மே 3 – சுஜாதா பிறந்த தின சிறப்புப் பதிவு…


Sujatha_22

Brevity is the soul of wit” என்பதற்கு சிறந்த உதாரணம் சுஜாதா.

சுஜாதாவின் மறைவு தினத்தைக் கொண்டாடுவதை விட அவர் பிறந்த தேதியை (மே 3) கொண்டாடுவதில் திருமதி சுஜாதா அதிகம் விருப்பம் காட்டுவார்…

எல்லே ராம்

[RamBW2-1.jpg]

Bisleri என்றால் மினரல் வாட்டர்; Godrej என்றால் பீரோ; அதே போல் சுஜாதா.

Desikan Narayanan

எழுத்தச்சன் சுஜாதாவுக்கு நேற்று (May 3) எழுவத்தியெட்டாவது பிறந்த நாள்….

“எழுவத்தெட் டானவரே எங்கள் சுஜாதா
எழுதவிட்டுப் போனீரே எம்மை;-உழுதுவைத்துப்
போனாய்வும் பாதையில்முப் போகம்யாம் காணவே
பேனா பிடிக்கின்றோம் பார்”

….கிரேசி மோகன்….

(இந்த வெண்பாவை நம்முடன் பகிர்ந்த திரு இரா.முருகனுக்கு நன்றி)

சுஜாதா சார் எழுதினது எல்லாம் இலக்கியம் இல்லையா? சொன்னா நாக்கு பொள்ளிப் போயிடும்..

–இரா.முருகன்

EraMurukan Ramasami

பாரதி மணி பேசும் போது தன்னை ஒரு ‘சுஜாதா பைத்தியம்‘ என்று வர்ணணை செய்து கொண்டார். அவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கான பைத்தியங்கள்  – நான் உட்பட – இன்னமும் இருப்பதுதான் சுஜாதாவின் இளமையான எழுத்திற்கு கிடைத்த வெற்றி என்று தோன்றுகிறது. ஒரு வாசகனாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளனின் மீது பிரேமையுடன் இருப்பது கூட இயல்பு. ஆனால் அந்த எழுத்தாளனை நெருங்கிப் பழக பழக சில பல பிம்பங்கள் உடைந்து அந்த பிரமிப்பும் பிரேமையும் மெல்ல கரைந்து விடுவதுதான் யதார்த்தம். ஆனால் பாரதி மணி சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒவ்வொரு நாடகம் எழுதப்பட்ட பின்பு அது டெல்லிக்கு அனுப்பப்படும் அளவிற்கு நெருக்கம். என்றாலும் சுஜாதாவின் மீதுள்ள பிரேமையையும் பிரமிப்பையும் இன்னமும் அவர் கவனமுடன் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக் காண பொறாமையாக இருக்கிறது.

Sujatha_7

கடவுள் வந்திருந்தார்‘ – நாடகத்தை மிக சுவாரசியமாக்கினதற்கு காரணம் அதன் நடிகர்களே. 80-களில் எழுதப்பட்ட நாடகம் என்பதால் சற்று பழமையான நெடி. எக்ஸார்ஸிட், உல்லி உல்லி, ஜார்ஜெட், டுட்டி ப்ரூட்டி, கல்யாண பரிசு போன்ற 80-களின் கலாச்சார சொற்கள் புழங்கினாலும் இன்றும் இதை ரசிக்க முடிந்ததற்குக் காரணம் சுஜாதாவின் இளமையான எழுத்து. ஒரேயொரு உதாரணம் சொல்கிறேன். சமகாலத்தில் கூட இப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. சென்சாரில் வெட்டி விடுவார்கள். வாத்தியார் பூடகமாக கலக்கியிருக்கிறார்.

இந்தச் சூழலை கவனியுங்கள்….

மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனுக்கு கீழேயிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகளின் மீது காதல். ஆனால் அவளோ இவனை சட்டை செய்வதில்லை. ஒரு சிக்கலான இரவில் அவளின் அப்பாவிற்கு உதவி செய்யும் போது மாத்திரம் சற்று சிரித்துப் பேசுகிறாள். ஆனால் மறுநாள் காலையில் வழக்கம் போல் சிடுமூஞ்சு..

