31-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

தன் முதல் படமான 16 வயதினிலே-க்கு பிறகு பாரதிராஜா தன் பரிவாரங்களோடு இந்த ஆண்டு மீண்டும் ஒரு சாதாரண கதையோடு கிழக்கே போகும் ரயிலில் வந்தார். “ஊரில் கவிதை எழுதித்திரியும் ஒரு உருப்படாத வாலிபனுக்கும், கபடமில்லாத ஒரு பெண்ணுக்கும் காதல். காதலுற்ற நாயகன் நகரத்திற்கு போய் பெரிய கவிஞனாகத் திரும்பி வந்து நாயகியை கைபிடிக்கிறான்.” இதுதான் கதை. புதுமுகங்களான ராதிகாவும், சுதாகரும் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஜீவனூட்டினார்கள். 16 வயதினிலே போலவே இந்த படத்திற்கும் மிக அருமையான பாடல்களைத் தந்திருந்தார் இளையராஜா.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்த படத்தில் நடிப்பதற்காக வந்த ராதிகாவைப் பார்த்து “என்ன சார் இந்த மாதிரி ஒரு பொண்னை செலக்ட் பண்ணியிருக்கீங்க!” என்று பாரதிராஜாவிடம் உதவி இயக்குனரான பாக்கியராஜ் சொல்லியிருக்கிறார். காரணம் ராதிகா அணிந்து வந்திருந்த நாகரீகமான உடையைப் பார்த்த அவருக்கு கிராமத்து நாயகி வேடம் பொருந்துமா என்று சந்தேகம். ஆனால் படத்தில் ஒரு எதார்த்தமான கபடமில்லாத நாயகிக்கு நன்றாகவே பொருந்தியிருந்தார்.

சுத்த சாவேரியில் அமைந்த “கோயில் மணியோசை” பாடலின் அழகான வர்ண மெட்டும், மலேசியா வாசுதேவன், ஜானகியின் குளிர்ச்சியான குரல்களும் கண்ணதாசனின் வரிகளும் மனதிற்குள் வந்தமர்ந்து போகமறுக்கச் செய்யும். கோயில் மணியோசையை காதல் சமிக்ஞை ஆக்கியதும் இந்த பாடலில்தான்.

சுத்ததன்யாசி ராகத்தில் மாஞ்சோலை கிளிதானோ… மாந்தானோ… என்ற பாடலை பாட இளையராஜாவின் தேர்வு மிகச் சரியான பொருத்தமாக இருக்கும். பாடலைப் பாடியது ஜெயசந்திரன். இந்த பாடலில் பரத நாட்டியமே ஆடத்தெரியாத ராதிகாவை ஓரளவு நன்றாகவே படம்பிடித்திருப்பார் பாரதிராஜா.

இந்தப் படத்தில் வானம்பாடி கவிஞர் சிற்பி எழுதிய மலர்களே… நாதஸ்வரங்கள்… என்ற ஒரு அருமையான பாடலை ஹம்சத்வனி ராகத்தில் அமைத்திருந்தார் இளையராஜா. இசைத்தட்டில் வெற்றிபெற்ற அந்தப் பாடல் ஏனோ படத்தில் இடம்பெறவில்லை.

தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற நாயகனுக்கு பாட்டெழுதுவதென்றால் உயிர் என்று தெரிந்து கொண்ட திருடர்கள் நாயகனை பாடச் சொல்லி கதிரெல்லாம் திருடிச் செல்வது போல ஒரு காட்சி வரும்.ஆடிப்பாடி கதிரறுப்பான் ஆனந்தத்தோடு என்ற பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. கேட்டாலே போதும் கதிரறுப்பவர்களுக்கு அலுப்பே தட்டாது.

இளையராஜாவின் இசையில் பாக்யராஜ் எழுதிய முதல் பாடல் இந்த ஆடிப்பாடி கதிரறுப்பான் ஆனந்தத்தோடு பாடல்.

ரயில் செல்லும் ஓசையை அடித்தளமாக வைத்து பூவரசம்பூ பூத்தாச்சு… பாடலில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் இதயத்தின் சிறகடிப்பையும் தன் இசையில் வெளிப்படுத்தியிருப்பார். ஜானகியின் குரலிலும் இது பரிபூரணமாக வெளிப்பட்டிருக்கும்.

ஒரு உணர்ச்சியை இசையில் படம் பிடித்துவிடுவதைவிட ஒரு இசையமைப்பாளருக்கு வேறு என்ன வெற்றிவேண்டும்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

5 thoughts on “31-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. rathnavelnatarajan May 25, 2013 at 7:55 AM Reply

  அருமையான பதிவு.
  நன்றி.

  • BaalHanuman June 4, 2013 at 4:16 AM Reply

   நன்றி ரத்னவேல் சார்…

 2. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கேட்பது மட்டுமே நலம். பார்க்க நினைத்தால் கொஞ்சம் ஆபத்துதான்.

 3. கிரி May 27, 2013 at 12:35 PM Reply

  “இந்த படத்தில் நடிப்பதற்காக வந்த ராதிகாவைப் பார்த்து “என்ன சார் இந்த மாதிரி ஒரு பொண்னை செலக்ட் பண்ணியிருக்கீங்க!” என்று பாரதிராஜாவிடம் உதவி இயக்குனரான பாக்கியராஜ் சொல்லியிருக்கிறார். காரணம் ராதிகா அணிந்து வந்திருந்த நாகரீகமான உடையைப் பார்த்த அவருக்கு கிராமத்து நாயகி வேடம் பொருந்துமா என்று சந்தேகம். ”

  இதை “முதல் மரியாதை” நிகழ்ச்சியில் பாரதிராஜா விவரித்த போது ரசிக்காதவர் எவரும் இருக்க்க முடியாது 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s