33-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

காரைக்குடி நாராயணன் இந்த ஆண்டில் ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். இவர் கதை வசனம் எழுதிய நிறைய படங்கள் 1976-க்கு முன்பு நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டில் இவர் தயாரிக்க நினைத்த படத்திற்கு அச்சாணி என பெயர் சூட்டி படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார்.

அச்சாணி படத்தின் பெயரைக் கேட்டாலே எனக்கு சட்டென ஞாபகத்திற்கு வருவது இந்த விஷயம்தான். அது…

படத்தின் பூஜையன்று பாடல் பதிவு என்றும் முடிவு செய்யப்பட்டது. படத்தின் கதையை கேட்ட ராஜா இயக்குனர் கேட்டது போல இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து வாலி அவர்களை வைத்து பாடல்களும் எழுதி தயார் நிலையில் இருந்தனர்.

மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்….தாலாட்டு… பிள்ளை என்னை தாலாட்டு…. என இரண்டு பாடல்கள்.

சவுண்டு என்ஜினியர் இந்த படத்தின் பூஜை தினத்தன்றே வேறு ஒரு படத்திற்கும் (இசையமைப்பாளர் உபேந்திரகுமார்) ரெக்கார்டிங் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் யாராவது பாடல் பதிவு முடித்துவிட்டால் மதியம் 1 மணிக்குள் அடுத்த பாடல் பதிவை வைத்துக்கொள்ளலாம் என நினைத்தாரோ என்னமோ. பூஜை தினத்தன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவிற்குள் வர அங்கே வேறு இசைக்குழு இருந்தது. என்ன நிலவரம் என்பதை தெரிந்து கொண்ட இளையராஜா சவுண்டு என்ஜினியர் எஸ்.பி.ராமனாதனிடம் சென்று யார் ரெக்கார்டிங்கை வைத்துக்கொள்வது என கேட்க பதில் சொல்ல முடியாமல் சமாளித்துப்பார்த்திருக்கிறார். ஆனால் உபேந்திரகுமாரோ எது பற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கிவிட்டார்.

சரி இனி இங்கே வேலைக்காகாது என தெரிந்து கொண்ட இளையராஜா வேறு ஸ்டுடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது. இதற்குள் மதியம் 1 மணியை நெருங்கிவிட்டதால் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோவிற்கே சென்றனர். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் எதுவும் இல்லாததால் அங்கேயே பாடல் பதிவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து பாடல் ரிகர்சல் ஆனது.

ஜானகி வந்ததும் பாடல் ஒத்திகை பார்க்கப்பட்டு சரியாக வராததால் இரண்டு மூன்று டேக்குகள் போய்கொண்டிருந்தது. இளையராஜாவிற்கோ நிறைய சங்கதிகள் கற்பனையில் வந்துகொண்டிருக்க அவ்வப்போது ஜானகியிடம் சென்று மாற்றிக்கொண்டே இருந்தார். ஒரு டேக் நன்றாக வந்துகொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்க வேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம் கண்டக்ட் செய்த கோவர்த்தன் சார் கை காட்ட மறந்துவிட்டார்.

இளையராஜாவிற்கோ கோபம். “என்னண்ணே டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது பேக்ரவுண்ட் மியுஸிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?” என்று கேட்க அவரோ கூலாக, “பாட்டில் மெய் மறந்துட்டேன்யா” என்றிருக்கிறார். (இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருந்தியிருக்கிறார் இளையராஜா)

சரி டேக் போகலாம் என்று சொல்லி அடுத்த டேக்… ஜானகி பாடும் போது மூன்றாவது சரணத்தில்,

“பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது”

என்ற வரிகளை அழகாகப் பாடியவர் அதற்கு அப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டுவிட்டார். ஆர்க்கெஸ்டிராவிலோ எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். பொதுவாக டேக் கட் ஆனாலே “பேன் போடு” என்று சத்தம் போடுபவர்கள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் இருக்கிறார்களே என்று இளையராஜா கோவர்த்தன் சாரை பார்க்க, அவரோ வாய்ஸ் ரூமை கைகாட்டியிருக்கிறார். ஜானகி கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்க இளையராஜா என்னவென்று கேட்க, “டியூனும் வார்த்தையும் கலந்து ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்திவிட அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்” என்றாராம். ஜானகி இப்படி சொன்னதைக் கேட்ட எல்லோரும் உருகிப்போனார்களாம்.

இந்த “மாதா உன் கோவிலில்…” பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

1977-ல் நடந்த ஒரு நிகழ்ச்சி:

–நன்றி http://ilayaraja.forumms.net/

கவிக்குயில் படத்திற்கான பாடல்களை இளையராஜா கம்போஸ் செய்து கொண்டிருந்தார். இந்தப் படத்திற்காக இயக்குனர் சொன்ன சிச்சுவேஷன்களுக்கு இளையராஜா நான்கு பாடல்களை கம்போஸ் செய்திருந்தார். நான்கு பாடல்களுக்கான ட்யூன்களை இயக்குனர் தேர்வும் செய்து வைத்திருந்தார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

பாடல் பதிவு நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு சில வினியோகஸ்தர்கள் படத்தின் இயக்குனரின் சம்மதத்தோடு இளையராஜாவிடம் வந்து “இந்தப் படத்திற்கான பாடல்களை நாங்கள் கேட்க ஆசைப்படுகிறோம்” என்றனர். இளையராஜாவோ, “இன்னும் இந்த படத்திற்கான பாடல்களைப் பதிவு செய்யவில்லை” என்றார். “பரவாயில்லை.. நீங்கள் பாடிக்காட்டுங்கள்” என்றனர். இளையராஜாவோ இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களே என்று நான்கு பாடல்களின் ட்யூன்களையும் பாடிக்காட்டினார்.

ட்யூன்களை கேட்ட அந்த வினியோகஸ்தர்கள், ட்யூன்கள் நன்றாக இருக்கிறது என்றோ, நன்றாக இல்லை என்றோ சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்களோ, “இந்த நான்கு ட்யூன்களில் ஒரு ட்யூனை (குயிலே… கவிக்குயிலே… பாடல்) சொல்லி இது நன்றாக இருக்கிறது. ஆனால் மற்ற ட்யூன்கள் சரியில்லை இந்த பாடல்கள் திரையில் வரும்போது புகைபிடிக்க சென்றுவிடுவார்கள்” என்றனர். பஞ்சு சார் அவர்களை திட்டி வெளியே அனுப்பிவிட்டார். “இவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே, நீ வேண்டுமானால் பார், இவர்கள் சொன்ன இந்த பாடல்கள் எந்த அளவிற்கு வெற்றி பெறப்போகிறதென்று” என்று சொல்லி சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலை வெகுவாகப் பாராட்டி இந்த பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை பாட வைக்கலாம் என்றும் சொன்னார். இன்றும் கேட்போரை கிறங்க வைக்கும் பாடலான இந்த பாடலையும் சேர்த்து அந்த வினியோகஸ்தர்கள் சொன்ன அந்த விமர்சனம் இளையராஜாவை மிகவும் வருந்தச் செய்தது.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

3 thoughts on “33-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. Chandru May 28, 2013 at 1:44 PM Reply

    Good writing. Thanks for sharing

  2. nathan March 20, 2014 at 2:23 AM Reply
  3. nathan March 20, 2014 at 2:24 AM Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s