அப்போது அந்த இளைஞன் சற்று கோபமாக ஒரு ப்ளோவில் பேசும் வசனம் இது…

“வசு… அப்ப ராத்திரிக்கு மாத்திரம் நான் உனக்கு தேவையாயிருக்கேன்ல…. (சற்று நிதானித்து – தனக்குள்..) என்ன .. நான் உளர்றேன்…

சற்று விரசமானதொரு ஆனால் யதார்த்தமாக வந்து விழும் நகைச்சுவையை செருகி விட்டு..அதை கலாச்சார காவலர்களுக்காக அழகாக சமன் செய்திருக்கும் சாமர்த்தியம் வாத்தியாருக்கே வரும்..

–சுரேஷ் கண்ணன்

My Photo

ஓர் எழுத்தாளன் எழுத்து முறைமையை எவ்வாறு பயில வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நான் வாழ்நாளில் பார்த்த மிகச் சிறந்த உதாரணம் சுஜாதாதான். அவர் வாழ்நாளில் எழுதிய மொத்தப் பக்கங்களைப் பார்த்தால், ஒருவர் தினமும் சில பக்கங்களை எழுதினால் ஒழிய அது சாத்தியமே இல்லை. தன் அறிவையும், புலன்களையும் அவர் கடைசிவரை திறந்து வைத்திருந்தார்.

ஒரு முறை புத்தகக் காட்சியில் ஒரு வாசகர் சுஜாதாவைக் கேட்டார். ‘நீங்கள் ஏன் எழுத வந்தீர்கள்?‘ அதற்கு சுஜாதா சொன்ன பதில்: ‘ boredom வேறு ஒன்றுமில்லை‘. தன்னை எந்நேரமும் புதுப்பித்துக் கொண்டிருப்பவனே, தான் செயல்படும் மொழியை, கலையைப் புதுப்பிக்க முடியும். சுஜாதா உண்மையில் ஒட்டு மொத்த தமிழ் எழுத்தின் போர்டத்தைக் கடந்து சென்றார்.

Sujatha_31

பல எழுத்தாளர்கள் இன்றும் சுஜாதாவின் பிம்பத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுஜாதா தன் எழுத்துக்களின் வழியே அடைந்த மகத்தான இடத்தை அவரது பிரபலமாக மட்டுமே புரிந்து கொள்ள விரும்பினார்கள். அந்தப் புகழை வெல்வது, அல்லது புறக்கணிப்பதுதான் சுஜாதாவைப் பற்றித் தங்கள் மதிப்பீடாகக் கொண்டு இன்றும் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சுஜாதாவுடன் புகழின் வெளிச்சத்தில் அவரைக் கடந்து செல்ல விரும்புகிறவர்கள் ஒருபோதும் அவரது நிழலைக் கூட தொட முடியாது.

ஒரே ஒரு சூரியன் தான். ஒரே ஒரு சந்திரன் தான். ஒரே ஒரு சுஜாதா தான் !

Mohan Kumar

Note from BalHanuman…

vidya

இந்தச் சிறப்புப் பதிவு கல்கி ரசிகை வித்யாவின் வேண்டுகோளுக்கிணங்க…

11 thoughts on “மே 3 – சுஜாதா பிறந்த தின சிறப்புப் பதிவு…

 1. vidya (@kalkirasikai) May 4, 2013 at 9:35 AM Reply

  //ஒரே ஒரு சூரியன் தான். ஒரே ஒரு சந்திரன் தான். ஒரே ஒரு சுஜாதா தான் !// உண்மை. (அமரர் கல்கி பற்றியும் இதே மாதிரி நான் நினைத்ததுண்டு. இருவருமே தமிழில் கடக்க முடியாத சாதனையாளர்கள். ஒரே நூற்றாண்டின் இரு பகுதிகளில் தமிழை ஆண்ட இந்த இருவரது எழுத்துகளையும் அடுத்தடுத்து அனுபவிக்கும் பேறு பெற்ற நாம் அதிஷ்டசாலிகள்.)
  எனது வேண்டு கோளை ஏற்று வெளியிட்ட சிறப்புப் பதிவுக்கு நன்றிகள் பல கோடி பால் ஹனுமான். சுஜாதா தம்பதியின் இளமைக்காலப் புகைப்படத்துக்காக விசேஷ நன்றி.

