20-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” – பத்ரகாளி படத்தின் கதாசிரியரான மகரிஷிதான் இந்த படத்திற்கும் கதை. அன்னக்கிளி படத்தின் இயக்குனர்கள் தேவராஜ் மோகன் தான் இந்த படத்திற்கும் இயக்கம். இந்த படத்தில் உள்ள ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்வதற்கு முன் ஒரு சம்பவத்தை பற்றிச் சொன்னால் அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எனறு நினக்கிறேன்.

இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசையமைப்பதற்கு முன் மற்ற இசையமைப்பாளர்களுக்கு கிடார் வாசித்துக் கொண்டிருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தானே!  அதுபோல ஒருமுறை வி.குமார் அவர்களின் இசையமைப்பில் ஒரு பாட்டிற்கு வாசித்துக் கொண்டிருந்தார். அந்தப்பாடலை பாடியவர் பி.சுசீலா. அந்த பாடல் கம்போசிங் போது வாத்தியக்காரர் தவறாக வாசிக்கிறார் என்று இளையராஜாவை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால் இளையராஜாவோ அவர்தான் தவறாக பாடுகிறார், நான் சரியாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்றாராம். கண்ணீர் சிந்தும் அளவிற்கு பி.சுசீலா அவர்கள் பாதிக்கப்பட்டார். இதனால் வாத்தியக்காரரை (இளையராஜாவை) வெளியே அனுப்பிவிட்டுத்தான் பாடல் பதிவை தொடர்ந்திருக்கிறார் வி.குமார். நான் இசையமைப்பாளர் ஆகும்போது பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி வெளியே வந்தார்.

இந்த சம்பவம் நடந்தும், தன் முதல் படமான அன்னக்கிளியிலேயே ஒரு பாடலை (சொந்தம் இல்லை பந்தம் இல்லை) பாடவைத்தார். “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” படத்தைப் பற்றி சொல்லும்போது இந்த சம்பவத்தை எதற்காக சொன்னேன் என்றால், இந்த படத்தில் அனைத்துப்பாடல்களையும் பி.சுசீலாவைத்தான் பாட வைத்திருக்கிறார். பின்னாளில் அவரை நிறையபாடல்கள் பாடவைத்தும் இருக்கிறார்.

கவிக்குயில் படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல் பிரபலமாகியிருந்தாலும் அதில் இன்னொரு சிறப்பான பாடல் இருக்கிறது. படத்தின் பிற்பகுதியில் சேர்க்கலாம் என்று விரும்பி பஞ்சு சார் இளையராஜாவிடம் ஒரு பாடல் கேட்டிருக்கிறார். அந்தப் பாடல் “காதல் ஓவியம்… கண்டேன்…” இந்தப் பாடலை 10 வயது சிறுமியான சுஜாதாவை பாட வைத்திருந்தார். இந்தப் பாடலில்தான் முதன்முதலாக இசைமேதை “பாக்“கின் காலத்திய இசையைப்போல கொடுத்து, அதன் மேல் நம் நாட்டு இசையான வீணையை வாசிக்க வைத்து பாடல் பதிவு செய்தார். இது நன்றாக அமைத்ததில் எனக்கு மிக சந்தோஷம் என்று தன் மகிழ்ச்சியை பஞ்சு சாரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சினிமா இசையில் இருவேறு பாணி இசைகள் ஒன்றாக கலந்தது இதுவே முதல் முறை.

மேல் நாட்டு இசையில் “கவுண்டர் பாய்ண்ட்” என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு ட்யூன்களை ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் ஹார்மனி என்ற அம்சம் உள்ளடங்கியிருக்கவேண்டும். இளையராஜா தன் இரண்டாவது படமான பாலூட்டி வளர்த்த கிளி படத்திலேயே ” நான் பேச வந்தேன்” என்ற பாடலின் போதே தொடங்கிவிட்டார். அந்த பாடலின் இடையே வரும் இசையின் ஹம்மிங்கில் எஸ்.பி.பி. ஒரு ட்யூன் ஹம் செய்ய ஜானகி வேறு ட்யூனில் ஹம் செய்வது போல் அமைத்திருப்பார்.

சிட்டுக்குருவி படத்தில் வரும் என் கண்மணி… உன் காதலி… பாடலை இந்த முறையில்தான் அமைத்திருக்கிறார். 1978-ம் ஆண்டு பற்றி வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s