15-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

Hey Ram Hindi Film Pictures & Gallery

ஹே ராம்‘ படத்தை ஓட விட்டு, கண்ணை மூடிக் கொண்டு இசையை மட்டும் கேளுங்கள். ஒரு தியானம் மாதிரி கேட்பது நல்லது. இடையில் மூக்கு சொறியாதீர்கள். எழுந்து போய் ஒரு தம்மடித்துவிட்டு வரலாம் என்று எண்ணாதீர்கள். என்னத்தையாவது சாப்பிட்டுக் கொண்டோ, படித்துக் கொண்டோ, படுத்துக் கொண்டோ கேட்காதீர்கள். நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக் கொண்டு இசையில் கவனத்தைச் செலுத்துங்கள். ஒரு  ஃப்ரேமைக் கூடத் தவற விடக்கூடாது. சாகக் கிடக்கும் வயதான கமலுக்கு டாக்டர் மருத்துவம் பார்க்கிற முதல் காட்சி தொடங்கி, சாகேதராமனின் மனமாற்றம் வரையிலான இறுதிக் காட்சிகள் வரைக்கும் அங்கே இங்கே அசையாமல் உட்கார்ந்து கேளுங்கள்.

வசனம் முக்கியமில்லை. ஒளிப்பதிவு முக்கியமில்லை. இயக்கம் முக்கியமில்லை. திரைக்கதை முக்கியமில்லை. நான் கவனிக்கச் சொல்வது படத்தின் இசையை மட்டுமே.

வெளிநாடுகளில் பல முக்கியமான திரைப்படங்களின் இசைக்கோவை மட்டும் தனியே ஆல்பமாக வெளிவந்துவிடுகிறது. இங்கே அந்தக் கலாசாரம் இன்னும் வரவில்லை.

பாதகமில்லை. மனம் வைத்தால் படத்திலிருந்து இசையைத் தனியே உருவிக் கேட்க முடியும். நான் கேட்டிருக்கிறேன். ஒரு முறை இரு முறை அல்ல. இருபது, இருபத்தைந்து முறை. குறிப்பாக இந்தப் படத்தை மட்டும்!

காரணம் இருக்கிறது. இந்தப் படத்தில் மட்டும்தான் இசையை மட்டும் கேட்டே முழுப் படத்தின் கதையையும் நம்மால் அட்சர சுத்தமாகப் புரிந்துகொள்ள முடியும். கதையைப் புரிந்து கொள்வதுகூடப் பெரிய விஷயமில்லை. இந்தப் படம் வெளிப்படுத்த விரும்பும் செய்தியை அப்படியே இன்னொரு ட்ராக்கில் இசை வெளிப்படுத்தும்! இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் – இந்தப் படத்துக்கு கமல்ஹாசன் எப்படி ஓர் இயக்குனரோ, அதே மாதிரி இளையராஜா இன்னோர் இயக்குனர்.

திரை இசையின் காளிங்க நர்த்தனம் என்று ‘ஹே ராம்’ திரைப்படத்தின் இசையை நான் தயங்காமல் சொல்லுவேன். ஒவ்வொரு காட்சியும் வெளிப்படுத்தும் உணர்ச்சிக்கு ஓரங்குலம் கூட மேலே, கீழே போய்விடாமல் அப்படியொரு துல்லியம் காட்டியிருப்பார் இளையராஜா.

இதனைப் புரிந்து கொள்வதற்கு இசையறிவு வேண்டுமென்கிற அவசியமே இல்லை. கவனம் போதும். காதுகளைத் தீட்டிக் கொண்டு ஒரு தியானம் மாதிரி கேட்டாலே போதும். புரிந்து விடும். இதனை இத்தனை விரிவாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. உன்னதமான நிலையை அடைவது குறித்துப் பேசும் இப்புத்தகம், இளையராஜாவின் இந்தக் குறிப்பிட்ட திரைப்படத்துக்கான இசையைப் பற்றிப் பேசுவது தற்செயல் அல்ல. இந்த இடத்தில் இதனைக் காட்டிலும் பொருத்தமான உதாரணம் வேறொன்று இல்லை என்று எனக்கு வெகு நிச்சயமாகத் தோன்றுகிறது.

தொடரும்…

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்

உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு “சுமார்” சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார் படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப் பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன் வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.

Advertisements

5 thoughts on “15-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. kasi May 4, 2013 at 12:43 PM Reply

    Sir..After reading this, i am very much eager to hear only the Music of the full Length Movie

    Is there any CD like this OR in which way i am getting it ..To get it i am ready to do anything

    please show me the way ….

  2. BaalHanuman May 4, 2013 at 1:14 PM Reply

    அன்புள்ள காசி,

    உங்கள் ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன். ஆனால் நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லையே 😦

    நீங்கள் இருப்பதோ Oman-ல். நான் இருப்பதோ அமெரிக்காவில் – கலிஃபோர்னியாவில் 🙂

  3. kasi May 6, 2013 at 2:48 AM Reply

    Anna..Aarvathukkum , natpukkum distance unda ???i will try to contact you in California

    thro a common friend OR This is my indias mob No …99529 64689..In your indian visit , if time permits , give me call..i ll come & meet you ..in whay form you are having the Music theme of Hay ram…can it be copied..if so make one copy ready , & i ll send some of my friends in california & get it by paying the cost for it ..y this much i am eager..if u give your personnal mail id , i ll tell the reason on it ..it is in between v 2..Thangalin, RAJA vin Isaikku Rasigan …..KASI

    • BaalHanuman May 6, 2013 at 3:13 AM Reply

      அன்புள்ள காசி,

      >>பாதகமில்லை. மனம் வைத்தால் படத்திலிருந்து இசையைத் தனியே உருவிக் கேட்க முடியும். நான் கேட்டிருக்கிறேன். ஒரு முறை இரு முறை அல்ல. இருபது, இருபத்தைந்து முறை. குறிப்பாக இந்தப் படத்தை மட்டும்!

      மேற்கண்ட வரிகளுக்கு சொந்தக்காரர் திரு பா.ராகவன். உங்களுடன் பகிர்ந்து கொண்டது மட்டுமே நான்.

      குழப்பத்திற்கு வருந்துகிறேன்…

      இந்தப் பதிவின் இறுதியில் அவரது புத்தகத்தையும் குறிப்பிட்டுள்ளேன்.

      இசைஞானியின் மிகப் பெரிய அபிமானி நீங்கள் என்று புரிகிறது 🙂

  4. kasi May 6, 2013 at 11:10 AM Reply

    THANK U SO MUCH…I WILL CATCH MR. RAGAVAN..

    Nalla Isaikku Nam Aanaivaramei abimani thane !!!!……KASI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s