26-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இசைஞானி இப்படி உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. புத்தாண்டு தினத்தன்று கங்கை அமரனின் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். முதலில் சாதாரணக் குரலில் ஆரம்பித்தவர், தடதடவென்று படபடக்கத் தொடங்கினார்.

“பத்திரிகைக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. என் பக்கத்தில் சரஸ்வதி இருக்கிறாள்…”

Take it easy என்று யாராவது ராஜாவுக்கு சொல்லக் கூடாதோ?

தளபதியின் எல்லாப் பாட்டுமே ஹிட்தான் என்றாலும் “யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே‘க்குத் தனி மவுசு.

அந்தப் பாட்டை ஒரு கிசுகிசுத்த குரலில் பாடிப் பரபரப்புப் பண்ணியிருப்பவர் பம்பாய்ப் பெண் மித்தாலி.

பல ஆண்டுகளுக்கு முன் நண்டு படத்துக்கு இளையராஜா இசை அமைத்த போது அதில் கைஸே கஹூன் என்ற இந்திப் பாட்டைப் பாடினாரே அந்த பூபேந்திர சிங்கின் மனைவி தான் இந்த மித்தாலி. தமிழ்ப் பாட்டை இந்தியில் எழுதி வைத்துக் கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் அந்த மழலை உச்சரிப்பு.

‘லவ்வுனா லவ்வு, மண்ணெண்ணெய் ஸ்டவ்வு’ என்ற பாடலை (?) மீராவில் பாடிப் பிரபலமடைந்திருக்கிறார் மின்மினி. இசை: இளையராஜா.

பல்வேறு இசையமைப்பாளர்களின் கீழே ஏறத்தாழ நூறு பாட்டு பாடியிருக்கும் இவர், கேரளப் பெண்.

மினி ஜோசப் என்ற பெயரை மின்மினி என்று மாற்றி வைத்தவர் இளையராஜா. (Thou too இளையராஜா?)

சங்கிலி முருகனிடம் ஒரு practical sense இருக்கிறது. பிரசாந்தை வைத்து ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டு, அச்சாரமும் வழங்கியிருந்தார். பிறகுதான் காதில் விழுந்தது. இளையராஜாவைப் பற்றிய வதந்தி (?) பிரசாந்த் படமென்றால் இசையமைக்க மறுக்கிறார் என்று. ஞானி முக்கியமா, பிரசாந்த் முக்கியமா என்று சங்கிலியார் பூவா தலையா போட்டுப் பார்த்து நேரத்தை வீணடிக்கவில்லை. சென்றார் பிரசாந்திடம் (அல்லது தந்தை தியாகராஜனிடம்). கொடுத்திருந்த முன்பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அதற்கு அவர் கையாண்ட modus operandi என்ன ? தெரிந்தால் பல தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

எக்கோ கேசட்காரர்களின் உறவை முறித்துக் கொண்டு ராஜா கேசட் என்று சொந்தமாக ஆரம்பித்திருக்கிறார் இளையராஜா. புதிய நிறுவனத்தின் சின்னம் ஒரு பனையோலை விசிறி.

அடையாறு கேட் ஓட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவின் போது இந்த விசிறிக்கு ஆளுக்கொரு விதமாக விளக்கம் சொன்னார்கள்.

ரஜினியின் விளக்கம்:

“திருவண்ணாமலையில் வசிக்கும் ஒரு துறவியிடம் இளையராஜாவிற்கு மகா பக்தி. அந்த மகானின் கையில் எப்போதும் ஒரு பனையோலை விசிறி இருக்கும். அவருடைய நல்லாசிக்கு அடையாளமாக விசிறியைத் தன் நிறுவனத்தின் சின்னமாக வைத்திருக்கிறார் இளையராஜா” என்றார் சூப்பர் ஸ்டார்.

இளையராஜா did not dispute this version. காரணம், அது அவரே சொன்னதாம்.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s