நூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ச.திருமலை ராஜன்


life_trees

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்

நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்

தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்

மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்

சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம்

சொல்வனத்தில் வெளியான எனது நூல் அறிமுகம் ஒன்று. பாலஹனுமான் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

ராஜன்

வாழ்வு தரும் மரங்கள்

Advertisements

13 thoughts on “நூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ச.திருமலை ராஜன்

  1. வாழ்த்துக்கள்…

    நன்றி…

  2. பாமாக வினர் போராட்டம் நடத்தும் வேளையில் இது தேவைதான். அங்கங்கு மரங்கள் கீழே படுத்துக் கொண்டு போராட்டம் நடத்துவதாக செய்திகள் வருகின்றன.

    • BaalHanuman May 6, 2013 at 1:22 PM Reply

      அன்புள்ள ரெங்கசுப்ரமணி,

      You got it 🙂

      இந்தப் பதிவை நான் இந்தத் தருணத்தில் வெளியிட்டதில் ஒரு சின்ன நுண் அரசியல் உள்ளது 🙂

  3. ராமதாஸ் கும்பலுக்கு வேறு எதற்காக இல்லாவிட்டாலும் மரங்களை வெட்டுவதற்காகவாவது ம்ரண தண்டனை அளிக்கப் பட வேண்டும். பஸ்களை எரித்தால் திருப்பி கட்டிக் கொள்ளலாம். நூறு ஆண்டு வளர்ந்த மரங்களை வெட்டும் இந்தக் கும்பலுக்கு மன்னிப்பே கிடையாது. மரங்களை வெட்டியே அரசியலில் முன்னேறிய ஒரே அரசியல் கட்சி இந்த மரம்வெட்டி ராமதாஸ் கட்சியாகவே இருக்கும்
    ——————————————————————–
    பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வட மாவட்டங்களில், நூற்றுக்கணக்கான மரங்களை, பா.ம.க.,வினர் வெட்டுவதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல லட்சம்தமிழகத்தில், மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில், 13 சதவீத நிலம், காடுகளாக உள்ளது.காடுகள், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி,

    மண் அரிப்பை தடுக்கின்றன. நாட்டில், 3 பங்கு காடுகள் இருந்தால், அந்நாடு செழித்து வளரும்.ஆனால் தமிழகத்தில், 20 சதவீதத்துக்கும் குறைவான காடுகளே உள்ளன. இதனால் ஆண்டுக்கு, 100 நாட்கள் பெய்ய வேண்டிய மழை, 10க்கும் குறைவான நாட்களாக குறைந்து வருகிறது. ஒரு மரம், 2.12 ரூபாய் மதிப்புள்ள பிராண வாயுவை ஏற்படுத்தி, 1 லட்சம் ரூபா# மதிப்புள்ள மண் வளத்தை கொடுக்கிறது.எனவே, ஒவ்வொரு மரமும், பல லட்சக்கணக்கான மதிப்புடையவை. அவற்றை வெட்டுவது, வருங்கால தலைமுறைக்கு நல்லதல்ல என்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.பலியாடுகள் அல்ல

    கோவை, “ஓசை” அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறியதாவது:ஆரம்ப காலத்தில், தங்களின் போராட்டங்களுக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை வெட்டிய பா.ம.க.,வினர், பின், “பசுமை தாயகம்’ அமைப்பை ஏற்படுத்தி, மரங்களை நட்டபோது, தங்களுடைய தவறுக்கு பிராயசித்தம் தேடிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என, நினைத்தோம்.ஆனால், நெடுஞ்சாலைகளில் உள்ள, மரங்களை மீண்டும் வெட்டி, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதன் மூலம், அவர்கள் இத்தனை நாட்களாக, “நாடகம்’ நடத்தி வந்துள்ளனர் என்பது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.ஒவ்வொரு மரமும் இயற்கை தந்த கொடை; விருப்பம் போல வெட்டுவதற்கு, அவைகள் பலியாடுகள் அல்ல.இவ்வாறு, அவர் கூறினர்.

    கடும் தண்டனை ; இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”எப்பகுதியில் உள்ள மரத்தை வெட்டுகின்றனர் என்பதைப் பொறுத்து, தண்டனை மாறுபடும். தனியார் இடத்தில் வளர்ந்த மரத்தை வெட்டினால், அம்மரத்திற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வண்ணம், திட்டமிட்டு மரங்களை வெட்டினால், குற்ற வழக்கு பதிவு பதிவு செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும். மரத்தின் சேதத்தைப் பொறுத்து, ஒரு ஆண்டோ அல்லது இரண்டாண்டோ தண்டனை வழங்கப்படும்,” என்றார்.- நமது நிருபர் –

