14-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

1977-ல் 16 வயதினிலே படத்திற்கு இசையமைப்பதற்கு முன் இளையராஜா வேறு சில படங்களுக்கும் இசையமைத்திருந்தார். இந்த ஆண்டில் இளையராஜா 12 படங்களுக்கு இசையமைத்திருந்தார்.


1.ஆளுக்கொரு ஆசை
2.அவர் எனக்கே சொந்தம்
3. புவனா ஒரு கேள்விக்குறி
4.தீபம்
5.துர்கா தேவி
6.காயத்ரி
7.கவிக்குயில்
8. ஓடி விளையாடு தாத்தா
9. 16 வயதினிலே
10. பெண் ஜென்மம்
11. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
12. துணையிருப்பாள் மீனாட்சி

1976ல் நான்கு படங்களுக்கு இசையமைத்த பிறகும் ஜி.கே.வி. அவர்களிடம் ஒரு படத்திற்கு உதவியாளராக வந்து வாசித்துக்கொண்டிருந்தார். அந்த சமயம் சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்கள் “ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது” படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு பின்னணி இசைசேர்ப்பிற்கு காம்போ வாசிக்க யாரும் கிடைக்கவில்லை என்று இளையராஜா அவர்களிடம் சொன்னபோது, “அதனாலென்ன சுவாமி! நான் இல்லையா? நீங்க சொல்றப்போ வந்துவிடுகிறேன்” என்றாராம். இந்தச் சம்பவம் பற்றி இளையராஜா சொன்னது…

நான் சொன்னது போலவே அவரது படத்திற்கு காம்போ வாசிக்கப் போனேன். படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராக என்னை உணர்ந்தவர்களுக்கு நான் உதவியாளர் நிலையில் காம்போ வாசிக்க வந்தது அதிர்ச்சியாக இருந்தது போலும், அங்கிருந்த எல்லோரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஸ்டுடியோவில் வேலை செய்வோருக்கும், ஷுட்டிங் ஃப்ளோருக்கு வந்தவர்களுக்கும், பக்கத்து ஸ்டுடியோவிற்கு ரெக்கார்டிங் வந்தவர்களுக்கு தகவல் பரவ, என்னை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். நான் காம்போ வாசித்த நான்கு நாட்களும் இந்த வேடிக்கை தொடர்ந்தது. இப்படி வேடிக்கை பார்த்துப்போனவர்களில் ஒருவரான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இன்று என்னைப்பார்த்தால் கூட இந்தச் சம்பவம் பற்றி வியந்து பேசுவார்.

சுவாமிக்கு என் மீது பிரியம் அதிகமாகிவிட்டது. இத்தனை பெயர் வாங்கியிருந்தாலும் இன்னும் இந்தப் பையன் பெரியவர்களை மதிக்கும் பண்போடு இருக்கிறானே என்று ஆச்சர்யப்பட்டு ஜி.கே.வி அவர்களிடம் கூறி தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் சினிமாத்துறையில் காலெடுத்து வைத்த நேரத்திலேயே சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களின் சங்கீதம் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு.

சில படங்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் அவரிடம் இசை பயிலவேண்டும் என்ற எனக்குள் இருந்த ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினேன். நாளையிலிருந்தே பாடம் தொடங்கலாம் என்றார். அடுத்த நாளே பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலைபாக்கு தட்டுடன் மயிலாப்பூரில் உள்ள அவரின் வீட்டுற்கு சென்றேன். அவர் சொல்லித்தரும் பாடத்தை குறித்துக்கொள்ள ஒரு நோட்டும் கொண்டு சென்றிருந்தேன். சரளி வரிசையில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ ஏதோ ஒரு கீர்த்தனையைத் தொடங்கிவிட்டார். நோட்டுப்புத்தகத்திற்கு வேலையில்லாமல் போனது. அவர் பாடினார், அதையே என்னை திரும்ப பாடச்சொன்னார். அவர் பாடிய மாதிரி வரவில்லை. சரி செய்தார், மறுபடியும் பாடினேன். அவர் மாதிரி வரவே இல்லை. அன்றைய பாடம் இப்படியே முடிந்தது. அன்று மட்டும் அல்ல, ஒரு சில மாதம் இப்படியே போனது. அவர் பாடியதில் நூற்றில் ஒரு பங்குகூட எனக்கு வரவில்லை என்பது தெரிந்து போனது. என்றாலும் அவர் பாடுவதும் நான் பாடிப்பார்ப்பதுமாக ஆறு மாதங்கள் ஓடிப்போனது. படங்களுக்கு இசையமைக்கும் வேலை கொஞ்சம் அதிகமானதால் அவரிடம் தொடர்ந்து இசை பயிலமுடியாமல் போனது. படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தாலும் உனக்கு நேரம் கிடைக்கும்போது வந்தாலும் நான் சொல்லித்தரக் காத்திருக்கிறேன் என்றார். இந்த அளவிற்கு என்மீது அவர் அன்பு வைத்திருக்கிறாரே என்று வியந்துபோனேன்.

இளையராஜா அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்று பார்த்தால் அதற்கென்றே ஒரு தனி வலைதளம் போடலாம். அதைப் பின்பு பார்க்கலாம்.

இந்த ஆண்டில் வெளியான படங்களில் 16 வயதினிலே படம் பற்றி மட்டும் பார்த்தோம். வெளியான 12 படங்களில் புவனா ஒரு கேள்விக்குறி, தீபம், கவிக்குயில் இந்தப் படங்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

5 thoughts on “14-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” – மிக பிடித்த பாடல். முதல் தடவை அப்பாடலை மேடையில் பாலமுரளி பாடும் போதுதான் கேட்டேன். அந்தக்குரலுக்கு என்ன ஒரு கவர்ச்சி. அதோடு ராஜாவும் சேர்ந்தால். அட்டகாசம்தான். அடுத்தநாள் முதல் தொடர்ந்து என் அலுவலகத்திலும் வீட்டிலும் ஓடிக் கொண்டே இருந்தது.

  • BaalHanuman May 1, 2013 at 1:44 AM Reply

   அடுத்த இரு பதிவுகள் இந்தப் பாடல் பற்றித்தான் 🙂

 2. krishnamoorthys April 29, 2013 at 7:40 AM Reply

  அருமை தொடரட்டும்

  • BaalHanuman May 1, 2013 at 1:41 AM Reply

   நன்றி கிருஷ்ணமூர்த்தி… தொடர்ந்து வருகை தாருங்கள்…

 3. rathnavelnatarajan May 5, 2013 at 11:06 AM Reply

  அருமையான பதிவு.
  நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s