35-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இதே ஆண்டில் சிவாஜி நடித்து வெளிவந்த தியாகம் என்ற படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருந்தார். சிவாஜி சித்தரிக்கும் பாத்திரங்களின் மனசாட்சி குமுறும் போது காற்றில் இடி மின்னல் மழை கலந்திருக்கும். இந்தப் படத்தில் “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு… ஒன்று மனசாட்சி…” என்று இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகள் காற்றில் மின்சாரம் பாய்ந்தது. மொத்தம் 5 பாடல்கள் இந்த படத்திற்காக இளையராஜா இசையமைத்திருந்தார்.

சிவாஜி நடித்த படம் என்பதால் டி.எம்.எஸ் அவர்களே இந்தப் படத்தில் அதிகம் பாடியிருந்தார். எல்.ஆர். அஞ்சலி இந்த படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார். இளையராஜாவின் இசையில் இவர் பாடிய முதல் பாடல் “வருக என் தெய்வங்களே…” என்ற பாடல். இதே ஆண்டில் இவர் இளையராஜாவிற்காக இன்னொரு பாடலையும் வேறு ஒரு படத்திற்காகப் பாடியிருந்தார்.

ஜானகி பாடிய பாடல்களை வரிசைப்படுத்தினால் அதில் இளையராஜா தன் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து இவருக்கு எந்தமாதிரியான பாடல்களை தந்திருந்தார் என்பது தெரியும். அதே போலத்தான் இந்த படத்திலும் இரண்டு பாடல்கள். எப்போதும் மறக்க முடியாத பாடல்கள்.

ஜானகி பாடிய அந்த இரண்டு பாடல்களை கேட்கும்போதே நமக்குள் ஏதோ ஒன்று இறங்கும்.“வசந்தகாலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்”, “தேன் மல்லிப்பூவே பூங்தென்றல் காற்றே”சிவாஜி அவர்கள் நடித்த படங்களுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் இவை இரண்டும்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

One thought on “35-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. nathan March 20, 2014 at 2:27 AM Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s