29-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இந்த தத்துவம் ஒரு பக்கமென்றால் இதே ஹார்மனி கான்செப்ட்டின் இன்னும் கடினமான வடிவமான கெளண்ட்டர்பாய்ண்ட் இன்னும் இந்திய இசையில் இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக வெளிக்கொணரவே முடியவில்லை.

என் கண்மணி உன் காதலிகண்மணி அன்போடு காதலன்,  பருவமே புதிய பாடல் பாடு,  சிட்டுக்குருவி முத்தம் தருது – ஒன்றா இரண்டா. உங்களுக்குத் தெரிந்தே இருக்கும் – கெளண்ட்டர் பாய்ண்ட் என்பது ஒரே சமயத்தில் வெவ்வேறு ட்யூன்களை வாசிப்பது. யோசித்துப் பாருங்கள். கேட்பதற்கு ஒரே இரைச்சலாக cacaphony-ஆக இருக்காது? ஆனால் சமகாலத்தில் வாசிக்கப்படும் ஸ்வரங்கள் (வெவ்வேறு ட்யூன்களில் இருப்பவை), ஹார்மனியாக இருக்கும்போது கிடைக்கும் அனுபவம் out of the world என்று பழங்காடியாகத்தான் சொல்லமுடியும். இளையராஜா இந்த கெளண்ட்டர் பாய்ண்ட் விஷயத்தை மிக மிக சர்வசாதாரணமாகச் செய்கிறார். பல பாடல்களில் நாம் கேட்கும் ஒரு விநாடியில் பின்னணியில் நான்கு வெவ்வேறு ட்யூன்கள் – கிடார், ப்யானோ, வயலின், குரல் – என வந்துபோகும். அக்னிநட்சத்திரத்தின் பாடல்களில் அவற்றைக் கேட்கலாம். கிட்டத்தட்ட எல்லா பாடல்களிலும் அது உண்டு என்றாலும், அக்னிநட்சத்திரம் பிரபலமான ஒன்று என்பதால் அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன். இந்த ஹார்மனி, கெளண்ட்டர் பாயிண்ட் போன்ற விஷயங்களெல்லாம் தெரியாத பலரும், இதிலென்ன புதுமை – இதைத்தான் எம்.பி.ஸ்ரீனிவாசன் செய்துவிட்டாரே, இதைத்தான் எல்.சுப்பிரமணியம் செய்துவிட்டாரே என்று கேட்கிறார்கள்.

–ராபர்ட் சின்னதுரை

தொடரும்…

Advertisements

2 thoughts on “29-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. கிரி May 27, 2013 at 12:42 PM Reply

  என் கண்மணி பாடல் ஒரு அருமையான இசை.. அப்பவே வித்யாசமாக கொடுத்து இருப்பார். ஏம்மா! கருவாட்டு கடை..நல்லா சொன்னேள் போங்க..தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இறங்கு 🙂

  பட்டாசான பாட்டு .. எப்படி இப்படி எல்லாம் யோசித்து போட்டு இருப்பாங்க என்று எனக்கு ஆச்சர்யமா இருக்கும். அந்தக் காலத்திலேயே இதெல்லாம் பெரிய விஷயம் தானே… இந்தப்பாடலை அப்போது முதல் முறையாக கேட்ட போது அனைவரும் என்ன ஃபீல் செய்து இருப்பார்கள்… 🙂

 2. கிரி May 27, 2013 at 12:46 PM Reply

  அன்போடு பாடல் , பருவமே பாடல் எல்லாம் அசத்தலோ அசத்தல். இதில் பருவமே பாடலின் அந்த சத்தத்தை ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டினார்கள்.. அருமை.

  சிட்டுகுருவி பாட்டு.. ஹையோ கலக்கல். இவரோட இசையை பற்றி பாராட்டினால் அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு பாட்டும் ரத்தினம். எவ்வளவு திறமை இருந்தால் இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை தர முடியும்…

  என்ன.. தற்போது இவருடைய தலைகனத்தால் அனைவரின் வெறுப்பை சம்பாதித்து வருவது வருத்தம் அளிக்கிறது. இதை மட்டும் சரி செய்தால்.. எங்கேயோ சென்று இருப்பார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s