ஸ்ரீ ராம நவமி விரதம்…. April 19, 2013


ஸ்ரீ ராம நவமி விரதம்….

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர்.

அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார்.

இந்நாளில் ஸ்ரீராமருக்கு கோவில்களில் பட்டாபிஷேகம் நடைபெறும். அன்று, கோவிலுக்கு செல்ல முடியாதபோது, பட்டாபிஷேக ராமர் படத்தை நன்றாகச் சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவைகளால் பொட்டிட்டு, துளசியால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும்.

பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்யமாக, சாதாரணமாகத் தினம் தயார் செய்யும் உணவோடு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் ஆகியவைகளைப் படைக்கலாம்.

அர்ச்சனை முடிந்தபின், நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும். ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.

சிலர், பத்து நாட்களுக்கு முன்னரே ராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்யமாகப் படைப்பார்கள். அவ்வாறு முடியாவிட்டாலும், ஸ்ரீராம நவமியன்று, ராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, சிறிது நேரமாவது ராமாயணம் படிப்பதோ நல்லது.

காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும் நாடிய பொருட்கள் கைகூடும். ராமாயணத்தை முழுமையாகப் படிக்க முடியாத பட்சத்தில் “ராம்” என்ற இரண்டெழுத்தை உச்சரித்தால் கூடப் போதும், மேற்கூறிய பலன்களோடு ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும்.

–நன்றி நெய்வேலி ஸ்ரீ சந்தானகோபாலன்

Advertisements

3 thoughts on “ஸ்ரீ ராம நவமி விரதம்…. April 19, 2013

  1. venkat April 19, 2013 at 1:12 AM Reply

    ராம நவமி நன்னாளன்று இந்த பகிர்வினை வெளியிட்டு எங்களுக்கும் ராமனின் அருள் கிடைக்கச் செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி…..

  2. vidya (@kalkirasikai) April 19, 2013 at 3:28 AM Reply

    ஸ்ரீ ராம நவமி சிறப்புப் பதிவுக்கு நன்றி பால் ஹனுமான்

  3. ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துக்கள்…

    நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s