43-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

ஒரு சமயம் இளையராஜா தன் அண்ணன் பாஸ்கரோடு மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த போது, “அண்ணா! நாம் கிராமத்தை விட்டு வரும்போது அம்மா நம்மிடம் பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். பதிலுக்கு நாம் ‘அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லையென்றால் பிளாட்பாரத்திலோ தெருவிலோ ஜனங்கள் முன்பு உட்கார்ந்து வாசிப்போம், எங்களுக்கென்ன கவலை’ என்று சொன்னோமல்லவா… அப்படி வாசிக்கும் நிலைமை ஏற்படவில்லையென்றாலும் கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு போட்டோவாவது எடுத்துக்கொள்வோமா?” என்று இளையராஜா கேட்டிருக்கிறார். பாஸ்கருக்கும் சரியெனப்பட உடனே கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

அவர்கள் சென்ற நேரம் அங்கே சிகப்பு ரோஜாக்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பாரதிராஜாவிடம் சென்று இதைச் சொல்ல அங்கே இவர்கள் பிளாட்பாரத்தில் வாசிப்பது போலவும், பாரதிராஜாவும், கமலும் இவர்கள் பாட்டை கேட்டுக்கொண்டே தரையில் விரித்திருந்த துண்டில் காசு போடுவது போலவும் படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த காலகட்டத்தில்தான் இளையராஜா தனக்கு தோதான இசைக்கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் குழுவில் சிதார் வாசித்துக்கொண்டிருந்த ஒரு சின்னப் பையனின் நாதம் இளையராஜாவிற்கு பிடித்திருந்தது. வாசிப்பது யார் என்று கேட்டார். பெயர் கணேஷ், இசையமைப்பாளர் எம்.எம். முத்துவின் மகன் என்றார்கள். தனது குழுவிலே இந்தப் பையனை சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கேட்க, அவரும் சம்மதித்தார். அப்போது அந்த கணேஷிற்கு வயது 18.

ஜி.கே.வியின் குழுவிலே இளையராஜா அறிந்த இன்னொரு வாத்தியக்கலைஞர் சுதாகர் கைபா. இவர் விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அரசின் விலங்கியல் துறையில் வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேர வாசிப்பாளராக ஜி.கே.வியின் குழுவில் வாசித்துக் கொண்டிருந்தார். யாரிடமும் சங்கீதம் கற்காமலேயே புல்லாங்குழலுக்கு வாக்கப்பட்டவர். இந்த சுதாகரையும் தன் குழுவில் இணைத்துக் கொண்டார் இளையராஜா. குழுவில் சேர்வதற்கு முன் சுதாகர் இளையராஜாவிடம் “எனக்கு நோட்ஸைப் பார்த்து வாசிக்கத்தெரியாது. கேட்டு வாசிப்பவன் நான்” என்றிருக்கிறார். “எப்படி வாசிக்க வைப்பது என்று எனக்குத் தெரியும்” என்று சொல்லித் தன் குழுவில் இணைத்துக் கொண்டார்.

இந்த வாத்தியக்கலைஞர்களை பற்றிச் சொன்னதற்குக் காரணம் என்னவென்றால், ஒருவருடைய வாசிப்பு நன்றாக இருந்தால் அவரை தன் இசைத்தொகுப்பில் எப்படியும் அழகாக பயன்படுத்தமுடியும் என்ற அசாத்திய தன்னம்பிக்கை இளையராஜாவிற்கு இருந்தது என்பதைச் சொல்லத்தான்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s