24-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

துர்காதேவி, காயத்ரி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, துணையிருப்பாள் மீனாட்சி போன்ற ஒருசில படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. துணையிருப்பாள் மீனாட்சி படத்தில் இடம்பெற்ற சுகமோ… ஆயிரம்… என்ற பாடல் மிக பிரபலம். இந்த பாடல் உண்மையில் இந்தப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது இல்லை.

இந்தச் சம்பவம் பற்றி இளையராஜாவே சொன்னது…

சரசா பி.ஏ. என்ற படத்தைத் தயாரித்த நடராஜன் என்பவர் திருச்சி ரங்கராஜன் என்பவருடன் இணைந்து உயிர் என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தனர். திருவையாறு ரமணி என்பவரின் இசைக்கச்சேரிகளில் நான் வாசித்த போது ஏற்பட்ட பழக்கத்தினால், தயாரிப்பாளரிடம் இந்த உயிர் படத்திற்கு இளையராஜாவை இசையமைக்கச் சொல்லலாம் என்று சிபாரிசு செய்திருக்கிறார். அதற்கு அவர்களோ “முதன் முதலில் அவருக்குப் படம் கொடுத்ததே நாம்தான். அதற்கும் நீதான் சிபாரிசு செய்தாய். அமரன் பாட்டெழுதி டி.எம்.எஸ். பாட ‘சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு‘ என்று பாடலையும் பதிவு செய்தோம். ஆனால் படம் நின்று போனதே” என்றனர். இருந்தும், ரமணி, “அது ஏதோ அசந்தர்ப்பம், அதற்காகத் திறமை உள்ளவர்களைத் தள்ளி வைத்தால் எப்படி?” என்றெல்லாம் வாதாடி சம்மதம் வாங்கியிருக்கிறார். ஆனாலும் அவர்கள், முதலில் ஒரு 5 பாடல்கள் ரெக்கார்டு செய்து கொடுக்கட்டும், ஜெமினி ஸ்டுடியோவில் ஒப்புதல் வாங்க இது ஏதுவாக இருக்கும் என்று சொல்லியிருக்கின்றனர். இதை வந்து என்னிடம் சொன்னதும் நானே என் கையில் இருந்த பணத்தைப் போட்டு ஸ்டுடியோவிற்கும், ஆர்கெஸ்ட்ராவிற்கும் ஏற்பாடு செய்தேன்.

எஸ்.பி.பி, வசந்தா, சரளா, ரமணி ஆகியோர் பாட ஒரே நாளில் 5 பாடல்களைப் பதிவு செய்தோம். ஜெமினி ஸ்டுடியோவில்தான் இந்த பாடல் பதிவு நடைபெற்றது. கோடீஸ்வரராவ் என்ற என்ஜினியர் தான் பதிவு செய்தார். பாடல்கள் ஓ.கே. ஆயின. பூஜைக்கு நாளும் குறிக்கப்பட்டது. அப்போதெல்லாம் பூஜைக்கு அழைப்பிதழோ, போஸ்டர்களோ அடிப்பது கிடையாது. நேரிலோ, ஃபோனிலே அழைத்துவிடுவார்கள்.

பூஜைக்கு முதல் நாள் காமராஜர் சாலையில் உள்ள எனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது நான் வீட்டில் இல்லை. அம்மா அவரை அழைத்து உட்காரச் சொல்லியிருக்கிறார். சிறிது நேரம் காத்திருந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் நேரம் போகவேண்டுமே என்பதற்காக அங்கிருந்த ஆர்மோனியத்தில் ஏதோ வாசிக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரம் நான் உள்ளே வந்துவிட்டேன்.

எனக்கோ என் ஆர்மோனியம் உயிருக்கும் மேல், யாரையும் தொடவிடமாட்டேன். யாரைக்கேட்டு இதைத் தொட்டாய்? எப்படி நீ இதைத் தொடலாம்? என்றெல்லாம் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டேன். இதை அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். “ஏய் ராஜா! என்னய்யா இது இந்த சின்ன விஷயத்திற்கு எதற்கு இவ்வளவு கோபம்? என்று என்னைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் நான் சமாதானப்படுத்த முடியாத அளவிற்கு அப்போது இருந்தேன். அதனால் மேலும் கத்திவிட்டேன்.

