41-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

–நன்றி http://ilayaraja.forumms.net/

வேறு சில படங்களுக்கு பின்னணி இசைசேர்ப்பு நடந்து கொண்டிருந்தது. அதாவது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பின்னணி இசை சேர்ப்பு நடக்க இந்தப் படத்திற்கான கம்போஸிங் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் பின் இரவு 10 மணியிலிருந்து விடியும் வரைக்கும் நடந்தது.

–நன்றி http://ilayaraja.forumms.net/

முதலில் இந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல்கள் இரண்டு. படத்தின் தீம் சாங்காக “ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்ற பாடலையும், ” நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா” பாடலும் பதிவு செய்யப்பட்டது. மூன்றாவதாக பதிவு செய்யப்பட்ட பாடலான “தண்ணி கருத்திருச்சு” பாடலைப்பற்றி ஒரு சில விஷயங்கள் சொல்லியாகவேண்டும்.

கிராமியப் பாடல் வார்த்தையான தண்ணி கருத்திருச்சு என்ற வார்த்தையை வைத்து இளையராஜா இசையமைக்க அதே வார்த்தைகளை வைத்துக் கொண்டு வாலி பாடலை எழுதினார். இந்தப் பாடலை யாரைப் பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்க இளையராஜாவின் மனதில் சட்டென ஞாபகத்திற்கு வந்தவர் ஜி.கே.வி. அவரையே பாடவைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு அடுத்த நாள் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பாடல் பதிவு ஆரம்பமானது.

இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் உதவி இயக்குனர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பாடலைக் கற்றுக்கொண்டு ஜி.கே.வி. பலமுறை ஒத்திகை செய்தார். பாடுவதற்கு மைக் முன்னால் போனால் ஒரு வரி பாட அடுத்த வரியின் ட்யூன் மறந்துபோகும். மறுபடி நினைவுபடுத்திப் பாட இரண்டாவது முறை வேறு இடத்தில் ட்யூன் மறந்து போகும். “சரி டேக்கில் வந்து விடும், டேக்கில் ட்ரை பண்ணலாம்யா” என்று கோவர்த்தன் சார் சொல்ல டேக் தொடங்கியது. ஆனால் அது பல்லவியோடு நின்றது. இப்படியே ஒரு வரி அடுத்த வரி இன்னொரு லைன் என்று 62 டேக்குகள் ஆனது. மதியம் மணி 2-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மதியம் எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்களின் ரெக்கார்டிங். அவரோ வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. அவர்கள் பாடுவதைக் கேட்டு, “டேய் வெங்கடேசா, நல்லா பாடுடா” என்று தான் வந்திருப்பதையும் அறிவித்து உற்சாகப்படுத்தினார். டேக் தொடக்கத்தில் ஏற்கெனவே அவருக்கு டென்ஷன். இன்னும் அதிகம் டென்ஷன் ஆகிவிட்டார் ஜி.கே.வி.

“இவ்வளவு கஷ்டமாக இருந்தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம் ராஜா, கேன்சல் செய்துவிடுவோம். வேறு ட்யூன் போட்டுக்கொள்ளலாம்” என்று ஸ்ரீதர் சொல்ல, இளையராஜாவோ, “சார் இந்த ட்யூன் ஹிட்டாகும். நல்ல ட்யூன். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்காகதால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது. இந்தப் பாடலை வேறு ஒருவரைப் பாடச்சொல்லலாம்” என்று சொல்லியிருக்கிறார். ஜி.கே.வியும் எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் ஒத்துக்கொள்ள, இளையராஜா “மலேசியா வாசுதேவனைப் பாடவைக்கிறேன்” என்று சொல்லி அவரைப் பாடவைத்தார். அவர் பாடும்போதும் ஜி.கே.வி-யும் உடன் இருந்தார். பாடல் பதிவு முடிந்து ஜி.கே.வி., மிக அருமையாக வித்தியாசமான பாடலாக வந்திருக்கிறது என்று பாராட்டினார்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. காதல், இன்பச்சுவை, பிரிவுச் சோகம், நாட்டுப்புற ராகம், என எல்லாவற்றிலும் மிக அருமையாக இசையமைத்து வெற்றிகண்டார் இளையராஜா. பாடல்களை எழுதியது கவிஞர் வாலி.

காதல் – “ஒரே நாள் உனை நான்…”, “நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…”
இன்பச்சுவை – “கிண்ணத்தில் தேன் வடித்து”
நாட்டுப்புற ராகம் – “தண்ணி கருத்திருச்சு”
பிரிவுச் சோகம் – “என்னடி மீனாட்சி” 

“என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு” பாடல் பதிவின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

One thought on “41-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. b.ganesh June 12, 2013 at 1:16 AM Reply

    கிண்ணத்தி்ல் தேன் வடித்து பாடலின் வரிகளும் சரி… ட்யூனும் சரி… படமாகப்பட்ட விதமும் சரி… எனக்கு மிகப் பிடித்தமானவை. கமலின் நளின நடன அசைவுகளுடன் என்னடி மீனாட்சியும் ரசனை லிஸ்டில் உண்டு. அதன் பதிவில் ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவத்தை அறிய ஆவலோட வெயிட்டிங்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s