பணிவே பத்தியம்!


உலகத்துக்கு நல்லது செய்வதும் மூட்டை தூக்குகிற மாதிரிதான். அதைச் செய்ய சக்தி வேண்டும். சக்தியை நன்றாக வளர்த்துக் கொள்ளாமல் இந்த மூட்டையைத் தூக்குகிறேன் என்று ஆரம்பித்தால் இடுப்பைப் பிடித்துக் கொள்ளும். உடம்புக்குப் பிடிப்பு வியாதி உண்டாகிற மாதிரி உள்ளத்துக்கும் வியாதி ஏற்படும். சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்பு தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.

ஏற்கெனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒருவிதத்தில் மூட்டைதூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புகள் செய்தோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக்கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும். இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப்போகும். தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

Hanuman2

பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழு மனிதனாக ஆக முடியாது. ‘நமக்கு எல்லாம் தெரியும், நாம் புத்திசாலி’ என்ற அகம்பாவம்தான் வெறும் படிப்பினால் உண்டாகும். இப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் துணை புரியமாட்டார். பகவானின் அநுக்கிரகம் இல்லாமல் எத்தனை புத்திசாலியாலும் வாழ்க்கையில் சந்தோஷம் பெற முடியாது.

பழைய தப்பு மூட்டை என்கிற வியாதிக்கு மருந்து படிப்பு. இந்த மருந்தைக் கவனமாகச் சாப்பிட்டு அந்த மூட்டையை இலேசாக்கிக் கொண்ட பிறகுதான், உலகத்துக்கு நல்லது செய்வதற்காக வேறு மூட்டையைத் தூக்கலாம். டாக்டர், நோயாளிக்கு மருந்து கொடுப்பதோடு நிற்க மாட்டார். இன்னின்ன ஆகாரம் சாப்பிடு, இன்னின்ன சாப்பிடாதே” என்று பத்தியமும் வைப்பார். இந்தப் பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்பு தான் மருந்து என்றால், அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு என்பதே.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி கல்கி

Rama_Hanuman-001

Note from BalHanuman:

ஸ்ரீ ராமருக்கு அருகில் கொள்ளை அழகுடன் நிற்கும் இந்த ஆஞ்சநேயரை விட பணிவுக்கு சிறந்த உதாரணம் வேறு யாராக இருக்க முடியும் ?

Advertisements

3 thoughts on “பணிவே பத்தியம்!

 1. அருமை…. நன்றி…

  படங்கள் சிறப்பு…

  வாழ்த்துக்கள்…

 2. R. Jagannathan May 6, 2013 at 9:12 AM Reply

  படங்கள் கொள்ளை அழகு!

  (என் கோணல் புத்தி – பணிவு அதிகம் இருக்கும் (’அம்மா’விடம்) தமிழக மாண்புமிகுக்கள் எத்தனை தப்பு மூட்டைகளை அனாயாசமாகத் தூக்குகிறார்கள்!)

  -ஜெ.

 3. rathnavelnatarajan May 10, 2013 at 11:15 AM Reply

  அருமை.
  நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s