36-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இதே ஆண்டில் கமல் நடித்து வெளிவந்த படம் அவள் அப்படித்தான்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்த ஆண்டில் கமல் மலையாளப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குனர் ருத்ரைய்யா என்பவர் கமலிடம் சென்று தான் ஒரு படம் இயக்கப்போவதாகவும் அந்தப் படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். கதை கேட்ட கமல், கதை நன்றாக இருக்கிறது, ஆனால் நான் இப்போது ஒரு மலையாளப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல, இயக்குனர் ருத்ரைய்யா அந்த படம் முடியும் தருவாயில் இருந்ததால் அதற்கு ஏற்பக் கமலின் கால்ஷீட் பெற்று இயக்கினார்.

பன்னீர் புஷ்பங்களே…, உறவுகள் தொடர்கதை…., வாழ்க்கை ஓடம் செல்ல… என இந்த படத்தில் மூன்று பாடல்கள். பன்னீர் புஷ்பங்களே என்ற பாடலையும், உறவுகள் தொடர்கதை என்ற பாடலையும் எழுதியது கங்கை அமரன்.

இளையராஜாவின் இசையில் கமல் பாடிய முதல் பாடல் பன்னீர் புஷ்பங்களே… என்ற பாடல்.

ரெக்கார்டிங் சமயத்தில் ஸ்டுடியோவிற்கு வந்த கமலிடம் இந்த பாடலைப் பாடிக்காட்டி கமலைப் பாடச்சொல்லியிருக்கிறார் இளையராஜா. பாடல் நன்றாக வர அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்தார் இளையராஜா. ஆனால் படம் வெளியான பிறகுதான் தான் ஒரு விஷயத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்று கமலிடம் சொல்லியிருக்கிறார் இளையராஜா. பன்னீர் புஷ்பங்களே என்ற வரியை கமல் பன்னீர் புஷ்பங்ஙளே என்று பாடியிருப்பார்.

இந்தப்பாடல் உதயமானது ஏதோ ஒரு ஹோட்டலிலோ அல்லது ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலோ அல்ல. கோவையில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது உதயமான பாடல் இது. விழா மேடையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பஞ்சு சாரும், எஸ்.பி.முத்துராமன் அவர்களும் மேடைக்கு வந்து ஒரு பாடலுக்கான சிச்சுவேஷன் சொல்ல மேடையிலேயோ கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடினார் இளையராஜா. அந்த பாடலுக்கு வேறு வார்த்தைகளைப் போட்டு கங்கை அமரன் எழுதிய பாடல்தான் இந்த பன்னீர் புஷ்பங்(ங)ளே பாடல்.

சுரேஷ்கண்ணன் கூறுகிறார்…

இளையராஜாவின் இசைக்கு இதில் பெரும்பங்கு உண்டு. வித்தியாசமான படமென்றாலே ராஜாவிற்கு பயங்கர மூடு வந்துவிடுமோ என்னமோ. மனிதர் பின்னியிருந்தார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமி கூறுகிறார்…

கமல்தான் இளையராஜாவை இப்படத்துக்கு புக் செய்தார். இது மட்டுமல்ல படத்துக்காக பல விஷயங்களை கமல்தான் செய்தார்.

இப்படத்துக்கு கமலுடன் ரஜினியையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அனந்து சொன்னார். அனந்து, கமல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கேயே பேசி ரஜினியும் சம்மதித்தார். யாருக்கும் நாங்கள் அட்வான்ஸ் கொடுக்கவில்லை. பூஜை போட்டோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் பட ஆபீசுக்கே வருவார்கள். ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம் போட்டிருந்தோம். எங்கள் அலுவலகத்தில் பேன் கிடையாது. மறுநாள் இளையராஜா வரப்போகிறார் என்பதால் முதல் நாள் மாலையே பேன் வாங்கி மாட்டினோம். ஆனால் இளையராஜா வந்தபோது மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.

மூன்று பாடல்கள் கம்போசிங். கண்ணதாசனை வைத்து பாடல்கள் எழுதலாம் என்று தீர்மானித்தோம். எங்கள் அலுவலகத்துக்குப் பக்கமே கண்ணதாசன் நடத்திய கவிதா ஹோட்டல். அங்குதான் கவிஞர் இருப்பார். இசையமைப்பாளர்கள் அங்கே செல்வார்கள். அங்கே இளையராஜா வேறு ஒரு பாடல் கம்போசிங்கிற்காக வருகிறேன். அங்கேயே வந்து விடுங்கள் என்றார். நடந்தே சென்றோம்.

பிரம்பு நாற்காலியில் பனியன் போட்டுக் கொண்டு கவிஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் வசந்தகாலக் கோலங்கள்.. வானில் விழுந்த கோடுகள் பாட்டு போல எங்களுக்கு வேண்டும் என்றோம். அவர் ஒரு 20 பல்லவிகளை எங்களுக்குச் சொன்னார். எதுவுமே பிடிக்கவில்லை. எங்களுக்கு முழு திருப்தி இல்லையென்றாலும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். பாட்டெழுதிக் கொடுத்தார். படம் வெளியாகி ஃப்ளாப் ஆனதும் இப்படி ஒரு அபசகுனமான பாட்டை முதலில் எழுதினால் இப்படித் தான் ஆகும் என்று கூடச் சொன்னார்கள்.

அந்திமழை

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s