16-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரியவந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகி விட்டது.  எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே.ரிகர்சலுக்கு வந்தார்.  பயத்தோடு பாடலைச் சொன்னேன்.  அவர் எழுதிக் கொண்டார்.

“என்ன ட்யூன் ?”  என்றார்.

பாடிக்காட்டினேன்.

http://t0.gstatic.com/images?q=tbn:3vxkSaix16DEpM:http://www.thehindu.com/mp/2007/01/08/images/2007010800340201.jpg

ஸ்வரத்தை பாடலின் வரிகள் மேல் எழுதிப் பாடினார்.   அதுதான்,  “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” என்ற பாட்டு.

பாடலைப் பாடியவர்,  “இதுதான் புதிது.  சரணத்தில் உச்சஸ்தாயியில்  இரண்டாவது வரிக்கு அமைந்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’  என்று ஆரோகணபரமான  பிரயோகத்தை — அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே !  அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.  சாதாரணமாக கர்நாடக கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள்.  அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே”  என்று மனம் விட்டுப் பாராட்டினார்.  என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது.

கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை

தொடரும்…

One thought on “16-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. rathnavelnatarajan May 9, 2013 at 4:40 PM Reply

    அருமை. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s