22-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

அவர் எனக்கே சொந்தம் என்ற படத்தில் முதன்முதலாக ஒரு பாடலை ரீமிக்ஸ் முறையில் பதிவு செய்திருந்தார். ஆனால் இதில் எனக்கு ஈடுபாடே இல்லை என்றும் இனி இதுபோல் செய்வதை தவிர்த்திடுவேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். முத்துராமன் நடித்த ஆளுக்கொரு ஆசை படத்தில் வரும் “கணக்கு பார்த்து காதல் வந்தது” பாடல் மிக பிரபலம்.

அதே போல ஜெய்சங்கர் நடித்த அவர் எனக்கே சொந்தம் படத்தில் வரும் குதிரையில் நான் அமர்ந்தேன் பாடலை மிக அருமையாக தந்திருப்பார்.

இவற்றையெல்லாம் விட தேங்காய் சீனிவாசன் நடித்த மாரியம்மன் திருவிழா படத்தில் சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி பாடலை காபி ராகத்தில் அமைத்திருப்பார். டி.எம்.எஸ் அவர்களின் குரலில் அதில் ஒரு மிடுக்கும் வீரியமும் சுடர்விடும்.

இளையராஜா இசையமைத்த முதல் காமெடிப்படம் இந்த ஆண்டில்தான் வெளிவந்தது. டி.என்.பாலு அவர்களின் இயக்கத்தில் வெளியான ஓடி விளையாடு தாத்தா என்ற படம்தான் அது. இந்தப்படம் சோபியா லாரன்ஸ் நடித்த “ரோமன் ஹாலிடே” என்ற ஆங்கிலப்படத்தில் தழுவல்.

இதே ஆண்டில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் மூன்று பாடல்களை வார்த்தெடுத்திருப்பார். இப்போதும் அந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ ஒருவித சாந்தம் மனதில் இழையோடும்.

ராஜா என்பார்… மந்திரி என்பார்… ராஜ்ஜியம் இல்லை ஆள…


பூந்தென்றலே…. நல்ல நேரம் காலம் சேரும்…


விழியிலே… மலர்ந்தது… உயிரிலே… கலந்தது…

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s