Frontline Aug 22-Sept 4, 1987 இதழில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டியில் இருந்து…


மியூசிக் அகாதமி வித்வான்கள் தியாகராஜரின் பதினைந்து கீர்த்தனைகளை மனப்பாடம் செய்துவிட்டு அதையே திரும்பத் திரும்பப் பாடுகிறார்கள் என்றும், அவர்களின் குரல்களில் ரீங்கரிக்கும் அகங்காரத்தைத் தான் கேட்டிருப்பதாகவும் இளையராஜா கூறுகிறார்.

ஏன் நீங்கள் அதிகம் பேட்டிகள் தருவதில்லை என்ற கேள்விக்கு, விமர்சகர்கள் எல்லோரும் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததான நினைப்புடன் பேசுபவர்கள். அவர்களுடைய கருத்துக்களை என் வாயால் வரவழைக்கப் பிரயத்தனப்படுபவர்கள், அவர்களுக்கு நான் ஏன் அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்று கேட்கிறார்.

“இசையில் Value Judgements க்கு இடம் இல்லை. ஒரு இசை வடிவம் இன்னொன்றை விட உயர்ந்தது என்பது போலான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமையில்லை,” என்கிறார்.

கர்நாடக சங்கீதம், லைட்மியூசிக்கைவிட உயர்ந்தது என்று கூறும் பலருக்கு, லைட் மியூசிக்கே தெரியாது என்கிறார்.

மேலும் இசை என்பது வெறுமனே ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் போடும் ஏமாற்று வேலை தான் என்கிறார்.

நாயின் குரைப்பிலும், கதவோசையிலும் இசையைப் பார்க்க முடியும்.  ஊளையிடும் நாய்களுக்கும், வித்துவான்களுக்கும் வித்யாசமில்லை என்கிறார்.

“நான் ஒரு சங்கீதக்காரனில்லை. ஒரு வித்வானுக்கு அவனுடைய ராகம் ஒரு தடை; தாளம் ஒரு தடை; அவனுடைய இசைப் பயிற்சி ஒரு தடை; இசை பற்றிய அவனுடைய கருத்துக்களே ஒரு தடை. நான் சங்கீதக்காரனில்லாததால் என்னைக்குறுக்கக் கூடிய எல்லைகள் எதுவும் இல்லை. என் மனதுக்குத் தோன்றுவதைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை; உதாரணத்திற்கு நான் ஆரோகணத்தில் மட்டுமே ஒரு பாடலை இசை அமைத்திருக்கிறேன். (கலைவாணியே / உனைத்தானே அழைத்தேன் // உயிர்த்தீயை வளர்த்தேன் / வர வேண்டும் வரம் வேண்டும் // ) ஆனால் சங்கீத வித்வான்கள் எல்லோரும் ஒரு கீர்த்தனை என்பது ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று நம்பி வந்திருக்கிறார்கள்,” என்று பேட்டியில் கூறுகிறார்.

இதில் எடுத்துக் காட்டியுள்ள இளையராஜாவின் கூற்றுகள் Frontline Aug 22-Sept 4, 1987 இதழில் வெளிவந்த பேட்டியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை.

இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்

Advertisements

4 thoughts on “Frontline Aug 22-Sept 4, 1987 இதழில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டியில் இருந்து…

 1. R. Jagannathan April 16, 2013 at 9:55 AM Reply

  An element of truth in the interview with too much of ego and arrogance! He compares dog’s barking with karnatic singing; He also says that light music and classical are different forms of music and thus Classical Karnatic is not to better than cine music! Then why didn’t he compare the dog’s barking with cine music? He is the one who gve us songs like ‘Anne Anne Sippaayanne’ and expects us to treat as same as ‘Paadariyenm padippariyen..! – R. J.

 2. இது கொஞ்சம் குசும்பான வேலை. ஒரு பேட்டியின் நடுவில் இரண்டு இரண்டு வரிகளை உருவி போட்டு விட்டு பார் எப்படி பேசியிருக்கின்றார் என்பது. இது ராஜாவுக்கு பல முறை நடந்துள்ளது. பாப் மார்லியை குப்பை என்றார் என்பது போன்று பல.

  தியாகராஜரை பற்றி பல பேட்டிகளில் புகழ்ந்திருக்கும் ராஜா கர்நாடக சங்கீதத்தை கேவலமாக பேசியிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. முழுப் பேட்டியையும் படித்தால் மட்டுமே நாமும் முழுசாக ராஜாவை திட்ட கிளம்ப முடியும்.

  கட்டுரையாளர் கூறுவதை என்னால் முழுசாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹவ் டு நேம் இட், கேட்க நன்றாகத்தான் உள்ளது. எனக்குபிடித்திருக்கிறது. அவருக்கு பிடிக்கவில்லை போல. ஆரோகணம் அவரோகணம் எல்லாம் யாராவது சங்கீத வித்வான்கள் விளக்கினால்தான் புரியும். யாராவது விளக்குங்கள் ப்ளீஸ்.

  பாரதி மணி சார், உங்கள் நாடக வேலைக்கு நடுவில் இதையும் கொஞ்சம் கவனியுங்களேன். (அவர்தான் சொன்னார் ராகங்களை பற்றி எந்த சந்தேகமும் கேட்கலாம் என்று)

  • BaalHanuman April 16, 2013 at 1:55 PM Reply

   அன்புள்ள ரெங்கசுப்ரமணி,

   நீங்கள் கூறுவது மிகச் சரியே. ‘How to name it ?‘ பற்றி ரா.கிரிதரன் சொல்வனம் இதழில்…

   How to name it’ இசைத்தொகுப்பு வெளியானபின் பல காட்டமான, நிராகரிப்பு தொக்கிய விமர்சனங்கள் முன்வைக்கப்படன. ராஜலஷ்மி என்பவர் மீட்சி இதழில் எழுதிய ‘இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்’ எனும் கட்டுரை இப்படிப்பட்ட கட்டுரைகளின் ஒரு சான்று. இளையராஜாவின் இசைப் பிரயோகங்களை அளவுகோலாகக் கொள்ளாமல், அரசியல் சார்புகளை மட்டும் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட பல கட்டுரைகளில் இதுவும் சேர்ந்துகொண்டது.

 3. satheeshprince April 17, 2013 at 11:22 PM Reply

  “He is the one who gve us songs like ‘Anne Anne Sippaayanne’ and expects us to treat as same as ‘Paadariyenm padippariyen..! – R. J…” As you know he is composing the song for Cinema, for the situation and character it should opt, the above song perfectly opt for the characters and the situation, we can’t put KJ Yesudas to sing a song “Mari Mari ninaye” for this situation…He has given better justification for that scene. He said he hears music from the barging dog…it means..what ever sound he hears he feels as music…who can listen like that…..thats why he is isai gnani..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s