ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி – மே 24, 2013


ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசிம்மத் தலங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது சிம்மாசலம். இங்குள்ள வராஹ நரசிம்ம சுவாமி ஆலயம் 800 அடி உயரக் குன்றின் மீது அமைந்துள்ளது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆலயத்தின் விமானம் ஒரிய பாணியில் பளபளக்கிறது. பெருமாளின் திவ்யத் தலங்களில் முக்கியச் சிறப்பு வாய்ந்தது. இங்கே பெருமாள் வராஹமூர்த்தியாகவும், நரசிம்மராகவும் இரண்டு அவதார நிலைகளில் எழுந்தருளியிருக்கிறார். அது மட்டுமல்ல; வராஹம், சிம்மம், மனிதன் என மூன்று உருவங்களைக் கொண்டவராக சேவை சாதிக்கிறார்.

இதற்குக் காரணம் என்ன?

அரக்கன் இரண்யகசிபு, தன்னையே கடவுளாக வழிபட வேண்டும் என்று கட்டளையிட்டு அராஜக ஆட்சி நடத்தினான். கட்டளையை மீறினால் மரணம்! மக்கள் பயந்து இரண்ய கசிபுவையே வேண்டா வெறுப்பாக வணங்கினர். ஆனால், இரண்யகசிபுவின் குழந்தை பிரகலாதன் மட்டும் ஸ்ரீமந் நாராயணன் நாமத்தை உச்சரித்தான்.

தன்னை ஆராதனை செய்யாதவன் தனது மகனாக இருந்தாலும், இரண்யகசிபு மன்னிக்கவில்லை. தண்டிக்க முனைந்தான். பகவான் சினந்தான். நரசிம்மராக வந்து இரண்யகசிபுவை வதைத்தான். வதம் முடிந்த பின் பெருமாள், தன் பக்தனைக் காத்தருளிய அதே குன்றில் அதே திருவுருவுடன் நின்ற திருக்கோலத்தில் அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளினார்.

காலப்போக்கில் அந்த அர்ச்சா மூர்த்தியை புற்று வளர்ந்து மூடியது. திரேதாயுகத்தில் அட்சய திருதியை நன்னாளில் புரூரவன் என்ற அரசனின் கனவில் இறைவன் தன் இருப்பைத் தெரிவித்தார்.

அரசன் புரூரவன் அந்தப் புற்றுமண்ணை நீக்கி சுவாமியை அந்தக் குன்றின் மீதே பிரதிஷ்டை செய்து ஆலயமும் எழுப்பினான். பெருமாள் பிரகலாதனைத் தாங்கிய குன்றானது சிம்மாசலம் என்றாயிற்று.

வராஹ நரசிம்மர் மேற்கு நோக்கி உள்ளார். இரண்டு அவதாரங்கள், மூன்று உடல் அமைப்புகளுடன் சேவை சாதிக்கும் திருக்கோலம்.

திருமுகம் வராஹம்.

இடுப்புக்குக் கீழே சிம்மம், சிம்மவால்.

கால்களும் கைகளும் மனிதர்களுக்கு உள்ளது போல!

வராஹ மூர்த்தியை பூமாதேவி எப்பொழுதும் ஆராதனை செய்வதால், பாத தரிசனம் கிடையாது. சுவாமியின் பாதங்கள் பூமிக்குள் பாதாளத்தில் உள்ளன.

நிஜ ரூப தரிசனம் அட்சய திருதியை அன்று மட்டுமே சுவாமியின் நிஜ ரூப தரிசனம். அன்றுதான் அரசன் புரூரவனுக்குத் தரிசனம் தந்த நாள்.

அட்சய திருதியை நாளில் 12 மணி நேரத்திற்கு மட்டும் சுவாமியின் நிஜ ரூப தரிசனத்தைக் காணலாம். அதன்பிறகு சந்தனக்குழம்பு சாத்தப்படும். அட்சய திருதியை நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் சிம்மவல்லி தாயாரின் தரிசனம்.

தாயார் சன்னிதிக்கு நேர் எதிரில் அலங்காரமான தூண் – பட்டாடைகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கம்ப ஸ்தம்பம் என்று பெயர். இந்தத் தூணில் சந்தான கோபாலஸ்வாமி திருவுருவமும், சக்கரமும் பிரதிஷ்டையாகியிருக்கிறது.

மக்கள் கட்டணம் செலுத்தி தூணைக் கட்டியணைத்து குழந்தைப்பேறு, தேக ஆரோக்கியம் உள்ளிட்ட பேறுகள் பெற வேண்டிக் கொண்டால், வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன என்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திருந்து 18 கி.மீ.. அனைத்து நகரங்களிலிருந்தும் விசாகப்பட்டினத்துக்கு ரயில்கள், பேருந்துகள் செல்கின்றன.

தரிசன நேரம்: காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை.

கே. ராஜலட்சுமி, சென்னை

–நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்

Advertisements

3 thoughts on “ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி – மே 24, 2013

  1. விளக்கத்திற்கும் தகவலுக்கும் மிக்க நன்றி…

  2. Rajarajeswari jaghamani May 25, 2013 at 2:14 AM Reply

    அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s