12-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

பாரதிராஜா பற்றி சொன்னபோது 16 வயதினிலே பற்றியும் சொல்லியிருந்தேன். ஆனால் 16 வயதினிலே படத்திற்கு முன்பே இந்த ஆண்டில் (1977) வேறு சில படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தைப் பார்த்து இயக்குனர் பாலசந்தர் கமலஹாசனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது…

“My dear Rascal, what a consummate artistry you have shown. There is only one word – beautiful… keep it up.”

பாரதிராஜாவின் பாத்திரப்படைப்பு எப்போதுமே மிக நேர்த்தியாக இருக்கும். அந்த படைப்பிற்கு திரையில் உயிர் கொடுப்பதில் இளையராஜாவிற்கு அதிக பங்கு உண்டு. இந்த படத்திற்கு பாட்டு எழுதியவர்களில் கண்ணதாசன் முக்கியமானவர். பாரதிராஜா பாடலுக்கான காட்சியமைப்பை கவிஞர் கண்ணதாசனுக்கு விளக்கிச் சொன்னதும், இளையராஜா பாடலுக்கான மெட்டை வாசித்துக் காட்ட, சிந்திக்கும் நொடி நமக்கு தெரியாமல் பாடல் வரிகளை சொன்னாராம். சப்பாணி பாடுகிற வேடிக்கைப்பாடலான ஆட்டுக்குட்டி முட்டையிட்டு தான் அந்தப்பாடல். கவிஞரின் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் நடந்த ஒரு விழாவில் பாரதிராஜாவே பேசியது இது.

மலேசியா வாசுதேவனும், ஜானகியும் அனுபவித்து பாடிய பாடலில், கவிஞரின் வரிகளுக்கு இளையராஜாவின் மெட்டும் இசையமைப்பும் சுவாரஸ்யத்தை கூட்டிவிட்டது. கடைசியில் கழுதையின் கனைப்போடும், எள்ளல் சிரிப்போடும் முடிவது கதைக்கு மட்டும்தான். பாடல் “கூத்து மேட ராசாவின்” நாதமாக ஒலித்தது.

இளையராஜா செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் இது.

இதேபோல ஸ்ரீராகத்தில் இளையராஜா இசையமைத்த ஒரே பாடல் “சோளம் வெதைக்கயில” பாடல். இந்த பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. 15 நிமிடத்தில் மெட்டமைத்து இளையராஜாவே பாடிய டைட்டில் பாடல். (திரைப்படத்தில் இளையராஜா பாடிய முதல் முழுப்பாடல்). இந்த பாடல் பற்றி இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னபோது, “பல நாள் கஷ்டப்பட்டு உருவாக்கும் பாடல்கள் சிலசமயம் பலிப்பதில்லை. ஆனால் இதுபோன்ற மின்னல் பாடல்கள் வெற்றி பெற்றுவிடுவதுண்டு” என்று.

“செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா” – கிராமத்து குதூகலம். இளம்ஜோடியின் உற்சாக நடை. நாட்டியத்துள்ளலோடு காற்றில் புரளவிடுகிற வண்ணப் பொடிகளைபோல விழிகளுக்கு முன் விளையாடும் காட்சியமைப்பிற்கு இந்த பாடல் சங்கமித்திருக்கும். என்னமோ என்னமோ ஹோய் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல தமிழ் சினிமா உலகில் வளமையான போக்கு நிகழ இளையராஜாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இதை ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இதோ இந்த புள்ளிவிவரங்களைப் பாருங்கள்…

1972ல் வெளிவந்த படங்கள் – 56
1973ல் வெளிவந்த படங்கள் – 54 சராசரியாக இந்த எண்ணிக்கையில்தான் படங்கள் வந்து கொண்டிருந்தது.

1976-ல் இளையராஜா அறிமுகமாகி 1977-ல் பவனி வரத் தொடங்கினார்.
1976, 1977க்கு பின் வெளிவந்த படங்கள் எண்ணிக்கை அதிகமே.
1978 – 87 படங்கள்
1979 – 99 படங்கள்
1980 – 107 படங்கள்

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

2 thoughts on “12-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. ILAMURUGAN April 28, 2013 at 3:45 AM Reply

    super information

  2. இளையராஜா புகழின் உச்சிக்கு போன பின்னாலும், புதியவர்களை ஆதரிக்க தயங்கியதில்லை. பல புதிய இயக்குனர்களின் விசிட்டிங்கார்டாக ராஜாவின் பாடல்கள் இருந்துள்ளது. அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s