32-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

–நன்றி http://ilayaraja.forumms.net/

நாட்டுப்புறத்தானாக மட்டுமல்ல அதி நவீன நகரப்புறத்தானாகவும் தன்னால் திரை அவதாரம் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்க இதே ஆண்டில் சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தை எடுத்தார் பாரதிராஜா. தன் மீது அவர் வைத்த அதே நம்பிக்கையை இளையராஜா மீதும் வைத்திருந்தார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்தப் படத்திற்கு 16 வயதினிலே படத்தின் நாயகனையும், நாயகியையும் தேர்ந்தெடுத்திருந்தார். பாலியல் முனைப்புக் காட்டும் வடிவுக்கரசி, பயமும் அடக்கமும் இழைந்தோடும் ஸ்ரீதேவி, ஒரு கொலைகார வேட்கையை குரூரமாக மறைத்து வாழும் கமல்… என்று வலுவான பாத்திரப்படைப்புகளின் சுழற்சியில் படம் அழகாகச் செல்லும்.

பங்களா மர்மங்களுக்கும் தோட்டத்தில் முளைத்தெழும் கன்னியரின் கரங்களுக்கும் இடையே இன்ப நுகர்ச்சியில் கதகதப்பாக வளரும் கணங்களைப் பிரதிபலிக்க நினைவோ ஒரு பறவை… பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. படத்தின் மர்மச் சூழல்களுக்கு குந்தகம் விளைவிக்காமல் காதல் சொல்ல வேண்டிய கட்டம். பாடல் வரிகளும் சரி, இசையின் வண்ணமும் சரி கொஞ்சம்கூட குறைவில்லாமல் அமைந்திருக்கும்.

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது… பாடலுக்கும் இது பொருந்தும்.

ஜானகியுடன் சேர்ந்து கமலும், மலேசியா வாசுதேவனும் அழுத்திப் பாடாமல் நகர்புற கீதத்திற்கு உயிரூட்டியிருப்பார்கள்.

திகில் படத்திற்கு பின்னணி இசை சேர்ப்பு மிகவும் முக்கியமானது. அதை மிகச் சிறப்பாக செய்திருந்தார் இளையராஜா. நான்கரை கால்ஷீட்டில், 12,500 ஆர்க்கெஸ்ட்ரா செலவில் முடித்திருந்தார். இந்தப் படம் 25 வாரங்கள் ஓடி வெற்றிபெற்றது.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

One thought on “32-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. பின்னணி இசை என்றால் என்ன என்று காட்டுவதற்கு ஒரு பாடம். அந்த கை பூமியிலிருந்து வெளி வரும் போது வரும் இசை அட்டகாசம். இன்று ஒரு படத்திற்கு பாடல் அமைக்க வெளிநாடு போய் மாசக்கணக்கில் அமர்ந்து பாடல் “பிடிக்கின்றார்கள்”. நான்கரை கால்ஷீடில் ஒரு திரில்லர், அதோடு அருமையான பாடல்கள். அவருக்குள் அப்போது ஏதோ இசை பிசாசு அமர்ந்து வேலை பார்த்திருக்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s