9-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

அன்னக்கிளியைத் தொடர்ந்து இளையராஜா இசையமைத்த ஒரு சில படங்கள் வெற்றி பெறவில்லை. “உறவாடும் நெஞ்சம்” என்றொரு படம். இந்தப் படத்தை இயக்கியது அன்னக்கிளி பட இயக்குனர்கள் தேவராஜ்-மோகன். சிவகுமார், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், எஸ்.வி.சுப்பையா என்று அதே அன்னக்கிளி வரிசை இதிலும்.

இந்தப் படத்தில் தேவார ஓதுவார் லால்குடி ஸ்வாமிநாதன் அவர்களை சுந்தரேச தீட்சிதர் என்பவரோடு இணைத்துப் பாட வைத்திருந்தார் இளையராஜா. இந்த படத்தில் அது ஒரு புதுமை. இந்த படத்தில் வரும் “ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்” என்ன ஒரு கனிவான வார்ப்பு. “ஒரு நாள்” என்று தொடங்கி “திரு நாள்” என்று முடியும் பல்லவியின் களிப்பில் ஒரு சுகமான சங்கமத்தின் வளையம் நிறைவு பெறும். இந்த படமும் “பாலூட்டி வளர்த்த கிளி” என்று இன்னொரு படமும் ஏனோ வெற்றி பெறவில்லை.

70-களின் இரண்டாம் பாதியில் நாவல்களை படமாக்கும் போக்கு இருந்தது. எழுத்தாளர் மகரிஷியின் சிறு நாவலான “பத்ரகாளி” இதே ஆண்டு படமாக்கப்பட்டது. “அன்னக்கிளி” யும், “பத்ரகாளி“யும் சினிமாவின் கதவுகளை இளையராஜாவிற்காகத் திறந்துவிட்டது.

அன்னக்கிளி போல நல்ல பாடல்களும், வெற்றியும் ஒருங்கே பெற்ற படமாக பத்ரகாளி அமைந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களுமே முக்கோணக் காதல் கதைதான். இரண்டிலும் இரண்டு பெண் ஒரு ஆண். மூன்றாவது கோணத்தில் இருக்கும் பெண் உச்சகட்ட காட்சியில் தனது செயலால் படத்தின் பிரச்சனைக்கு தீர்வு நல்குகிறாள். ஆனால் அன்னக்கிளியின் கிராமீய அன்னத்திற்கும், பத்ரகாளியின் மன நிலை சரியில்லாத காயத்ரிக்கும் பாத்திரப்படைப்பில் உள்ள வேற்றுமையைப்போல இளையராஜா பத்ரகாளிக்கு அமைத்த இசையும் வேறுபட்டது. முதல் படம் கிராமிய மணம் என்றால் இது மெல்லிசைக் கோலம்.

மோகனத்தில் அமைந்த “கண்ணன் ஒரு கை குழந்தை” சுசீலா, யேசுதாஸின் குரல்களில் கேட்போரை ஒரு மந்திர வட்டத்திற்குள் சிருஷ்டிக்கும். “ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் உந்தன் சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா” பாட்டு சுகத்தில் கலந்துவிடத்தோன்றும்.

மடிசார் கட்டும் மாமிகளை ஆடவிடுவது தமிழ் சினிமாவின் ஒரு மசாலா சேர்க்கை. வாங்கோன்னா அட வாங்கோன்னாவும் இந்த வகைதான். கேட்போரை ஆடவைக்கும் இசைச்சேர்க்கை. இளையராஜாவின் நல்ல பாடல்களோடு திரைப்படமும் நல்ல வெற்றிப்படமானது. இல்லையென்றால் “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” என்று ஆகியிருக்கும்.

1976 – இந்த ஆண்டு இளையராஜா இசையமைத்து வெளிவந்த படங்கள்

1. அன்னக்கிளி – 5 பாடல்கள்
2. பாலூட்டி வளர்த்த கிளி – 2 பாடல்கள்
3. உறவாடும் நெஞ்சம் – 4 பாடல்கள்
4. பத்ரகாளி – 6 பாடல்கள்
5. அதிர்ஷ்டம் அழைக்கிறது (தகவல் எதுவும் தெரியவில்லை)

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

One thought on “9-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. rathnavelnatarajan April 28, 2013 at 5:49 AM Reply

    திரு இளையராஜா அவர்களின் வித்தியாசமான முயற்சி பற்றிய திரு பாலஹனுமான் அவர்களின் பதிவு. அருமையான பதிவு. நன்றி.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s