25-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

1976-ல் 5 படங்களுக்கும், 1977-ல் 12 தமிழ் படங்களுக்கும் இசையமைத்த இளையராஜா 1978-ல் 22 தமிழ் படங்களுக்கும் 1 தெலுங்கு படத்திற்கும், 1 மலையாளப் படத்திற்கும் 1 கன்னடப் படத்திற்கும் இசையமைத்தார்.

திரை உலகிற்கு வந்த மூன்றாவது ஆண்டில் மட்டும் 25 படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர் இளையராஜா.

பல புதுமைகளை திரையிசையில் செய்தது இந்த ஆண்டில்தான். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்கள் சிட்டுக்குருவி, ப்ரியா, காற்றினிலே வரும் கீதம், சிகப்புரோஜாக்கள், முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, தியாகம்… வரும் பதிவுகளில் இளையராஜா செய்த புதுமைகளைப்பற்றிப் பார்ப்போம்.

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியை இயக்கிய தேவராஜ்-மோகன் இரட்டையர்கள் இந்த ஆண்டில் சிட்டுக்குருவி என்ற படத்தை இயக்கினார்கள். இந்த படத்திற்கும் இளையராஜாவையே ஒப்பந்தம் செய்தார்கள்.

அன்னக்கிளி போலவே இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்த நான்கு பாடல்களும் மிகப் பிரபலம். அதிலும் குறிப்பாக ஜானகி பாடிய “அடடட மாமரக்கிளியே உனை இன்னும் நான் மறக்கலையே” பாடல் நான் மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாத ஒரு பாடல்.

அதே போல பி.சுசிலா “உன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே” பாடலில் உருகியிருப்பார். வித்தியாசமான ஒரு பாடலாக “காவேரிக்கரை ஓரத்திலே” என்று ஒரு பாடலும் இசையமைத்திருப்பார்.

சிட்டுக்குருவி என்று சொன்னாலே எல்லோர் மனதிலும் வந்து நிற்கும் ஒரு பாடல் “என் கண்மணி உன் காதலி” பாடல்தான். ஆனால் இந்த படத்தில் வரும் மற்ற மூன்று பாடல்களை முதலில் சொல்லி கடைசியில் இந்த பாடலைப் பற்றி சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த பாடல் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த பாடல் உருவானதைப்பற்றியும், இதன் சிறப்பம்சம் பற்றியும் சொல்கிறேன்.

தேவராஜ் மோகன் இரட்டையர்களில் தேவராஜ் இந்த படத்தில் ஒரு பாடலை மிக புதுமையாக செய்யவேண்டும் என்றும் அதற்கான சிட்சுவேஷன் இது என்றும் இளையராஜாவிடம் வந்து சொன்னது…

“காதலனும் காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் ஒரு பஸ்சில் அருகருகே அமர்ந்து போகிறார்கள். இப்போது காதலனின் உள்ளமும் காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல ஒரு பாடல் வேண்டும்”

மேல் நாட்டு இசையின் கவுண்ட்டர் பாயிண்ட் என்ற முறையை உபயோகிக்க முடிவு செய்து, இதற்கு ஒரே பாடலில் இரண்டு டியூன் போட்டு அமைத்திருப்பார். அதாவது இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமலும் ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும் அமையவேண்டும். அந்த பதில் டியூன் தனியாகப் பாடினால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்கவேண்டும். இரண்டையும் சேர்த்துப் பாடினால் ஒட்டவைத்தது போல் இல்லாமல் ஒரே பாடலாக ஒலிக்கவேண்டும்.

முதலாவது ——————————————-இரண்டாவது
என்கண்மணி —————————————–உன் காதலி
இளமாங்கனி —————————————–எனைப்பார்த்ததும்
சிரிக்கின்றதே —————————————-சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ —-நீ நகைச்சுவை மன்னனில்லையோ

இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும் மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வரும்.

இந்தப்பாடலின் இடையே பஸ்சில் கண்டக்டர், ” இந்தாம்மா கருவாட்டுக்கூடை முன்னாடி போ” என்றும் “தேனாம்பேட்டை சூப்பர்மார்க்கெட் இறங்கு” என்றும் வரும். இதற்கு குரல் கொடுத்தது இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s