ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்ட் ட்ரீ- என்.சுந்தரராஜன்


இப்போ ஃபாஸ்ட்ஃபுட் உலகம். ‘பனை வெச்சவன் பார்த்துட்டு சாவான்’ங்கிற மாதிரி காத்துக்கிட்டு இருக்க முடியாது. எல்லாமே சீக்கிரமா கிடைக்கணும். மரமா இருந்தாலும் உடனே அனுபவிக்கணும். அதனாலதான் மரம் வளர்க்கிற யுக்தியிலும் ஃபாஸ்ட் ஐடியாவை நான் கடைப்பிடிக்கிறேன்னு” சொல்கிறார் செப்பறை வளபூமி பசுமை உலகம் அமைப்பை நடத்தும் அர்ச்சுனன்.

மணியாச்சி ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தவர் அர்ஜுனன். பால் குடித்த மகன் மூச்சு திணறி இறந்தபின் வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டதாம். என்ன பாவம் செய்தேனோ? ஒருவேளை மகனோ, நானோ செத்து அடுத்த பிறவியில் பறவையா, விலங்கா பொறந்தா நாம தங்கறதுக்கு இடம் வேணுமே? இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிடுறாங்களேன்னு கவலை வந்ததாம். அப்போ தோன்றியதுதான் மரம் வளர்ப்பு. ஆனால், மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வர்றேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன். சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன். அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன். அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும். ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.

–நன்றி கல்கி

5 thoughts on “ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்ட் ட்ரீ- என்.சுந்தரராஜன்

 1. கிரி May 29, 2013 at 6:32 AM Reply

  இதை ஏற்கனவே வேறு ஒருவர் தளத்தில் படித்தேன். அப்போது இருந்தே இதைப் போல செய்து பார்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் போது இதை செயல்படுத்தி பார்த்துட வேண்டியது தான் :-). இது பற்றி என்னுடைய தளத்திலும் குறிப்பிடுகிறேன்.

  • BaalHanuman June 4, 2013 at 4:08 AM Reply

   நன்றி கிரி. உங்கள் அனுபவத்தைக் கண்டிப்பாகப் பகிருங்கள்…

 2. பாவம் இவர் நட்டு வளர்க்கட்டும். பின்னால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அதை வெட்டி எவனாவது காசு பார்க்க உதவியாக இருக்கும்.

  தேனியிலிருந்து எங்கள் ஊருக்கு போகும் வழியெங்கும் ஏகப்பட்ட மரங்கள் இருக்கும் இப்போது எதுவும் இல்லை. அனைத்தையும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டி தள்ளி விட்டனர். ஒரு மரம் விழுந்து கிடந்ததை பார்க்க முடியவில்லை. பல ஆண்டு வயதான மரம், அடி மர விட்டம் அவ்வளவு பெரிதாக இருந்தது. பதிலுக்கு மரம் நடவும் முடியாது. விரிவாக்கத்திற்கு என பலரின் நிலத்தை பறித்த பின் மரத்தை எங்கே நடுவது?

  • BaalHanuman June 4, 2013 at 4:06 AM Reply

   மிகவும் வருத்தமாக இருக்கிறது நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது…

 3. rathnavel natarajan July 26, 2013 at 4:42 PM Reply

  அருமையான பதிவு.
  நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s