44-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இளையராஜாவின் முதல் படமான “அன்னக்கிளி” எடுத்த பஞ்சு அருணாசலம் இந்த ஆண்டில் ஒரு படத்தைத் தயாரித்தார். படத்திற்கு கதை வசனம் பஞ்சு சார் எழுத, சுஜாதா அவர்கள் திரைக்கதை அமைத்திருந்தார். படத்தை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். படத்தின் நாயகன் ரஜினி, நாயகி ஸ்ரீதேவி. இவ்வளவு சொல்லிய பின் படத்தின் பெயரைச் சொல்லவே தேவையில்லை. ஆம் படத்தின் பெயர் ‘ப்ரியா’.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்தக் காலக்கட்டத்தில் ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். இளையராஜா நாட்டுப்புறக் கதைகளுக்குத்தான் நன்றாக இசையமைப்பார், இது மாதிரியான கதைகளுக்கு நன்றாக இசையமைக்கமாட்டார் என்பது போன்ற விஷயங்களை பஞ்சு சாரிடம் சில பேர் சொல்லியும் இந்தப் படத்திற்கு இளையராஜாதான் இசை என்று ஆணித்தரமாகச்  சொன்னார். இந்தப் படத்தை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி இசையமைக்க ஒத்துக்கொண்டார் இளையராஜா. வெளி நாட்டில் நடப்பது போன்ற ஒரு கதை களம். இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் பஞ்சு சார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்தப்படத்திற்கான பாடல்களை “ஸ்டீரியோ” முறையில் பதிவு செய்தால் என்ன என்று பஞ்சு சாரிடம் இளையராஜா கேட்க, அப்படியே செய்வோம் என்றார். ஆனால் அதற்கான கருவிகள் இங்கு எந்த ஸ்டுடியோவிலும் அதிகம் இல்லையே என்று பஞ்சு சார் சொல்ல, K.J.யேசுதாஸ் தனது மெல்லிசைக் கச்சேரிகளில் இதுபோன்ற சவுண்ட் சிஸ்டம் அமைத்து ரசிகர்களை மெய்மறக்கச் செய்து கொண்டிருந்தது இளையராஜாவிற்கு ஞாபகம் வர யேசுதாசிடம் இது பற்றி கேட்டுப் பார்ப்போம் என்று முடிவுசெய்தனர். இவர்கள் இந்த யோசனையை யேசுதாஸ் அவர்களிடம் சொல்லும் நேரமும், அவர் தனது தரங்கிணி ஸ்டுடியோவிற்காக புதிதாக கருவிகள் வாங்க நினைத்துக் கொண்டிருந்த நேரமும் ஒன்றாக இருக்க, யேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டுடியோவிற்கு “ஸ்டீரியோ” முறையில் பாடல்கள் பதிவு செய்வதற்கான கருவிகளை வாங்கினார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்தப் படத்திற்கான பாடல் கம்போஸிங்கிற்கு பெங்களூர் போகலாம் என்று பஞ்சு சார் சொன்னதால் பெங்களூருக்கு சென்றனர். ஆனால் மற்ற படங்களுக்கு கம்போஸிங் நடப்பது போல இந்த படத்திற்கான கம்போஸிங் ஓட்டலிலோ, ஸ்டுடியோவிலோ நடக்கவில்லை. முதல் நாள் ஓட்டலிற்குத்தான் சென்றனர். ஆனால் இளையராஜாவிற்கு ஏனோ திருப்தி வரவில்லை. உடனே பஞ்சு சாரிடம், “அண்ணே! பெங்களூருக்கு வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கப்பன்பாக் போன்ற இடங்களுக்கு சென்று கம்போஸ் செய்வோம்” என்று கேட்க, பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே “சரி அங்கேயே போவோம்” என்றார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

காரில் வாத்தியங்களை ஏற்றிக் கொண்டு லால்பாக்கில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து கம்போஸிங் செய்ய ஆரம்பித்தனர். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் கம்போஸிங் நடந்தது. 6 பாடல்களும் கம்போசிங் முடிந்தது சென்னை திரும்பினர்.

முதன்முதலாக இந்த முறையில் பதிவு செய்த பாடல் “என்னுயிர் நீதானே” என்ற பாடல். பாடல் அவ்வளவு துல்லியமாகவும், கேட்பதற்கு தெளிவாகவும் இருந்தது. உலக தரத்திற்கு நிகரான பாடல் பதிவு செய்ததில் ஏக மகிழ்ச்சி.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

2 thoughts on “44-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. nandhitha kaapiyan June 15, 2013 at 8:31 AM Reply

     வணக்கம் பாராட்டுக்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். ஒரு மாமனிதனின் வரலாற்றுப் பொக்கிஷம். பதிவிட்டமைக்கு உளமார்ந்த நன்றி அன்புடன் நந்திதா

    ________________________________

  2. nathan March 20, 2014 at 2:20 AM Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s