இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியம்! -டி.எம்.எஸ்.


https://i2.wp.com/www.behindwoods.com/tamil-movie-news-1/may-09-01/images/t-m-soundarajan-02-05-09.jpg

சுஜாதா கூறுகிறார்…..

மெரீனாவில் மாலை நடந்து செல்லும்போது, சென்னையின் பல பெரிய மனிதர்கள் எதிரில் செல்வார்கள்.

பீட்டர் அல்ஃபோன்ஸ், ஏவி.எம்.குமரன், ஆர்.எம். வீரப்பன்… இப்படிப் பலர் கடக்கும்போது, ஒரு புன்னகையோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. விளம்பரம் போல ஒரு ‘ஹம் ஹை நா’ கையசைப்போ பரிமாறிக் கொள்வோம்.

போன வாரம் டி.எம்.எஸ்., சந்தன கலர் சபாரி சூட்டுடன், சென்ட் வாசனையுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தபோது, பேச வேண்டும் என்று தோன்றியதன் காரணம் – இளம் வயதில் அவருடைய பல பாடல்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன.

இப்போதுகூட ‘அவளுக்கென்ன‘வோ, ‘வந்த நாள் முத‘லோ, ‘அதோ அந்தப் பறவை போல‘வோ, ‘அந்த நாள் ஞாபக’மோ, ‘நான் ஆணையிட்டா’லோ டி.வி-யில் வரும்போது, விரல் சேனல் தாவத் தயங்குகிறது.

“எத்தனை பாட்டு பாடியிருப்பீங்க? எல்லாப் பாட்டும் நினைவிருக்கா?”

“கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடினதுதான் முதல் பாட்டு. அதிலிருந்து நான் பாடின பாட்டெல்லாம் நோட்புக்கில் வரிசையா பாடின தேதி, அதற்குப் பெற்ற தொகை எல்லாத்தையும் எழுதி வெச்சிருக்கேன். ஆயிரக் கணக்கில் இருக்கும்!’’

‘‘டி.எம்.எஸ்.-ங் கிறதுக்கு விளக்கம் என்ன?’’

‘‘மூணு விளக்கம் இருக்கு. ‘டி’ங்கறது எங்க சௌராஷ்டிர கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கும் பத்திய உணவு சார்ந்த ஊர்ப் பெயர் – தொகுளுவா (Thoguluva), ‘எம்’ங்கறது மீனாட்சி ஐயங்கார்(!), ‘எஸ்’ – சௌந்தர்ராஜன்.

இன்னொரு விளக்கம் – தியாகையர், முத்துசுவாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் இந்த மும்மூர்த்திகளுடைய இனிஷியலும் எனக்குக் கிடைச்சது ஒரு பாக்கியம்.

மூணாவது – ட்ரான்ஸென்ட்டல் மெடிட்டேஷன் சர்வீஸ், என் பாட்டுகள் மூலம் கொடுக்கறது!

பாடும் குயிலின் இசைப் பயணம்‘னு என் வாழ்க்கையை நானூறு பக்கம் புத்தகமா போட்டிருக்காங்க, மணிவாசகர் பதிப்பகத்துல! படிச்சுப் பாருங்க!”

‘‘உடல்நிலை எப்படி இருக்கு?’’

“டயபடீஸ் தொல்லை கொடுக்குது. கால் வீங்கிக்குது. இப்பக் கொஞ்சம் காது கேட்கலை. அதனால, மத்த பேரோடு பேசும் போது இரைச்சலா பேச வேண்டியிருக்குனு ஹியரிங் எய்டு வெச்சிருக்கேன். நிறையப் பாடிட்டேன். இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியமா இருக்குது!” என்றவர், சின்ன மூன்றறைப் பெட்டியைக் காட்டி, “பாருங்க… தனித்தனியா காலை, மத்தியானம், இரவுனு ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மாத்திரை சாப்பிடறேன்!” என்றார்.

“நானும்தான்!” என்றேன்.

“பெரிய பெரிய நடிகர்களெல்லாம் என் குரலைப் பயன்படுத்தி, சினிமாவிலேயும் அரசியல்லேயும் உச்சத்துக்கு உயர்ந்தாங்க!’’

‘‘அவங்க உங்களுக்கு நன்றி சொன்னாங்களா?”