  4. பொதுவாக அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களின் பொழுது பஸ் எரித்தல், கார் எரித்தல் பொதுச் சொத்துக்களை நாசப் படுத்துதல் கட்சி வேறுபாடின்றி நடந்து வருகின்றன. அனைத்துமே கடுமையாக ஒடுக்கப் பட வேண்டியவையே. ஆனால் மரங்களை வெட்டும் கலாசாரத்தை இந்த ராமதாஸ் கும்பல்தான் ஆரம்பித்து வைத்தனர் இன்றும் தொடர்கிறார்கள். மரண தண்டனை அளித்தால் தப்பில்லை இந்த ஆட்கள் இல்லாமல் போவதால் எவருக்கும் நஷ்டமில்லை மரங்களாவது பிழைத்துப் போகும். ஒரு மரம் இருந்தால் அவற்றால் ஆயிரம் நன்மைகள் உண்டு ராமதாசாலும் அவரது ரவுடிகளாலும் எவருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எனக்கு கடுமையான கோபத்தையும் ஆத்திர உணர்வையும் இந்த செய்தி ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா அக்னி நட்சத்திரம் முடியும் வரையாவது இந்த மூடனை உள்ளே வைத்திருந்து வறுக்க வேண்டும் வெளியே வரும் பொழுது வீரபாண்டிக்கு நடந்ததே இவருக்கும் நடந்து மீதம் உள்ள மரங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும்

  5. Selvam Ramaswamy May 7, 2013 at 1:07 AM Reply


    ஒரு விதையிலிருந்து தோன்றி பலநூறு கிளைகளால் பல்லாயிரம் இலைகளால் நிழல்களும் … கனிகளும் இதர பொருட்களும் வழங்கி… மேலும் மேகத்தைக் கவர்ந்து மழை தந்து … நீர் பெருகி ஆறோடச்செய்து முற்றிலும் முற்றுமாய் தன்னைத்தானே மனித இனத்திற்கு அர்ப்பணித்துகொண்ட மரங்கள்… கடவுளுக்கு நிகரானவை!

    ஒரு மரம் வளர…வளர்க்க… குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் கூட ஆகலாம். அதன் பின் அது சாகும் வரை நமக்கு மேற்கண்ட பலாபலங்களை எந்த விதமான எதிர்பார்ப்புக் இன்றி வழங்கி வருகிறது மானுடம் செய்த புண்ணியம்.

    தற்போது மழைபொய்த்து நீருக்காய் மன்றாடிகொண்டு இருக்கும் நாட்களில் … ஏதோ நிலத்தடி நீரையாவது காப்பாற்றி வைத்திருப்பதிலும் இந்த மரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

    மரம் மனித உயிரைவிட மேன்மையானது.. மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

    அப்பேற்பட்ட பெருமை மிகு மரங்களை … வேரோடு சாய்ப்பது.. மனித இனத்தை தானே வேரொடு சாய்ப்பதற்கு சமம். இவர்களுக்கு கடுமையிலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இந்த சுயநலப் புல்லுருவிகளால் மனித இனத்திற்கே ஆபத்து நிச்சயம்!

    எதிர்காலச்சந்ததியினருக்கு என்ன விட்டு வைத்திருக்கிறோம்? நீர்களை இழந்து கொண்டிருக்கிறோம்… மரங்களையுமா இழக்க வேண்டும்?

  6. //பின், “பசுமை தாயகம்’ அமைப்பை ஏற்படுத்தி, மரங்களை நட்டபோது, // ஏற்கனவே அனைத்து மரங்களையும் வெட்டி முடித்தாயிற்கு. அடுத்த போராட்டத்தின் போது வெட்ட மரம் வேண்டும் என்று அவர்கள் மரம் வளர்க்க ஆரம்பித்தார்கள். நீங்கள் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்கள் பிராயச்சித்தம் செய்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டால் அது அவர்கள் தவறா.

  7. Anbarasan Kuppusamy May 7, 2013 at 2:12 PM Reply


    Rajan,

    Awe inspiring. I am buying 3 books to share with some who would be interested.
    I will try to write some in Tamil. I remember planting 4 nettlingam trees in my home and still sad about uprooting a ‘Bumblimos’ tree.

    Thanks for enlightening,
    Anbu

  8. Selvam Ramaswamy May 7, 2013 at 2:20 PM Reply


    ஆண்டவரே…! இவர்கள் தாங்கள் யாது செய்கிறோமென்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்… ஆகவே இவர்களை மன்னியாதீர்!

    (அரசு தண்டிக்கப் போவதில்லை… ஆண்டவர் தான் தண்டிக்கணும்)

  9. rathnavelnatarajan May 10, 2013 at 11:14 AM Reply

    அருமை.
    நன்றி.

  10. uma January 11, 2014 at 12:14 PM Reply

    dear friends,

    please tell me where to buy this book

    • BaalHanuman January 11, 2014 at 3:51 PM Reply

      தாமரை பப்ளிகேஷன்ஸ் பதிப்பான இந்த ”வாழ்வு தரும் மரங்கள்” நூலின் இரண்டாம் பதிப்பு என் சி பி எச் நிறுவனத்தாரின் கடைகளில் விற்பனை செய்யப் படுகிறது. விலை ரூ.160

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s