 2. Pandian May 4, 2013 at 5:59 PM Reply

  அருமை!

  • BaalHanuman May 5, 2013 at 12:50 AM Reply

   நன்றி பாண்டியன் உங்கள் ரத்தினச் சுருக்கமான பாராட்டுக்கு…

 3. Rajesh Garga May 4, 2013 at 10:52 PM Reply


  தானா வருமெனத் தள்ளியே வைக்காது
  காணா பலரைக் கரையேற்றி வைத்துவிட்டு
  வானாகி நின்றவனை வாழ்த்திடவே நாங்களும்
  பேனா பிடிக்கின்றோம் பார்!

 4. rathnavelnatarajan May 5, 2013 at 11:00 AM Reply

  பல எழுத்தாளர்கள் இன்றும் சுஜாதாவின் பிம்பத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுஜாதா தன் எழுத்துக்களின் வழியே அடைந்த மகத்தான இடத்தை அவரது பிரபலமாக மட்டுமே புரிந்து கொள்ள விரும்பினார்கள். அந்தப் புகழை வெல்வது, அல்லது புறக்கணிப்பதுதான் சுஜாதாவைப் பற்றித் தங்கள் மதிப்பீடாகக் கொண்டு இன்றும் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

  அருமையான கருத்து, அருமையான பதிவு.
  மிக்க நன்றி.

 5. ranjani135 May 5, 2013 at 4:23 PM Reply

  தன் எழுத்துக்களால் எல்லோரையும் கவர்ந்த திரு சுஜாதாவிற்கு சிறப்பான நினைவாஞ்சலி செய்திருக்கிறீர்கள்.
  உங்களுக்கும் கல்கி ரசிகை வித்யாவிற்கும் நன்றி!

 6. எழுத்துலக தினத்தந்தி சுஜாதா!

 7. mislexic May 6, 2013 at 2:25 AM Reply

  சுஜாதா இலக்கியவாதிதானே ? இல்லாவிட்டால் உயிர்மையில் அவர் புத்தகங்கள் வராது.

  –பா. ராகவன் – குற்றியலுலகம் – தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

 8. Mohan Kumar May 6, 2013 at 7:11 AM Reply

  Very apt remembrance. Thanks for including me too 🙂

  • BaalHanuman May 6, 2013 at 1:20 PM Reply

   அன்புள்ள மோகன் குமார்,

   உங்களைப் பற்றிக் குறிப்பிடாமல் எப்படி நமது சுஜாதாவை நினைவு கூற முடியும் ? உங்களையும் என்னையும் இணைத்ததே அவர் தானே 🙂

   மத்யமர் கதைக்கு உங்கள் விமர்சனமும், வழக்கமாக வாசகர் கடிதங்களுக்கு பதிலளிக்காத அவர், உங்களுக்கு பதில் அளித்ததற்கு காரணம் உங்கள் கடிதத்தில் விரவியிருந்த சிநேகம் (அது சரி அவருக்கு எப்படி உங்கள் பெண்ணின் பெயர் தெரியும் 🙂 என்று அவரே குறிப்பிட்டதும் மறக்கக் கூடியதா என்ன ?

 9. Ravikumar (singai) December 26, 2013 at 6:32 AM Reply

  சுஜாதா இலக்கியவாதியா? இல்லையா? என்ற சர்ச்சையை எவன் கிளப்பினான் முதலில்? (மணி சார் பாஷையில் ‘சிவன் கோவில் விளக்கணைத்த பாவம் வந்து சேரும்… அவருக்கு…’), சுஜாதாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் என்னை ஈர்த்தது அவரது விஞ்ஞான சிறுகதைகளும், பல அறிவியல் நூல்களும். (கடவுள் இருக்கிறாரா…போன்ற) இந்த காலத்துக்கு ஒரு இலக்கியவாதி இப்படித்தான் எழுத முடியும். இந்த நூற்றாண்டின் பாடு பொருள்கள் வெற்று இலக்கியம் பேசும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பிடிபடுவதில்லை. எப்போதும் மோட்டுவளையை பார்க்கும் அழுகுன்னிகளை கதையின் நாயகனாக சித்தரித்து வாசக தரத்தை குறைப்பவர்களுக்கு சுஜாதாவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை… அன்புடன் இன்னொரு சுஜாதா பைத்தியம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s