கடுகும் நெய்யும்…


சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற எனது பெண்ணின் திருமண வரவேற்பில் இருந்து சுவையான ஒரு நிகழ்ச்சி…

சென்னை நியூ வுட்லண்ட்ஸ் lawn-ல் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் சிறப்புக் கச்சேரி. எழுத்தாளர் கடுகு தனது துணைவியாருடன் வந்திருந்தார்.

நெய்வேலி மற்றும் கடுகார் இருவரும் அவரவர் நகைச்சுவைக்குப் பேர் போனவர்கள் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.

இந்த இரண்டு ஜாம்பவான்களின் சந்திப்பின்போது…

கடுகு: என்ன ஸார், என்னைப் பார்க்க dining hall-க்கே வந்து விட்டீர்களே ?

நெய்வேலி: கடுகை dining hall-ல் சந்திப்பது பொருத்தம்தானே ?

கடுகு: கடுகுடன் இப்போது நெய்யும் (நெய்வேலி) சேர்ந்து விட்டது. இன்றைக்கு ரசம் ஓஹோதான்! என்றாரே பார்க்கலாம் 🙂

கடுகு பற்றிய ஒரு கடுகுச் செய்தி…


கடுகு தற்போது இங்கே New Jersey (தனது பெண்ணின் இல்லத்திற்கு) வந்திருக்கிறார். இந்த ஊர் பாஷையில் சொல்வதென்றால், ‘he is just a phone call away now :-)’ நண்பர் தேசிகன் கொடுத்தனுப்பிய ‘அப்பாவின் ரேடியோ‘ சிறுகதைத் தொகுப்பு மற்றும் ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் வினோத் என்ற பெயரில் எழுதிய ‘Lights on‘ புத்தகங்களை எனக்காக இந்தியாவில் இருந்து எடுத்து வந்திருக்கிறார். இந்தப் புத்தகங்கள் பற்றிய என்னுடைய அறிமுகம் விரைவில் உங்கள் பார்வைக்கு… (விதி வலியது என்ற உங்கள் mind voice எனக்குக் கேட்கிறது 🙂

Advertisements

13 thoughts on “கடுகும் நெய்யும்…

 1. ஹா… ஹா… உரையாடலை ரசித்தேன்…

  படங்கள் அருமை…

  நன்றி…

  • BaalHanuman April 18, 2013 at 11:06 PM Reply

   ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி…

 2. -கடுகு April 18, 2013 at 4:46 PM Reply

  ரசமான கடுகுச் செய்தி!!!

  • BaalHanuman April 18, 2013 at 11:07 PM Reply

   கடுகு ஸார்,

   இதிலும் உங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்தேன் 🙂

  • Pandian April 19, 2013 at 4:51 AM Reply

   எழுத்தாளர் கடுகு மிகவும் பண்பான மனிதர். நான் இணையத்திற்கு அறிமுகமான புதிதில் தனது இரண்டு புத்தகங்களைப் பரிசாக அனுப்பி, அதைப் படித்தாவது நான் உருப்படுவேனோ என்று முயன்று பார்த்து தோல்வி அடைந்தவர்.

   நன்றி

 3. natarajan1950 April 18, 2013 at 4:51 PM Reply

  Reblogged this on Take off with Natarajan.

 4. R. Jagannathan April 18, 2013 at 5:26 PM Reply

  இந்த ‘ரசத்’தை நீங்கள் இத்தனை நாள் தனியாக ரசித்துக் கொண்டிருந்தீர்களா! இங்கு பந்தி போட்டு பகிர்ந்துகொண்டதில் இன்னும் சுவை கூடியிருக்குமே!

  2 புத்தகங்களும் சிறப்பாகத்தான் இருக்கும். அவற்றை நீங்கள் ரசிக்கும் அனுபவத்தை விமரிசனம் என்ற பெயரில் பகிர்ந்துகொள்ளப் போவதை எதிர்பார்க்கிறேன்.

  -ஜெ.

  • BaalHanuman April 18, 2013 at 11:08 PM Reply

   நன்றி ஜெ உங்கள் எதிர்பார்ப்பிற்கும் நம்பிக்கைக்கும் 🙂

 5. பாரதி மணி April 19, 2013 at 10:35 AM Reply

  எழுபதுகளில் எனது தில்லி DBNS நாடகக்குழு 4 நாடகங்கள் போட பம்பாய்க்கு போயிருந்தோம். ஒரு ஆங்கில நாடகத்தை ’பாவம் பூபதி!’ என்ற பெயரில் பி.எஸ்.ஆர் ‘அகஸ்தியன்’ என்ற புனைப்பெயரில் மொழிபெயர்த்திருந்தார். இ.பா.வின் மழை, போர்வை போர்த்திய உடல்கள்’, பாவம் பூபதி!, ஸ்டேர்கேஸ் இவை நாடகங்கள்.

  கடுகும் கூட வந்திருந்தார். பம்பாயில் ஒரு பள்ளிக்கூடத்தில் தங்க ஏற்பாடு. இரவு படுக்கும்போது, காற்றுக்காக நாங்கள் மொட்டைமாடிக்குப் போய்விடுவோம். அங்கே கொசுக்கடி அதிகம்.

  நள்ளிரவு வரை எங்கள் அரட்டை தொடரும். தள்ளி படுத்துக்கொண்டிருந்த கடுகு ஓடி எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். ‘என் படுக்கையில் ரெண்டு தலகாணி வெச்சு போர்வையாலே மூடிட்டேன். நான் உள்ளே படுத்திருக்கேன்னு கொசு அங்கேயே சுத்திட்டிருக்கும்…..இங்கே வராது!’ என்று சிரிக்காமல் சொன்னார்!

 6. சிவா கிருஷ்ணமூர்த்தி April 19, 2013 at 2:47 PM Reply

  “‘என் படுக்கையில் ரெண்டு தலகாணி வெச்சு போர்வையாலே மூடிட்டேன். நான் உள்ளே படுத்திருக்கேன்னு கொசு அங்கேயே சுத்திட்டிருக்கும்…..இங்கே வராது!’ என்று சிரிக்காமல் சொன்னார்!”
  ஹஹஹா! சிரிப்பை அடக்கமுடியலை..!

  சிவா கிருஷ்ணமூர்த்தி

 7. KLIKRAVI April 20, 2013 at 5:24 PM Reply

  KADUGU HAPPENS TO BE MY GOOD FRIEND. AND FOR HIS 80TH MARIAGE I ONLY TOOK FOTOS AND VIDEOS. REMEMBERABLE EXPERIENCE TO CAPTURE ALL THE LITERARY JAMBAVANS WHO ATTENDED THE FUNCTION.

  REGARDS
  KLIK RAVI

 8. rathnavelnatarajan April 24, 2013 at 11:09 AM Reply

  அருமையான பதிவு.
  நன்றி.

 9. கிரி April 25, 2013 at 5:13 AM Reply

  “இந்தப் புத்தகங்கள் பற்றிய என்னுடைய அறிமுகம் விரைவில் உங்கள் பார்வைக்கு”

  உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s