கடைக்கண் பார்வை – வேதா


மகான்களைப் பற்றி நாம் அறிந்தவற்றைப் பேசிச் சிலாகிக்கிறோம். ஆனால், அவரின் நிலையை யார் உணர்த்தவோ, உணரவோ முடியும்? இன்னொரு மகானால்தான் முடியும்.

தியாகையர் என்னமா பாடி உருகினார். அதனால்தான் ராமனை அடைஞ்சிருக்கார்” என்றார் ஒரு பக்தர், யோகியாரிடம். அதைக்கேட்டு சிரித்த யோகி ராம்சுரத்குமார், ஒரு வார்த்தை சொன்னார்: அவர் பாடி அடையலை. அடைஞ்சதைப் பாடிருக்கார்.” சின்ன திருத்தம்தான். எவ்வளவு அர்த்தக் செறிவு அதற்குள்!

அந்தத் தியாகராஜருக்கு சிறுவயதில் இருந்தே, தந்தையின் ராமாயண உபந்யாசம் கேட்டுக் கேட்டு, மனம் ராமனிடம் ஒன்றிப் போனது. அந்த ஒன்றுதலின் விளைவாகத் தோன்றியது ‘தியாகராஜ ராமாயணம்.’ அதில் ஒரு சுவாரஸ்யமான காட்சி.

மிதிலையில் ஜனக மகாராஜனின் அரண்மனை, ராமன் சிவதனுசை வளைத்த காட்சியை வால்மீகி கூறும் போது, ‘வத்ஸ! ராமதநு: பச்ய’ என்று, விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி, ராமா! இந்த வில்லைப் பார்” என்றதும் ராமன் வில்லை எடுத்ததாகக் கூறுகிறார்.

கம்பனோ, ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’ என்கிறார்.

காளிதாசனோ, வேறு விதம்:

சிவதனுசைப் பற்றி ராமன் ஏற்கனவே அறிந்திருந்தான். மிதிலையை அடைந்ததும் முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அதனால் விஸ்வாமித்திரர் ஜனகரிடம் சொல்ல, ஜனகரோ, மிகப்பெரிய யானைகளால்கூட செய்ய முடியாத காரியத்தை இச்சிறிய யானைக்குட்டி எப்படி செய்யும்” என பயந்தார்.

‘தூங்குகிற பெரிய பாம்பைப் போல் அச்சுறுத்துகிற மாதிரி கிடந்த வில்லை அனாயாசமாக நாணேற்றுவதற்காகத் தூக்கி எடுத்தாராம் ராமர்’ அது எப்படி இருந்ததாம்?

மன்மதன் மிக லேசான கரும்பினால் செய்யப்பட்ட வில்லை, மிகச்சுலபமாக வளைப்பதுபோல, அனாயாசமாக எடுத்து வளைத்தான் (புஷ்ப சாபமிது பேஸலம்’) என்று வர்ணிக்கிறார்.

இவர்களில் இருந்து வேறுபடுகிறார் தியாகராஜர். தனது ‘அலக லல்லலாட ககநி’ என்ற மத்யமாவதிராகக் கீர்த்தனையில். எப்படி? ‘இங்கிதஞாஸ்ச கோஸலா’ என இங்கிதம் அறிந்து செயல்படுகிறவன் ராமன். அவனைப் பார்த்து, அந்த வில்லைப் பார்” என ராஜரிஷி சொல்லி, அதன்பிறகு ராமன் வில்லை எடுத்தான் என்பது பொருத்தமாக இல்லையே என நினைத்து, ‘முனி கனுஸைக தெலிஸி’ என்று சொல்கிறார்.

விஸ்வாமித்திரர், அந்த வில்லை எடு” என்று வாயால் சொல்லவில்லையாம். கண்ணசைவால் உணர்த்தினாராம். அதைப் புரிந்து கொண்டே ராமபிரான் செயல்பட்டானாம்.

‘முனிவரின் கண் அசைவை அறிந்து நீ சிவதனுஸை வளைக்கையில், உனது சுருள் முடிக்கற்றைகள் ஒரு வீரனுக்கே உரிய வேகத்துடன் புரள, அந்த அழகையும் புஜபலத்தையும் கண்ட அந்த ராஜரிஷி எத்தனை மகிழ்ந்தானோ ராமா’ என்கிறார். விஸ்வாமித்திரர் ராஜாவாக இருந்து, ராஜரிஷியாக உயர்ந்தவரல்லவா! அவரால்தான் அந்த புஜபலத்தையும், வீரத்தின் அழகையும் கண்டு ஆனந்திக்க முடியும்.

படிக்கும்போதே, ராமனும் விஸ்வாமித்திரரும் ஒருவரையொருவர் பார்ப்பது போன்றும், வில்லை ராமன் வளைப்பது போன்றும் தெரிகிறதே. இது அவர் கற்பனையா? ராமன் அவருக்களித்த காட்சியா? வால்மீகிக்கு ராமாயணம் ஸ்புரித்ததுபோல, தியாகராஜருக்கும் தரிசனப்பட்டிருக்க வேண்டும். அந்த ராமனின் கடைக்கண் பார்வை பட்டால், எதுதான் சாத்தியமில்லை?!

பல்லவி

அலக லல்லலாட ககநி

ஆராண்முகி எடு பொங்கெநோ

அனுபல்லவி

செலுவு மீரகநு மாரீ

சுநி மதமணசே வேள

(அலகலல்ல…)

சரணம்

முநி கநு ஸைகதெலிஸி சிவ

தனுவுநு விறிசே ஸமய

முந த்யாகராஜ விநு

துநி மோமுந ரஞ்ஜில்லு

(அலக…)

பொருள்:

தோற்றப் பொலிவுடன் மாரீசனின் மதத்தை அடக்கும் சமயம் (ராமனின்) நெற்றியில் புரள்கின்ற சுருண்ட குழல் அசைந்து ஆடுவதைக் கண்டு, அந்த ராஜரிஷி விசுவாமித்திரர் எப்படி மகிழ்ந்தாரோ…!

அம்முனியின் கண்ஜாடையைத் தெரிந்து கொண்டு, பரமசிவனின் வில்லை எடுத்து ஒடிக்கும் தருணத்தில், தியாகராஜன் வணங்கும் தெய்வமாகிய அந்த ராமனின் முகத்தில் விளங்கும் சுருண்ட குழல்களைக் கண்டு எவ்வாறு மகிழ்ந்தாரோ…!

–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Advertisements

3 thoughts on “கடைக்கண் பார்வை – வேதா

  1. பலரிடம் கேட்டு பதில் கிடைக்காதா கேள்வி – தியாகராஜரின் வரலாறு, பாடல்களுடனும், அதன் அர்த்தத்துடனும் ஏதாவது புத்தகமாக வந்துள்ளதா. சிறு வயதில் பக்கத்துவீட்டு பாட்டி கதையை சொல்லிவிட்டு அப்போது அவர் என்ன பாட்டு பாடினார் என்று பாடிக் காட்டுவார். அது போன்ற புத்தகம் உள்ளதா?

    • BaalHanuman May 1, 2013 at 5:53 AM Reply

      N.Chokkan says…
      Thyagarajar bio has come (many publishers), his songs + translation is available at Vanathi, I don’t remember seeing a single book with both.

  2. நன்றி. தேடிப் பார்க்கின்றேன் கிடைத்தால் மகிழ்ச்சி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s