19-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கமல்ஹாசன் எடுத்து முடித்த படத்தில், முதலில் ‘இசையில் தொடங்குதாம்மா‘ பாடலே கிடையாது. படத்தை ஓட விட்டுப் பார்த்த இளையராஜாவுக்கு அந்தக் குறிப்பிட்ட காட்சி வரும்போது அந்த இடத்துக்குள் ஒரு பாடலுக்கான தேவை ஒளிந்து கொண்டு இருப்பது ஒரு தரிசனமாகப் புலப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் கண்ணில் படாத பாடல், எல். சுப்பிரமணியத்துக்குப் புலப்படாத பாடல். அந்தப் படத்தின் எடிட்டர் கூட அதைக் கவனித்துச் சொன்னதாகத் தெரியவில்லை. எப்படி இளையராஜாவுக்கு மட்டும் புலப்பட்டது என்றால், நூற்றுக்கணக்கான படங்களுள் இதுவும் ஒன்று என்று அவர் நினைக்கவில்லை. இருக்கிற பாடல் காட்சிகளுக்குப் பொருத்தமாகத் தாம் புதிய இசை எழுதிக் கொடுத்து விட்டால் போதும் என்று எண்ணவில்லை. இது கமல் படம், தாம் இதில் வெறுமனே சொன்ன வேலையைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை.

ஒரு வேலையை எடுத்துக் கொண்டால், வேலையில் மூழ்கி விடுவதல்ல உன்னதம். வேலையாகவே மாறிவிடுவதுதான் அது! தானும் தன் செயலும் தனித்தனி என்கிற நிலையைக் கடந்து செயலாகவே தான் மாறிவிடுவது.

இதனைத்தான் ‘கர்மயோகம்‘ என்று பகவத் கீதை சொல்லும். ‘ஜென்‘ என்று பவுத்தம் சொல்லும்.

மிகச் சிறப்பான சாதனைகள் புரிவோரை கவனியுங்கள். அவர்கள் வேலை செய்வதில்லை. வேலையாகவே மாறிப் போகிறார்கள்.நீரில் கரையும் சர்க்கரை போல் உங்கள் பணியுடன் இரண்டறக் கலந்து விடுங்கள். உன்னதம் அங்கே வெளிப்படும்.

தொடரும்…

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்

உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு “சுமார்” சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார் படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப் பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன் வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.

Advertisements

5 thoughts on “19-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. vidya (@kalkirasikai) May 3, 2013 at 3:23 PM Reply

  இன்று தலைவர் பிறந்த நாள் சிறப்புப் பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

  • BaalHanuman May 4, 2013 at 12:39 AM Reply

   அன்புள்ள வித்யா,

   ஒரு நாள் தாமதத்தில் நீங்கள் கேட்ட பதிவு விரைவில் உங்கள் பார்வைக்கு…

   புதிய பணி… புதிய பொறுப்புகள்…

   Thanks for your understanding 🙂

 2. இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு.

  // திரைக்கதைப்படி அப்பாடல் படத்திலேயே இல்லை. படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இளையராஜா அவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு பாட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. உடனே மேனேஜரிடம் சொல்லி அஜய் சக்ரபர்த்தியிடம் சொல்லிவிட்டார்கள். விஷயம் கேள்விப்பட்டு ப்ரொடக்‌ஷன் தரப்பிலிருந்து ஏற்கனவே செலவு கையை மீறிப்போய்விட்டதே எனத் தயங்கினார்கள். சரி பாட்டைப் பதிவு செய்யவேண்டாம் என்று முடிவுசெய்து தயங்கியபடியே அஜய் சக்ரபர்த்தியை அழைத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், “எனக்குப் பணமே வேண்டாம். நான் என் மகளோடு வந்து இளையராஜாவைப் பார்க்கவேண்டும். என் மகளுக்கு அவர் ஆசிர்வாதம் வேண்டும்” என்று சொல்லித் தன் மகள் கெளஷிகி சக்ரபர்த்தியோடு சென்னை வந்து அப்பாடலைப் பாடினார். //

  http://solvanam.com/?p=13585

  • BaalHanuman May 4, 2013 at 12:41 AM Reply

   அட… அருமையான தகவலுக்கு நன்றி…

 3. vathsala June 10, 2013 at 4:33 PM Reply

  நீ பார்த்த பார்வைக்கு – whenever i hear this song,it touches the core of my heart.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s