11-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இளையராஜா பற்றிச் சொல்லும் போது எப்படி பாரதிராஜாவைப் பற்றிச் சொன்னேனோ அதே போல சி.ஆர். சுப்பராமன் அவர்களைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். எத்தனை பேருக்கு அவரைத் தெரியும் என்று தெரியவில்லை.

நாகேஸ்வரராவ், சாவித்ரி நடித்த “தேவதாஸ்” படத்திற்கு இசையமைத்தவர்தான் இந்த சி.ஆர்.சுப்பராமன் அவர்கள். இந்தப் படம் மட்டும் அல்ல, எம்.கே.தியாகராஜ பாகவதர், பானுமதி நடித்த “ராஜமுக்தி“, என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் உருவான “மணமகள்“, நாகேஸ்வரராவ், பானுமதி நடித்த “லைலா மஜ்னு” போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர்.

ஆனால் இவருக்கும் இளையராஜாவிற்கு என்ன சம்மந்தம் என்று கேட்கலாம். தன் மானசீக குரு என்று இளையராஜா சொல்வது சி.ஆர். சுப்பராமன் அவர்களைத்தான்.

இளையராஜாவே ஒரு தொகுப்பில் இவரைப்பற்றி எழுதியது… 

“என் முதல் மானசீக குரு சி.ஆர்.சுப்பராமன் பின்னணி இசை கம்போஸ் செய்வது அற்புதமான காட்சியாக இருக்கும் என்று அறிந்திருக்கிறேன். பின்னணி இசை அமைப்பதற்கானக் காட்சியை சுப்பராமன் அவர்களுக்குத் திரையிட்டுக்காட்டுவார்கள். 10 நிமிடம் திரையில் ஓடும் படத்தைப் பார்த்து விட்டால் பியானோ முன் வந்து உட்கார்ந்துவிடுவாராம். இரண்டு கைகளாலும் அவர் வாசிக்க அதை வலதுபுறம் விஸ்வனாதன் அவர்களும், ராமமூர்த்தி அவர்களும் இடதுபுறம் கோவர்த்தனம் அவர்களும், Sri-ராமுலுவும் அமர்ந்து கொண்டு வாசிக்க வாசிக்க எழுதிக்கொள்வார்களாம். எதை எந்த வாத்தியத்திற்குக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுப் பிரித்து கொடுத்து அதை ஒத்திகை பார்க்கும்போது “ஏய், இந்த நோட்ஸை தப்பாக் கொடுத்தது யாரு என்று கேட்டு அதை மீண்டும் வாசித்துக்காண்பித்து சரி செய்வாராம்.

வாசிப்பதை நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்கள் எழுதுவதிலும் தவறு வர அதை ஞாபகமாய் சரிசெய்தார் என்றால் அவருடைய ஞானத்தை என்னவென்று சொல்வது? முப்பத்தி இரண்டு வயதே வாழ்ந்த அவர் எவருக்கும் இணை இல்லாதவர்.

இவர் இசையமைத்த பாடல்கள் மிகப்பிரபலமானதால் பொறாமை கொண்டவர்கள் அவரை “டப்பா மியூசிக் டைரக்டர்” என்று கூறிவந்தார்கள். சினிமா இசையை டப்பா இசை என்று சங்கீதவித்வான்கள் கேலியாகக் கூறுவது அக்கால வழக்கம். கலைவாணரும், சுப்பராமனும் நல்ல நண்பர்கள். ஒருமுறை இதுபற்றி கலைவாணரிடம் கூறி வருத்தப்பட, “கவலைப்படாதே சுப்பராமா! உன்னுடைய சங்கீத ஞானத்தை காட்டுவதற்காகவே ஒரு படம் எடுக்கிறேன்” என்று கூறி “மணமகள்” என்ற படத்தை தயாரித்தார். அதில் அத்தனையும் கர்னாடக சங்கீதப்பாடல்கள். வைரமணிகள் போல் ஒளிவீசும் வண்ணம் இசையமைத்திருந்தார்.

மகாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே” பாடலுக்கு அவர் ராகமாலிகையில் இசையமைத்திருந்தார். உயிரையே கொள்ளைகொள்ளும் உன்னதமான பாடல். டப்பா சங்கீதம் என்று சங்கீத வித்வான்கள் கூறிவந்த சினிமா சங்கீதத்தை உயர்த்தி, சினிமா பாடல்களை சங்கீத மேடைகளுக்கு கொண்டுபோக வைத்தார். “சின்னஞ்சிறு கிளியே” சங்கீத கச்சேரிகளில் பாடாத வித்வான்கள் இல்லை என்ற அளவிற்கு இசையமைத்திருந்தார்.”

தன் மானசீக குருவான சி.ஆர்.சுப்பராமன் அவர்களைப் பற்றி இளையராஜா சொன்னதை இந்த அத்தியாயத்தில் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 10 நிமிடம் காட்சியை பார்த்துவிட்டு வந்து பியானோவில் வாசிக்க ஆரம்பித்துவிடுவார் என்று தன் மானசீக குருவான சி.ஆர்.சுப்பராமன் அவர்களைப் பற்றி வியந்து சொன்ன இளையராஜா, தான் இசையமைக்கும் படங்களுக்கு பின்னணி இசை சேர்ப்புக்காக திரையிடப்படும் காட்சியைப் பார்த்துவிட்டு எந்த ஒரு இசைவாத்தியங்களையும் வாசிக்காமலேயே இசைக்குறிப்பு எழுதும் வல்லமை படைத்தவர். அந்த இசைக்குறிப்புகளை அந்தந்த வாத்தியக்கலைஞர்கள் எழுதிக்கொண்டு வாசித்தாலே போதும் காட்சியமைப்பிற்கு கனகச்சிதமாகப் பொருந்திவரும்.

இன்று வரையில் இளையராஜாவை பின்னணி இசையில் ஈடு செய்ய யாரும் வரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

3 thoughts on “11-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. krishnamoorthys April 27, 2013 at 4:20 AM Reply

    தெளிவான ஆழ்ந்த பார்வை பதிவு .தொடருங்கள் ..

  2. “சின்னஞ்சிறு கிளியே’ இப்பாடல் சினிமா பாடல் என்றே பலருக்கு தெரியாது. அதாவாது சினிமாவில் வந்த பாரதியார் பாடல். என் மனைவி முதன்முறை இதன் ஒரிஜினலை கேட்டு விட்டு குழம்பிவிட்டாள். எனக்கு சி.ஆர்.சுப்பராமன் என்ற பெயர் தெரிந்தது இப்பாடல் மூலம், அவர் பெரிய இசையமைப்பாளர் என்பது அடிக்கடி ராஜா தன் பேட்டிகளில் கூறுவதன் மூலம், அனைத்தையும் விட அதிக தகவல்கள், இத்தொடரின் மூலம்.

  3. rathnavelnatarajan May 5, 2013 at 11:10 AM Reply

    அருமையான பதிவு.
    நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s