30-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

என் குரு இளையராஜாவின் இசையை அறிமுகப்படுத்தியபின் நான் அவருடைய பல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டு, என் குருவுக்கும் அவ்வப்போது போட்டுக் காண்பிப்பேன். ஒரு கட்டத்துக்கு மேல் என் குரு இளையராஜாவைப் பற்றி எதுவுமே சொல்லுவதில்லை. ஒரு வித ஆயாசம் கூட அவருக்கு வந்துவிட்டது. இந்த மனுஷனைப் பற்றி என்ன சொல்வது என்றுதான். என் குரு கொண்டாடும் பிருந்தாவன ஸாரங்கா, பூர்ய தனஸ்ரீ, கலாவதி – இளையராஜாவுடையது.

என் குருவைப் பார்க்க ஹரிபிரஸாத் செளராஸ்யா அடிக்கடி வருவார். என் குருவைப் பற்றி பொதுஜனங்களுக்குத்தான் தெரியாதே தவிர, ஹிந்துஸ்தானி ஜாம்பவான்களுக்குத் தெரியும். என் குருவின் ஒரு சிறு அங்கீகரிப்பான தலையசைப்புக்காக ஏங்கும் பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். செளராஸ்யா அப்படி அடிக்கடி வந்து அவரிடம் ஆசி வாங்கிச் செல்வார். ஒருமுறை அப்படி அவர் வந்திருந்த போது பேச்சு இளையராஜாவைப் பற்றி வந்தது. ஹரிபிரஸாத் செளராஸ்யா இளையராஜாவைப் பற்றிச் சொன்னவற்றை யாரும் நம்ப மாட்டார்கள்.செளராஸ்யா ‘nothing but wind’ என்ற இளையராஜாவின் இசைத் தொகுப்பில் வாசித்திருக்கிறார். தனித்தனி நோட்ஸ்களைப் பார்த்த அவர் அவ்வளவு impress ஆகவில்லை.. ஆனால் வாசிக்க வாசிக்க அவர் அதில் பொதிந்திருந்த மேதைமையைக் கண்டுகொண்டாராம். அதன்பின்பு அடுத்தடுத்த நாட்களுக்கு வீட்டில் ப்ராக்டிஸ் செய்துகொண்டுதான் போனேன் என்றார் அவர்.  ஹரிபிரஸாத் இப்படியெல்லாம் ப்ராக்டிஸ் செய்துதான் ஒருவிஷயத்தைக் கொண்டுவரவேண்டும் என்றிருக்கக் கூடிய ஆள் இல்லை. அவர் உட்கார்ந்த இடத்தில் இசை பொங்கிப் பிரவாகமாக வரும். அவர் என் குருவுக்காக வாசித்த ஹிந்தோளத்தை மூன்று மணி நேரம் கேட்டவன் நான். அப்படியொருவர் சாதகம் செய்துவிட்டு வாசிக்கப்போகிறார் என்றால்? அந்த இசைத்தொகுப்பு வெளியானதும் கேட்டுவிட்டு, தானே கிளம்பி நேரடியாக இளையராஜாவை சந்தித்துப் பாராட்டிவிட்டு வந்தேன் என்றார் அவர்.

பண்டிட் ரவிஷங்கர்பண்டிட் அஜோய் சக்ரபர்த்தி இவர்களும் இளையராஜாமீது மிகமிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர்கள்.

–ராபர்ட் சின்னதுரை

தொடரும்…

Advertisements

One thought on “30-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. vathsala May 25, 2013 at 3:11 PM Reply

    interesting article.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s