அம்பலம் – சுஜாதா தேசிகன்


sujatha_portrait-by-desikanDesikan Narayanan

Note from BalHanuman:

மேலே உள்ள சுஜாதா portrait – ஐ வரைந்தவர் வேறு யாருமில்லை. நமது சுஜாதா தேசிகன் தான்.

ஓவர் டு தேசிகன்…

எழுத்தாளர் சுஜாதா மறைந்த சில வாரங்களுக்கு பிறகு அவர் அம்பலத்தில் எழுதிய வாரம் ஒரு பாசுரம், கட்டுரைகள், கேள்வி பதில்களை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தில் அதை ஒவ்வொன்றாக திறந்து ‘கட் & பேஸ்ட்’ செய்ய ஆரம்பித்தேன். (சுஜாதாவின் நண்பராக இருந்தாலும், அம்பலத்தில் ஓசியில் படித்ததில்லை, சந்தா பணம் கட்டி தான் கட்டுரைகளை படித்தேன்).

எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்திருக்கலாம், செய்யவில்லை. நேரம் கிடைக்கும் போது கொஞ்ச கொஞ்சமாக செய்யலாம் என்று இருந்தேன். சில நாள் கழித்து அம்பலம் தளத்துக்கு சென்ற போது என்னால் உள்ளே நுழைய முடியவில்லை.

விசாரித்ததில் “சார் யாரோ எல்லாவற்றையும் எடுக்கிறார்கள். அதனால் சைட்டை லாக் செய்துவிடோம்!” என்றார்கள்.


சார் எழுதியது எனக்கு ஒரு காப்பி வேண்டும், என்னுடைய கலக்ஷனுக்கு என்றேன். ‘சரி’ என்ற அவர்களின் பதிலில் ‘நிச்சயம் கிடையாது’ என்று கேட்டது.

கூடங்குளம் பிரச்சனை பற்றி எல்லோரும் பேசிக்கொண்டு இருந்த போது, சுஜாதாவே அணுசக்தி வேண்டாம் என்று 1988லேயே எழுதிவிட்டார் என்று விவாதித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு நண்பர் என்னிடம் “சுஜாதா நிஜமாகவே அப்படி எழுதினாரா என்று பார்த்து சொல்லுங்க?” என்றார்.


“ஆமாம் ஆனால் அவர் அணுசக்தி பற்றி வேறு இடத்தில் அதை வரவேற்று எழுதினார் என்று நினைக்கிறேன்… ஆனால் அதை தேட வேண்டும்” என்றேன் நான்.

அவர் 2007ல் அம்பலம் கேள்வி பதிலில் எழுதிய ஒரு கேள்வி பதில் இங்கே

? அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதனால் விளையக்கூடிய சாதக பாதகங்கள் என்னவாக இருக்கும்? – வைஷ்ணவி, சென்னை

! இந்த ஒப்பந்தத்தால் நாட்டுக்கு நன்மையே விளையும். அணுமின் உற்பத்திக்குத் தேவையான பல விஷயங்கள் நம்மிடம் இல்லை.

சரி அம்பலத்தில் அவர் இறுதியில் எழுதியது என்ன ஆச்சு ? கடைசியாக அந்த ‘சர்வரை’ சபீனா போட்டு கிளீன் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.

Desikan Narayanan
Advertisements

3 thoughts on “அம்பலம் – சுஜாதா தேசிகன்

 1. சுஜாதா தேசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

  கேள்விப்பட்டது… ஹா… ஹா…

 2. BaalHanuman May 16, 2013 at 2:45 PM Reply

  நன்றி தனபாலன் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு..

  சுஜாதா தேசிகன் தன்னுடைய தளத்திலேயே இதை வெளியிட்டிருக்கலாம். அவர் இந்தக் கட்டுரையை இங்கே வெளியிட்டதன் காரணம் நமது பாலஹனுமான் வாசகர்கள் மேல் அவர் கொண்ட அன்பின் காரணமாகத்தான் என உறுதியாக நம்புகிறேன்…

 3. bganesh55 May 19, 2013 at 1:32 AM Reply

  அம்பலத்தில் சுஜாதா ஸார் எழுதின கேள்வி பதில்களை புத்தகமாக வெளியிட்டார்கள் இல்லையோ… பின் காபி பேஸ்ட் செய்கிறார்கள் என்று சபீனா போட்டு கிளீன் பண்ணின சமாச்சாரமெல்லாம்… ரொம்ப ஓவர் தேசிகன் ஸார்! சுஜாதா ஸார் விகடன்லகூட அணுமின் உலைகளால நன்மைதான்… ஆனா சரியாப் பராமரிக்க நமக்கு ‘பத்தாது’ என்கிற ரீதியில்தான் எழுதியதைப் படித்ததாக நினைவு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s