவுத்ரி? திலீப்குமார் – வைஜயந்திமாலா நடித்த மதுமதி உள்பட ஏராளமான இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். தென்னாட்டில் இருந்து முதன்முதலாக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற “செம்மீன்” என்ற மலையாளப்படத்திற்கு இசையமைத்தவர். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற இளையராஜாவின் “ராஜா ராஜாதான்” என்ற நிகழ்ச்சியில் இளையராஜா ஒரு சில தலைசிறந்த இசையமைப்பாளர்கள் பெயர்களை சொன்னார். அந்த வரிசையில் இளையராஜா சொன்ன ஒரு இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி.

இளையராஜாவின் இந்தப் படத்தின் பாடல் பதிவுகளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு அவர் தன் மகள் மற்றும் உதவியாளர் நேபு ஆகியோருடன் பாடல் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த பரணி ஸ்டுடியோவிற்கு வந்தார். அன்றைக்கு “டார்லிங் டார்லிங் டார்லிங்…. I love you love you love you….” பாடல் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாடலை இளையராஜா சொல்லித்தர பி.சுசீலா ஒத்திகை பார்த்த பின் பாடல் பதிவு நடைபெற்று முடியும் நேரம் சலீல் சவுத்ரி அங்கு வந்தார். எனக்காக இந்தப் பாடலை போட்டுக்காட்ட முடியுமா என்று கேட்க, அவருக்காக போட்டுக் காட்டினார்கள். பாடலைக்கேட்ட அவர் முகம் பிரகாசத்தில் பரவசமடைந்தது. “இது போன்ற ஒரு சினிமா இசையை நான் கேட்டதில்லை” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு சொன்னது இளையராஜாவிற்கு மேலும் தெம்பூட்டியது போலிருந்தது.

–நன்றி http://ilayaraja.forumms.net/

அன்று ஒரே நாளில் அனைத்துப் பாடல்களையும் பதிவு செய்தனர். எல்லா பாடல் பதிவுகளும் முடிவதற்குள் பதிவு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினியர் வால்யூமை ஏற்ற ஒரு ஸ்பீக்கர் காலியானது. இருந்தாலும் யேசுதாஸ் எதையும் பொருட்படுத்தாமல் உடனடியாக வேறு ஒன்றை புதிதாக வரவழைத்தார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் மிக சிறப்பாக வந்தது. இந்தப் பாடல்களை பற்றிச் சொல்லவே தேவையில்லை. பாடல்கள் எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமைந்ததோ அதே அளவு படத்தின் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பலமாக இருந்தது. படத்தில் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. சைலன்ட் மூவி போல இருக்கும். அதாவது நாயகனும் நாயகியும் சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா இடங்களையெல்லாம் சுற்றிப் பார்ப்பதுபோன்ற காட்சிகள், டால்ஃபின் ஷோ, கிளிகள் விளையாட்டு என பலபல காட்சிகள் இந்த ரீலில் வரும். மிகச் சிறப்பாக பின்னணி இசையை செய்திருப்பார் இளையராஜா. சரியான தாளகதியில் மியூசிக் கன்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டிற்கு வரவேண்டிய இசை வேறு இடத்திற்குப் போய்விடும். இப்போது போல அந்தக் காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டிற்கும், ஒவ்வொரு ம்யூசிக் வரவைப்பதென்பது மிகக் கடினமான ஒன்று.

–நன்றி http://ilayaraja.forumms.net/

சொன்னால் நம்பமுடியாத ஒரு விஷயம். இந்த பின்னணி இசையமைக்க இளையராஜா எடுத்துக் கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம் மட்டுமே.
இன்றைக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தாலும் இதுபோல அரைமணி நேரத்தில் இசையமைப்பது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. அதுவும் அந்தத் தரத்தில் இசையமைக்க குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும் என்று ஒரு பேட்டியில் இளையராஜாவின் இசைக்குழுவில் இருந்த சுதாகர் சொன்னதைக் கேட்கும்போது பிரமிப்பாக இருந்தது.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இன்றைய முன்னணி இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஒரு பேட்டியில் இந்தப் படம் பற்றி குறிப்பிடும்போது ப்ரியா படப்பாடல்களில் ஏதாவது புது வாத்தியக்கருவிகளோ அல்லது புது இசையோ இருக்கிறதா என இன்னும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றார். மற்ற இசையமைப்பாளர்களுக்கு பாட்டெழுதுவதற்கு இளையராஜாவின் இசையில் பாட்டெழுதுவதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நா.முத்துக்குமார் சொன்னது, “வீட்டில் குளியலறையில் குளிப்பதற்கும் அருவியில் குளிப்பதற்கும் உள்ள வித்தியாசம். வார்த்தைகளால் சொல்லமுடியாது”

ப்ரியா படம் வெளிவந்த இந்த காலகட்டம்தான் தமிழ் சினிமா உலகம் முழுமையாக இளையராஜாவின் கைகளுக்கு வரத்தொடங்கிய காலகட்டம்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

2 thoughts on “45-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. இந்த படத்தை நினைத்தால் ராஜாவை விட, சுஜாதாவும் அவர் கதைக்கு நடந்த பரிதாபமும் தான் நினைவிற்கு வருகின்றது.

    இப்படத்தின் பாடல்கள் சுட்ட பாடல்கள் என்றும், தயாரிப்பாளரின் தொல்லையால் அப்படி செய்தார் என்றும் ஒரு வதந்தி அடிக்கடி கேள்வி படுவது. இட்லிவடையில் ஒரு வீடீயோவில் பார்த்த நினைவும் உள்ளது. உண்மையா? யாருக்காவது தெரியுமா? சும்மா ஒரு தகவல் அறியும் உரிமை படி கேட்கின்றேன். வேறு உள் நோக்கம் கிடையாது.

  2. Rajagopalan June 24, 2013 at 5:30 PM Reply

    the beginning piece of the song is inspired from Boney M Number,sunny

    Taken from the net.

    Raju-chennai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s