உதட்டைப் பிதுக்கி, “ம்ஹூம்..! ஆனா, அவங்க எல்லாம் இறந்து போயிட்டாங்க. குரலில் மட்டும் உசுரோட இருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்க பாராட்டு போதும்! இப்பக்கூட சிங்கப்பூர்ல ஒரு பாராட்டு விழாவுக்கு அழைச்சிருக்காங்க. ஏப்ரல்ல போறேன்!”

“டயபடீஸைப் பார்த்துக்குங்க. இருநூறுக்கு மேல போஸ்ட்பிரண்டியலைத் தாவ விடாதீங்க. தினம் நடங்க. பாட்டை விட்டுராதீங்க!” என்றேன்.

“வரேங்க…” என்று கற்பகவல்லியின் ஆனந்த பைரவியைக் கோடி காட்டிவிட்டு, எழுந்து சென்றார் டி.எம்.எஸ்.

‘‘எல்லாரும் விருப்பு வெறுப்பு இல்லாம கேக்கக்கூடிய குரலை எனக்குக் கொடுத்து, பாடக்கூடிய பக்குவத்தைத் தந்ததே முருகப் பெருமான்தான்.

சில வருஷத்துக்கு முன், மலேசியாவுல கச்சேரி… அங்கே ரசிகர் ஒருத்தர், இந்த கல் பதித்த வேலையும் கந்தனையும் கொடுத்தார். எங்க ஆயுசு நீடிச்சிருக்கறதுக்கு, இவைதான் காரணம்! தினமும் காலைல முருகனை வழிபட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன்! எனக்குள்ளே ஆன்மிக சிந்தனை வந்ததுக்கு பழநி முருகனே காரணம்!

ஒருமுறை, பழநி கோயிலுக்குப் போனவன், சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன்.

அவ்ளோதான்… பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு. ‘கடைசில நாமளும் சாம்பலாத்தானே போகப் போறோம்’னு சட்டுன்னு ஒரு எண்ணம். அந்த நிமிஷத்துல இருந்து முருகனோட பாடல்களைப் பாடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்; முருக பக்தனாவே மாறிப் போனேன்.

ஒருமுறை… காஞ்சி மகா பெரியவாளைப் பத்தின பாடல்களை நான் பாடி, அதை பெரியவாள் கேட்டு ரசிச்சதோட, அந்த கேசட் மேல தேங்காயை சுத்தி திருஷ்டி கழிச்சாராம். இதை என் ரசிகர்கள் சொல்லவும் அடுத்ததா… அவரை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைச்சது.

சைகையில பக்கத்துல வரச்சொன்ன சுவாமிகள், ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார். நானும் பாடினேன். உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார்.

இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?’’

– இப்படி நெக்குருகிச் சொல்பவர்… பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

Advertisements

13 thoughts on “இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியம்! -டி.எம்.எஸ்.

 1. இந்த உலகம் இருக்கும் வரை அவர் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்… எங்களின் மூத்தவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்…

  • BaalHanuman June 4, 2013 at 4:14 AM Reply

   வாங்க தனபாலன்…

 2. Shankar May 26, 2013 at 2:01 AM Reply

  எப்பவோ TMS சொல்ல கேட்டது – அடிமைப்பெண் படத்திற்கு SPB பாடியதனால் இவருக்கு வருத்தம் !

  அடுத்த முறை MGR படத்திற்கு கூப்பிட்ட போது ரேட் டபிள் ஆக்கி கேட்டாராம்.

  அன்றிலிருந்து ஒரு பாட்டுக்கு 500 ஆக இருந்தது 1000 ஆகிற்றாம்.

  கண்ணதாசன் எழுதி TMS பாடி சிவாஜி நடித்தது எல்லாம் லேசில் மறக்க முடியுமா?

  TMS மறைந்துவிட்டார்.ஆனால் அவர் பாடல்கள் என்றும் இருக்கும், இனிக்கும்.

  • BaalHanuman June 4, 2013 at 4:14 AM Reply

   நன்றி ஷங்கர் உங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும்…

 3. Right Mantra Sundar May 26, 2013 at 12:34 PM Reply

  பாயசம் கேட்டா, கேசரியும் சேர்த்து போனஸா கொடுத்தாப்ல இருக்கு பதிவு.

