மணியம் செல்வன் – சிவா கிருஷ்ணமூர்த்தி


a89

Essex_Siva

நண்பர் சிவா எழுதி இந்த மாத சொல்வனத்தில் வெளியாகியுள்ள ‘மணியம் செல்வன்‘ இதோ உங்கள் பார்வைக்கு… இந்தக் கதையைப் பற்றி நண்பர் நட்பாஸ் கூறுகிறார்…

மேம்போக்கான பார்வையில் எளிய, பொழுதுபோக்கு சிறுகதை. ஆனால், வானத்தையும் அதிலுள்ள மேகங்களையும் எப்போதும் பார்த்து பலவகை கற்பனைகளையும் வளர்த்துக் கொள்ளும் நாயகனைக் கொண்டு கதைக்கு ஒரு புதிய பரிமாணம் தந்திருக்கிறார் சிவா. தலைப்பும் பொருத்தம்.

படிமம் என்றாலே கனமாக இருக்க வேண்டும் என்ற பாவனையை உடைக்கும் நுட்பமான படைப்பு, இலக்கியத்தின் இறுக்கமான குரலில் துள்ளலைச் சேர்க்கும் ஆக்கம்.

நட்பாசுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் ஏற்கனவே மிகப் பிரபலம். நண்பர் ஆர்.வி. தளத்தின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர். சொல்வனம் இதழில் ஒரு புதிய பொறுப்பை சமீபத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆம்னி பஸ் தளத்திலும் நண்பர் கிரியுடன் இணைந்து தொடர்ந்து கலக்குகிறார்…

சொல்வனம் அதன் தரத்தின் காரணமாக எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு தளம். இந்த அருமையான கதையை நமது பாலஹனுமான் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய நண்பர் நட்பாசுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இதே கதையைப் பற்றி மற்றொரு நண்பர் திரு.ஆர்.ஜகன்னாதன்..

மணியம் செல்வன்’ – நல்ல தலைப்பு. அந்தப் பெண்ணை வர்ணனை செய்யாமலேயே வாசகனின் மனக் கண்ணுக்குத் தெரிய வைத்துவிட்டார் சிவா!

நீண்ட கதை – ஆனால் இழுத்துப் பிடித்துவைக்கும் நடை.

//கண்டிப்பாய் குள்ளமாகத்தான் இருக்கவேண்டும் அந்த குண்டு கரிச்சட்டி.// படிக்கும் நான் புன்னகைத்தேன். கதையிலும் அவன் புன்னகைத்தான்!

//மகா யோக்ய முகம். பஸ் ஸ்டாண்டில் நம்பி சூட்கேஸ்களைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாத்ரூம் போகலாம் போன்ற முகம்.
ஆனால் உண்மையில் உள்ளே இருக்கிறது. ஒரு கொழ கொழ, கரிய, அருவருப்பான ஜெல்லி…// என்ன ஒரு எழுத்து! பலரும் அல்லது எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் இப்படித்தானோ என்று எண்ண வைக்கிறது!
சிவாவுக்கு வாழ்த்துக்கள். இதை சிபாரிசித்தவருக்கு நன்றி!

இதுவரை நீங்கள் படிக்கவில்லையென்றால், இந்தக் கதை இதோ உங்கள் பார்வைக்கு…

aw

மணியம் செல்வன்

சிவா பற்றிய ஒரு சிறு குறிப்பு…

Essex_Siva

இங்கிலாந்தில் வசிக்கும் இவர் Essex Siva என்ற பெயரிலும் மிகப் பிரபலம். என்னைப் போலவே சுஜாதா ப்ரியர் 🙂

இவரது மற்ற சில படைப்புகள்…

3 thoughts on “மணியம் செல்வன் – சிவா கிருஷ்ணமூர்த்தி

 1. ரெங்கசுப்ரமணி April 24, 2013 at 10:57 AM Reply

  நல்ல நடை. மெலிதான கிண்டல், எள்ளல். கொஞ்சம் பெரிய கதையாக இருந்தாலும் போரடிக்கவில்லை.

  உவமைக் கவிஞர் போல இவர் உவமை எழுத்தர் போல. ஏகப்பட்ட உவமைகளை தெளித்துள்ளார். ஒரு வேளை கவிதையும் எழுதுவாரோ என்று பயமாக இருக்கின்றது.

 2. natbas April 25, 2013 at 12:42 AM Reply

  நியாயமான பயம் ::)

  அறிமுகத்துக்கு நன்றி. ஒரே ஒரு திருத்தம் – சொல்வனம் இதழில் எந்தப் பொறுப்பிலும் நான் இல்லை.

  இணையத்தில் எல்லாரும் அவரவர் வட்டங்களில் பிரபலம் என்பதால் மிகப் பிரபலம் என்ற விஷயத்தை மறுக்கவில்லை 🙂

  பகிர்வுக்கு நன்றி. நண்பர் ஆர்.வி. தளத்தில் நடந்த உரையாடலை மறக்க முடியாது :

 3. Chandramouli April 25, 2013 at 3:23 AM Reply

  I enjoyed reading Essex Siva’s “Maniam Selvan” – easy ‘saralamana nadai’ like in ‘அன்றுதான் யங் அண்ட் ஸ்டுப்பிட்…இப்போது யங் இல்லை, நிச்சயம். ஸ்டுப்பிட்..? Congrats to the writer.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s