28-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

எனக்குத் தீயை மிதித்தது போலிருந்தது. நான் சினிமாக்காரர்களையே ஒத்துக்கொள்கிறவன் இல்லை. பீதொவன், மொட்ஸார்ட், பாஹ், உஸ்தாத் பிஸ்மில்லாகான், உஸ்.ஆமிர்கான், உஸ்.அல்லாடியாகான், கொஞ்ச கொஞ்சம் கர்நாடக சங்கீத மேதைகள் போன்றோரின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். அதனாலேயே கொஞ்சம் திமிரோடு இருப்பவன். ஆனால் என் குரு சொல்லும் திரையிசைக்கலைஞர்களான எஸ்.டி.பர்மன், நெளஷாத், பழைய இசைமேதைகளை ஒத்துக்கொள்பவன். இப்போது திடீரென்று இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறாரே? அடுத்து தேவாவா? (அப்போது ரஹ்மான் வந்திருக்கவில்லை) என அதிர்ந்தேன்.

அவர் எனக்குப் போட்டுக்காட்டிய பாட்டு – ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என்ற ‘நாயகன்’ திரைப்படப்பாடல்.

அதை முதல்முறை கேட்டவுடனேயே நான் அது ஒரு இசைச்சாதனை எனக் கண்டுகொண்டேன். அப்பாடல் இன்றும் பெரும்பாலானோரால் தேஷ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது ஷ்யாம்-கல்யாண் என்ற அரிதான ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்த பாடல். என் குரு மீண்டும் மீண்டும் சொன்னார்: “வாய்மொழி சொன்னால் தெய்வீகம்” என்ற இடம் முடியும் இடத்திலிருக்கும் ஷ்யாம்-கல்யாணின் பிடியைக் குறித்து அவர் அப்படி சிலாகித்தார். போலவே “இசைமழை எங்கும் பொழிகிறது” என்ற வரி. “என்ன ஒரு ராகம். அதற்கு இவன் தீட்டியிருக்கும் வர்ணம்தான் என்ன!” என்றொரு அங்கலாய்ப்பு அவருக்குள். எனக்கும்தான். நான் ஷ்யாம்-கல்யாண் தவிர இன்னொன்றையும் கண்டுகொண்டேன். எனக்குள் இருந்த மேற்கத்திய இசைக்கலைஞன் விழித்துக்கொண்டான். அப்பாடலில் அவர் அமைத்திருந்த ஹார்மனி. முக்கியமாக இடையிசைகளில். அப்படியொரு ஹார்மனியை இந்தியத் திரையிசையில் அதற்கு முன் கேட்டதில்லை. அதை ஃப்யூஷன் என்று சொல்வது அப்பாடலில் வெளிப்பட்டிருந்த மேதைமைக்கு நான் செய்யும் துரோகம். உங்களுக்கே தெரியும் மேற்கத்திய இசையின் சாஸ்திரிய சங்கீதத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரம் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் மேற்கத்திய இசையில் அந்த கான்செப்ட் உண்டு. இப்போது அந்த தத்துவத்தை இந்திய இசையில் பொருத்தும்போது, இந்திய மரபிசையின் ராகத்தில் அதில் ஒலிக்கும் ஸ்வரங்களுக்கு ஹார்மனியான (அதோடு சேர்ந்து கேட்டால் அபஸ்வரமாக ஒலிக்காமல், ஒத்திசைவாக இருக்கும் ஸ்வரம்) ஸ்வரத்தை – அதன் கார்ட் வடிவத்தோடு சேர்ந்து இசைத்தால் ஒரு பிரமாதமான இசையனுபவம் கிடைக்கும். இதையே நான் இளையராஜாவின் இசையிலிருந்துதான் புரிந்துகொண்டேன். அப்படி ஹார்மனியாக ஒரு விஷயத்தைச் செய்யவேண்டுமென்றால் – இந்திய மரபிசை, மேற்கத்திய இசை இரண்டிலும் பிரமாதமான நிபுணத்துவம் இருக்கவேண்டும். அந்த நிபுணத்துவம் வெளியே துருத்திக்கொண்டு தெரியாத அளவுக்கு அழகியல் ரசனை இருக்கவேண்டும்.

பெரும்பாலும் இந்திய இசையில் ஃப்யூஷன் என்று சொல்லப்படுபவை, இந்த இடத்துக்குள் வரவே முடிவதில்லை. மேற்கத்திய ஸ்கேல்களையும், இந்திய ராகங்களையும் அடுத்தடுத்து வாசிக்கும் ஒரு நுட்பமே பெரும்பாலான ஃப்யூஷன்களில் இருக்கின்றன. நான் பெரிதும் மதிக்கும் எல்.சுப்ரமணியம், பண்டிட் ரவிஷங்கர், எல்.ஷங்கர் – ஜான் மெக்லாலின் போன்றோர் செய்யும் ஃப்யூஷன் இந்த வகையே.

–ராபர்ட் சின்னதுரை

தொடரும்…

2 thoughts on “28-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. ராஜாவை விமர்சிப்பவர்கள் இது போன்று அவரது இசையை நுணுக்கமாக அலசி விமர்சித்தால் பரவாயில்லை. அவர் வெள்ளை வேட்டி கட்டுகின்றார், திருநீறு பூசுகின்றார், வீட்டிற்கு வந்தவனுக்கு தண்ணீர் தருவதில்லை, அதனால் அவர் இசை பிடிக்காது என்று பினாத்தும் பல …………………. ஏற்ற தொடர்.

  2. vathsala May 21, 2013 at 4:22 PM Reply

    arputhamaana isaiththiramai. saraswathi deviyin arul!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s