  சுஜாதா அவர்கள் டி.எம்.எஸ் அவர்களை பற்றி கூறியிருக்கும் சம்பவத்தையும் சேர்த்து தந்தமைக்கு நன்றிகள்!!!

  திரு. டி.எம்.எஸ். அவர்களை சந்தித்து அளவளாவி, ஆசியும் பெற்றதை என் வாழ்நாளின் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

  – ரைட் மந்த்ரா சுந்தர்

  • BaalHanuman June 4, 2013 at 4:13 AM Reply

   நீங்கள் கேட்டதால் தான் இந்தத் தனிப் பதிவே 🙂

 4. Chandramouli May 27, 2013 at 6:19 AM Reply

  TMS died in a ripe age and in a way, his demise might have been a relief from all diseases. However, we still feel sorrow deep within. What a range of songs he has rendered – many of them real gems, particularly the carnatic based film melodies. His songs on Lord Muruga or ‘Karpagavalli nin’ were pleasing to the ears and they always touch our hearts. Since his retirement, there was not even one who is closer to replace him – perhaps so, in future too. He was indeed a ‘Sivaji’ in playback singinging. His unique voice, the throw and ‘spashtama’ word by word understanding of the beauty of Tamil lyrics penned by another great Kannadasan were unparalleled. RIP TMS! You will remain in our hearts through your songs.

 5. கிரி May 27, 2013 at 12:32 PM Reply

  TMS அவர்கள் பாடிய பாடலால் தலைவர் முருகன் இன்னும் பிரபலமானாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது 🙂 உண்மையாகவே முருகனை எனக்குப் பிடிக்க TMS அவர்கள் பாடலும் முக்கியமான காரணம். இப்பவும் முருகன் பாடலை கேட்கும் போது இது போன்ற பாடல்களை இனி யாராலும் கொடுக்க முடியாது என்ற எண்ணம் வரத் தவறுவதில்லை.

  இவரை திரையுலகம் சரியான முறையில் கவுரவிக்கவில்லை என்ற மனக்குறையுண்டு.

  TMS அவர்கள் மறைந்தாலும் இந்த உலகம் வரை அவரது பாடல்கள் மறையாது. என்றும் இந்தப் பாடல்கள் அவரை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். திரைப் பாடல்கள் கூட தலைமுறை இடைவெளியில் மறைந்து விட முடியும் ஆனால், முருகன் பாடல்கள் க்கு என்றும் அழிவே இல்லை.

  • BaalHanuman June 4, 2013 at 4:13 AM Reply

   உண்மைதான் கிரி. தன்னுடைய பாடல்கள் மூலம் நம் நெஞ்சங்களில் எப்போதும் டி.எம்.எஸ். இருப்பார். நீங்கள் முருக பக்தர் என்று தெரியும். அதற்கு இவரும் ஒரு காரணம் என்று இப்போதுதான் தெரியும் 🙂

 6. முருகன் பிரபலமானாரோ இல்லையோ, எம்.ஜி.ஆர் பிரபலமானார். ஊருக்கு சென்ற போது பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்தேன். அன்று ஏதோ அ.தி.மு.க கட்சி தெருமுனைக் கூட்டம். பெரிய ஸ்பீக்கரில் எம்.ஜி.ஆரின் பாடல்கள். நேரம் போனதே தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். கேட்கும் போது அது TMS பாடல்கள் என்று தோன்றவில்லை. எம்.ஜி.ஆர் பாடல்கள் என்றுதான் தோன்றியது.

  ஏதோ எம்.ஜி.ஆரே நேரில் வந்து நமக்கு தத்துவ உபதேசமும், புரட்சியைப் பற்றியும் பாடுவது போன்ற பிரமையை உண்டாக்கிவிட்டார்.

  அவரின் பாட்டும் நானே, நீயே உனக்கு என்றும் நிகரானவன், சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ஃபேவரைட்.

 7. Pandian June 3, 2013 at 4:17 AM Reply

  ரசிகர்களைத் தவிற யாரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெறாதவர் டிஎம்எஸ். என்ன இருந்தா என்ன சார். அவர்தான் கிங்! அடுத்த கிங் SPB!

  • BaalHanuman June 4, 2013 at 4:04 AM Reply

   உண்மைதான் பாண்டியன் நீங்கள் கூறுவது…

 8. vathsala June 10, 2013 at 4:19 PM Reply

  இசை ராஜா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s