38-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

என்னதான் திரைப்படங்களுக்கு இசையமைப்பு என்று பிசியாக இருந்தாலும் தாய் மூகாம்பிகை மீது இளையராஜாவிற்கு ஒரு கவனம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மூகாம்பிகை கோவிலுக்கு போவதும், யார் உடன் வந்தாலும் தன்னுடைய செலவில் அழைத்துபோவதும் தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில் தாய் மூகாம்பிகை மீது கன்னடத்தில் பக்திப்பாடல்கள் பாடி வெளியிடவேண்டும் என்ற ஆசையில் கன்னடப்பாடலாசிரியர் உதயசங்கரைச் சந்தித்து, “மூகாம்பிகை அம்மன் மீது நான்கு பக்திப்பாடல்கள் எழுதித்தரவேண்டும்” என்று கேட்டிருக்கிறார். அவரோ “இப்போது பிசியாக இருப்பதால் இன்னொரு நாள் எழுதித்தருகிறேன்” என்று சொல்ல அவரைவிட பிசியாக இருந்த இளையராஜாவோ குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நான்கு பாடல்களையும் பாடிப் பதிவு செய்தே தீருவது என்று உறுதியாக இருந்தார்.

இளையராஜாவின் உறுதியைப் பார்த்த உதயசங்கர், எப்படியாவது எழுதித்தந்துவிடுகிறேன். ஆனால் என்னால் ரெக்கார்டிங்கிற்கு வரமுடியாது. என் உதவியாளரை அனுப்புகிறேன். உன்னால் கன்னடத்தில் பிழையின்றிப் பாடமுடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் கன்னடம் சரியில்லை என்றால் யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். பரவாயில்லை முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொல்லிக் குறிப்பிட்ட நாளில் ரெக்கார்டிங் தொடங்கினார்.

இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் மகன் கே.எஸ்.ரமணனின் “ஜெயஸ்ரீ ரெக்கார்டிங் தியேட்ட”ரில் மிகக்குறைந்த வாத்தியங்களை வைத்துக்கொண்டு பாடிப் பதிவு செய்ய ஆரம்பித்தார். தன் மனமெல்லாம் அம்மாவின் திருவடியிலேயே ஒன்றியிருந்ததாகவும், பாடும்போது உடலெங்கும் ஒரு அதிர்வு இருந்து கொண்டே இருந்ததாகவும் இளையராஜா சொல்லியிருக்கிறார். (சங்கீதக்கனவுகள்).

பாடல்களின் கன்னட உச்சரிப்பில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை கேட்பதற்காக உதயசங்கர் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார். அவர் வரும்சமயம் நான்கு பாடல்களையும் பாடிப் பதிவு செய்து முடிக்கும் நேரம். பதிவு செய்த பாடல்களைக் கேட்ட உதயசங்கர் “கன்னடப்பாடகர்களே பாடியிருந்தாலும் இத்தனை தெளிவான கன்னடமாக இருக்காது. அவ்வளவு நன்றாகப் பாடிவிட்டீர்கள்” என்று பாராட்டியிருக்கிறார்.

இந்த பாடல்களை ஜி.கே.வி. அவர்களிடம் போட்டுக்காட்ட அவருடைய வீட்டிற்குச் சென்று பாடல்களைப் போட்டுக்காட்டியிருக்கிறார். பாடல்களைக் கேட்ட ஜி.கே.வி. சொன்னது, “இது நீ பாடலைடா அம்பாளே பாடியிருக்கா”. பாடல்களை உடன் இருந்து கேட்ட ஜி.கே.வியின் மனைவி சொன்னது, “ஐயோ என் உடம்பெல்லாம் சிலிர்க்குது, பாட்டப்பத்தி என்ன எதுவும் கேட்காதே”.

அதன்பின், சினிமாவில் தனக்கு இசையமைப்பாளர் என்று அங்கீகாரம் கொடுத்த பஞ்சு சாரிடம் போட்டுக்காட்ட விரும்பினார். இரவு மணி 10.30. பஞ்சு சாரின் வீட்டிற்கு சென்று பாடல்களைப் போட்டுக்காட்டியிருக்கிறார். பாடல்களைக் கேட்டுப் பிரமை பிடித்தவர் போலான அவர், “பக்திப்பாடல் இப்படிக்கூட ஜீவனை உலுக்குவதாக அமையுமா என்ன? இதுபோல பக்திப்பாடல் வருவது இதுதான் முதல்தடவை, இது முற்றிலும் உண்மையான தெய்வீக நிலையில் பாடிய பாடல்கள்” என்று பாராட்டியிருக்கிறார்.

இந்தப்பாடல்களை வருடத்தின் முதல் நாள் தாய்மூகாம்பிகையின் சன்னதியில் ஒலிக்கச் செய்யவிரும்பி அதற்காக டிசம்பர் 31ம் தேதி மூகாம்பிகை சென்றார் இளையராஜா. இரவு தங்கி காலை 4 மணிக்கு சௌபர்ணிகாவில் குளித்து, நிர்மால்ய சேவை பார்த்துவிட்டு 6 மணிக்கு டேப் ரெக்கார்டருடன் சென்றார். சிறிது நேரம் தரிசனத்திற்கு நிற்கும் பகுதியை ஒட்டிய திண்ணையின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தார். பிறகு அந்தப்பாடல்களில் இரண்டு பாடல்களைப் போட்டார். சிறிதளவே பக்தர்கள் இருந்த அந்த சூழலில் மனம் ரம்மியமானது. “அம்மா இந்தப் பாடல்களை நீ ஏற்றுக்கொண்டாயா என்பதை எனக்கு புரியுமாறு நீ தெரிவிக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.

இரண்டாவது பாடல் முடிந்து டேப்பை நிறுத்தினார். சங்கீதக்கனவுகளில் இளையராஜாவே சொன்ன வரிகள்… “டேப்பை ஆஃப் செய்தும் என் காதுகளில் நான் பாடிய பாடலின் சுருதிமட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. இது எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். கோவிலில் காலை 7 மணியை அறிவிக்கும் கோயில்மணி அடிக்கிறார்கள். அந்த ஓசை அடங்காது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்தது. மெதுவாக கேட்ட அந்த கோயில் மணி ஓசையின் சுருதியை என் பாடலுடன் இணைத்துப்பார்த்தேன். ஆச்சர்யம். எள்ளளவும் பிசகாத அதே சுருதி. “பார்த்தாயா நீ பாடிய சுருதி என் கோயிலின் மணிச்சுருதியில் இருந்து இம்மி கூடப் பிசகாமல் அப்படியே பின்னிப் பிணைந்திருப்பதை” என்று அம்மா எனக்கு உணர்த்துவது போல் இருந்தது.”

திரையிசையில் பிசியாக இருந்தும் தாய் மூகாம்பிகை மீது கன்னடப்பாடல்கள் பாடி அன்றைய இசை உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தார் இளையராஜா.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

3 thoughts on “38-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. Gemini June 4, 2013 at 6:15 AM Reply

  I happen to read this short story in a blog this morning. Tamil readers can enjoy..

  http://www.adrasaka.com/2013/05/blog-post_8358.html

 2. rathnavelnatarajan July 12, 2013 at 4:54 PM Reply

  நெகிழ வைத்த பதிவு.
  நன்றி.

 3. BaalHanuman July 14, 2013 at 3:32 PM Reply

  நன்றி ரத்னவேல் சார்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s