18-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

ஹே ராம்‘ திரைப்படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானவர் வயலின் மேதை எல். சுப்பிரமணியம்.

என்ன காரணத்தினாலோ கமல்ஹாசனுக்கு எல்.எஸ்ஸின் இசை பொருத்தமாக இல்லை என்று தோன்றி விட்டது. நிச்சயமாக ஒரு சராசரி இசையமைப்பாளரால் இம்மாதிரியானதொரு கனமான திரைப்படத்தின் இசையை எழுதவே முடியாது. இது படம் பார்க்கும் நமக்கே புரியும் என்னும்போது கமல்ஹாசனுக்குப் புரியாதா ?

எல். சுப்பிரமணியம் சந்தேகமில்லாமல் ஒரு மேதை. மிகச் சிறந்த இசை வல்லுநர். ஆனாலும் திரைப்பட இசையில் அவருக்கு அதனை தேர்ச்சி கிடையாது. அது ஒரு தவறும் அல்ல.

ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எல்.எஸ்ஸிடம் போய்விட்டு, சரிப்படாமல் இளையராஜாவிடம் வந்திருக்கிறார் கமல்.

ஆரம்பத் தயக்கங்கள், தர்மசங்கடங்கள் சார்ந்த பிரச்னைகளெல்லாம் தீர்ந்தபிறகு, படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார்.

ஆனால் ஒரு பிரச்னை. படத்துக்கான அனைத்துப் பாடல்களும் எழுதி, இசையமைக்கப்பட்டு, படம் பிடிக்கப்பட்டுவிட்டது. இப்போது இளையராஜா புதிதாக இசையமைத்தால், மீண்டும் எழுதி, ரெக்கார்ட் செய்து, ஷூட்டிங் போய் எடுத்து, எடிட் செய்து – வேலைக்கு வேலை – செலவுக்குச் செலவு.

செலவு செய்யத் தயார் என்றுதான் கமல் சொன்னார். ஆனால் ஏதோ உள்ளுணர்வு ஒரு பரீட்சை செய்து பார்க்கச் சொல்ல, “நீங்கள் புதிதாக எடுக்க வேண்டாம். நீங்கள் ஏற்கனவே எடுத்திருக்கும் காட்சிக்கே நான் புதிதாக இசையமைத்து விடுகிறேன்” என்று இளையராஜா சொல்லி விட்டார்.

கவனியுங்கள். ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு விட்டது. அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி, இயக்க வேண்டும். அது மிகச் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும்.

இங்கே, படிப்பதை நிறுத்திவிட்டு மேற்சொன்ன பத்தியின் செய்தியை ஒரு நிமிடம் மனதுக்குள் யோசித்துப் பாருங்கள். முடியுமா? சாத்தியமா இது ?

உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்.

அப்படியொரு முயற்சியின் விளைவாகக் கிடைத்ததுதான் இன்றைக்கும் கேட்கும்போதெல்லாம் நெஞ்சை உருக்கும் ‘நீ பார்த்த பார்வைக்கு நன்றி‘, ‘இசையில் தொடங்குதம்மா‘ போன்ற ‘ஹே ராம்‘ படப்பாடல்கள்.

இதுவரை வெளிவந்த தமிழ் சினிமா பாடல்களிலேயே தலை சிறந்த பத்து என்று தரத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் அந்தப் பட்டியலில் நிச்சயம் இடம்பெறக்கூடிய தகுதி ‘இசையில் தொடங்குதம்மா‘வுக்கு உண்டு. மிக மேன்மையான தரத்தில் எழுதப்பட்ட இசை அது. கேட்கும்போதெல்லாம் சிலிர்ப்பூட்டக்கூடியது.

ஒரு தவம் செய்யாமல் இளையராஜாவால் எப்படி அப்படியொரு இசையை எழுதியிருக்க முடியும் ? அப்படி என்ன செய்திருப்பார் ?

தொடரும்…

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்

உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு “சுமார்” சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார் படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப் பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன் வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.

Advertisements

4 thoughts on “18-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. //இசையில் தொடங்குதம்மா‘// – இதைப் பாடியவர் பெயரை மறந்துவிட்டேன். இப்பாடலை யாரும் அவ்வளவாக மேடையில் பாடுவதில்லை. வெகு அழகாக சொதப்பலை நோக்கி கொண்டு போய்விடும். முதலில் ஆரம்பிக்கும் அந்த சின்ன தாளம், நடுநடுவே வரும் ராமருக்கு ஜே எல்லாம் முதல் தரம். குரல் கொஞ்சம் கனமாக தெரிந்தாலும் நன்றாக குழைந்து கவர்கின்றது.

  இளையராஜா இல்லையென்றால் இப்படத்தின் பல காட்சிகள் சொத்தையாக போயிருக்கும்.

  • BaalHanuman May 3, 2013 at 1:18 AM Reply

   இசையில் தொடங்குதம்மா பாடலைப் பாடியவர் – Pundit Ajoy Chakraborty

 2. rathnavelnatarajan May 10, 2013 at 11:32 AM Reply

  அருமையான பதிவு.
  நன்றி.

  • BaalHanuman May 11, 2013 at 4:59 AM Reply

   நன்றி ரத்னவேல் சார்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s