ஒரு கட்டத்தில் ரமணியால் தாங்கமுடியவில்லை. உடனே அவருக்கு கோபம் வந்து, “ஏய், என்னை இந்தப் பெட்டிய தொடக்கூடாதுன்னு சொல்லித் திட்டிட்டே இல்லே உன் முன்னால் நான் ம்யுசிக் டைரக்டர் ஆகிக்காட்டலைனா நான் ரமணி இல்ல” என்று சபதம் செய்தார். நானும் விட்டேனில்லை, நீ ம்யூசிக் டைரக்டர் ஆகு, பேர் எடு, அதனால எனக்கொண்ணும் இல்ல, என் இடம் எனக்குத்தான், உன் இடம் உனக்குத்தான் என்று நானும் கண்மூடித்தனமாக வார்த்தைகளை விட்டுவிட்டேன்.

அடுத்த நாள் பூஜையில் உயிர் படத்திற்கு ரமணி இசையமைப்பாளர். அவரது இசையில் பாடல் பதிவானது. ரமணி, ரமணி ஸ்ரீதர் ஆகி விட்டார்.

அந்தப் படத்திற்குப் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களில் ஒன்றான புது நாள் இன்றுதான் என்று அமரன் எழுதி, வசந்தா பாடிய பாடல்தான், துணையிருப்பாள் மீனாட்சியில் எஸ்.பி.பி.யும் பி.சுசீலா அவர்களும் பாடிய சுகமோ ஆயிரம் பாடல்.

இளையராஜாவின் இசைக்குழுவில் வாசித்த கிடார் வாத்தியக்கலைஞர் திரு.சந்திரசேகர் 40 வருட அனுபவம் மிக்கவர். தற்போது யுவன் ஷங்கர் ராஜாவிடம் மியுசிக் கண்டக்டராக உள்ளார்.

அவர் பகிர்ந்த விஷயம் இது…

நேரம் தவறாமை
இளையராஜா வந்த பிறகுதான் வாத்தியக்கலைஞர்கள் சரியாக காலை 7 மணிக்கெல்லாம் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இளையராஜா 6.45 மணிக்கே வந்துவிடுவார். நாம் சரியாக வந்தால்தான் மற்றவர்களும் அதை கடைப்பிடிப்பார்கள் என்பாராம்.

ஒழுக்கம்
முன்பெல்லாம் சினிமா இசைக்கலைஞன் என்று சொன்னால் யாரும் சரியான மரியாதை தரமாட்டார்கள். ஏனென்றால் அந்தமாதிரியான போக்கை முன்பிருந்தவர்கள் வளர்த்துவிட்டதே காரணம். ராஜா வந்த பிறகுதான் இசையமைப்பாளர் என்ற பெயருக்கே ஒரு தனிமரியாதை கிடைத்தது. அதற்கு காரணம் ராஜா மட்டுமே.

பணி செய்யும் இடம்
ராஜா வருவதற்கு முன்பெல்லாம் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் மது வாசமும், புகை வாசமும் இருக்கும். சில சமயம் புகை மண்டலமாகவே இருக்கும். ஆனால் ராஜாவின் ரெக்கார்டிங்கின்போது யாரும் சிகரெட் கூட தொடமாட்டார்கள். ஒரே நாளில் அனைவரையும் மாற்றவில்லை. அது முடியாதென்று அவருக்கும் தெரியும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார். 100 சதவீதம் ஒழுக்கமுள்ள இடமாக மாற்றினார்.

முக்கியமான ஒன்று, நேரத்தை வீணடிக்கமாட்டார்.

முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

One thought on “24-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. ILAMURUGAN May 13, 2013 at 1:55 PM Reply

    super…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s