எவ்வளவு பெரிய பாக்யம்! – நடராஜ் ஐ.பி.எஸ்


காஞ்சிப் பெரியவர் மௌன விரதத்தில் இருப்பார். இந்திராகாந்தி அம்மையார் சென்றபோதுகூட அவர் மௌன விரதம் இருந்ததால் பேசவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறை நாங்கள் குடும்பத்துடன் அவரை தரிசிக்கச் சென்றோம். அப்போது அவர் மௌன விரதத்தில் இருந்தார். சில நிமிடங்கள் அவர்முன் இருந்தபின் அவரை நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டோம். நாங்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் மௌனம் கலைந்து எங்களை அழைத்தார். நாங்கள் மீண்டும் சென்றோம். அமர்ந்தோம். எங்களுடன் பேசினார். என் பையன் கையில் ஒரு ஆப்பிளைக் கொடுத்து எங்களை ஆசிர்வதித்தார். அங்கிருந்தவர்கள், “மாதக் கணக்கில் பெரியவா பேசாமல் இருந்தார்கள்; இப்போதுதான் பேசினார்கள்” என்று கூறினார்கள். மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு பெரிய பாக்யம்!

கே: இசை விமர்சனம், கட்டுரைகள் எழுதுகிறீர்கள். இசையார்வம் ஏற்பட்டது எப்படி?

: என்னுடைய தாத்தா பூர்ணகிருபேஸ்வரர் தென்காசியில் வக்கீலாக இருந்தார். அவர் நிறைய பாடல்களை இயற்றியிருக்கிறார். பாடவும் செய்வார். நாங்கள் கோபாலபுரத்தில் வசித்தபோதுதான் மியூசிக் அகாதமியைப் புதிய கட்டிடத்தில் ஆரம்பித்தார்கள். அப்போது சிறு பையன் என்றாலும் தவறாமல் அங்கு நடக்கும் கச்சேரிகளுக்குப் போவேன். பின்னர் காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட போது மஹா பெரியவர் கும்பகோணத்தில் இருந்தார். பின்னர்தான் அவர் தேனம்பாக்கத்துக்கு வந்தார். நான் பணியில் இருந்தபோது அவர் அங்கே வந்தது என்னுடைய பாக்யம். மடத்தில் நிறையக் கச்சேரிகள் நடக்கும். ஓர் அதிகாரி என்ற முறையில் மடத்துக்கு அழைப்பார்கள். அதனால் பல இசை நிகழ்ச்சிகளுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. மீண்டும் சென்னைக்குப் பணிமாறுதல் வந்தபோது, சித்தூர் கோபாலகிருஷ்ணனுடன் இருந்த ராமச்சந்திரனிடம் 3 வருடம் வயலின் பயின்றேன். பணியிடமாற்றம் காரணமாகப் பல ஊர்களுக்குப் போனாலும் விடாமல் பயிற்சி செய்து வந்திருக்கிறேன்.

நடராஜ் ஐ.பி.எஸ்

இவரைச் சந்தித்து உரையாடியவர் நமது அரவிந்த் சுவாமிநாதன். முழுப் பேட்டியையும் நீங்கள் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம்…

http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=150&cid=4&aid=8549

One thought on “எவ்வளவு பெரிய பாக்யம்! – நடராஜ் ஐ.பி.எஸ்

  1. இணைப்பிற்கு நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s